பொழுதுபோக்கு

‘ஜெயிலர் 2’ படத்தின் ப்ரொமோ வீடியோ எப்படி இருக்கு?

‘கூலி’ படத்துக்குப் பிறகு மீண்டும் சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் ரஜினி நடிக்கும் ‘ஜெயிலர் 2’ படத்தின் ப்ரொமோ வீடியோவை படத்தயாரிப்பு நிறுவனம் வெளியிட்டுள்ளது.

நெல்சன் இயக்கத்தில் ரஜினி, சிவராஜ்குமார், மோகன்லால், ரம்யா கிருஷ்ணன் உள்ளிட்ட பலர் நடிப்பில் வெளியான படம் ‘ஜெயிலர்’.

இப்படத்துக்கு மாபெரும் வரவேற்பு கிடைத்தது. இதனைத் தொடர்ந்து இதன் 2-ம் பாகத்துக்கான கதையினை உருவாக்கி வந்தார் நெல்சன். தற்போது அதன் பணிகள் முடிவடைந்து மார்ச் மாதத்தில் இருந்து படப்பிடிப்புக்கு செல்லலாம் என முடிவு எடுத்துள்ளார்கள்.

தமிழ்நாடு, கேரளா, ஹைதராபாத், மும்பை உள்ளிட்ட பல மாநிலங்களில் இதன் படப்பிடிப்பு நடைபெறவுள்ளது. முதல் பாகத்தில் பணிபுரிந்த தொழில்நுட்ப கலைஞர்களே இதிலும் பணிபுரியவுள்ளார்கள். ‘ஜெயிலர் 2’ படத்தில் ரஜினியுடன் வேறு யாரெல்லாம் நடிக்கிறார்கள் என்பது விரைவில் தெரியவரும்.

 

(Visited 15 times, 1 visits today)

MP

About Author

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

பொழுதுபோக்கு

ஆஸ்கர் விருதை தட்டிச் சென்ற நாட்டு நாட்டு பாடல் – ரசிகர்கள் மகிழ்ச்சி

ஆர்.ஆர்.ஆர் திரைப்படத்தில் இடம்பெற்ற நாட்டு நாட்டு பாடலுக்கு ஆஸ்கார் விருது கிடைத்துள்ளது. சிறந்த பாடல் பிரிவில் அந்த பாடல் ஆஸ்கார் விருது வென்றுள்ளது. சினிமா உலகின் மிக
பொழுதுபோக்கு

பாண்டியர்களின் ஆட்டம் ஆரம்பம் : யாத்திசை படத்தின் முதல் நாள் வசூல் விபரம்!

  • April 23, 2023
பாண்டியர்களின் வீரவரலாற்றை சொல்லும் யாத்திசை திரைப்படம் நேற்று திரையறங்குகளில் வெளியாகி நல்ல விமர்சனத்தை பெற்று வருகிறது. அறிமுக இயக்குனர் தரணி ராசேந்திரன் இயக்கத்தில் புது முகங்களான சேயோன்