பாகிஸ்தானில் இரண்டு குழந்தைகளை கழுத்தை அறுத்து கொலை செய்த தாய்
நவாப்ஷாவில் ஒரு அதிர்ச்சியான சம்பவத்தில், ஒரு தாய் தனது இரண்டு குழந்தைகளின் கழுத்தை அறுத்து கொலை செய்துள்ளார்.
இந்த சோகமான சம்பவம் விமான நிலைய காவல் நிலைய எல்லையில் நடந்ததாக தெரிவிக்கப்பட்டுளள்து.
கோமல் ஷேக் என்ற தாய் காவலில் வைக்கப்பட்டார். முதற்கட்ட விசாரணையின் போது, தாய் தன் குழந்தைகளை தனி அறைகளில் கத்தியால் குத்தி கொன்றதை ஒப்புக்கொண்டதாக செய்திகள் தெரிவிக்கின்றன.
இந்த சம்பவம் குறித்து தகவல் கிடைத்ததும் போலீசார் மற்றும் மீட்பு குழுவினர் சம்பவ இடத்திற்கு வந்தனர். குழந்தைகளின் உடல்கள் பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு மாற்றப்படுள்ளது.
கொலைக்கான ஆயுதத்தை மீட்டுள்ள பொலிஸார், இது தொடர்பான மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
உயிரிழந்த குழந்தைகள் 2 வயது ஜைன் மற்றும் 4 வயது ரபியா என அடையாளம் காணப்பட்டதாக போலீசார் தெரிவித்தனர்.