ஆவா குழுவின் முக்கிய உறுப்பினர் கனடாவில் கைது
வடமாகாணத்தில் இயங்கிவரும் ‘ஆவா’ கும்பலின் தலைவன் என நம்பப்படும் நபர் ஒருவர் அண்மையில் ரொறன்ரோவில் கைது செய்யப்பட்டதாக கனேடிய ஊடகங்கள் தெரிவிக்கின்றன.
பிரசன்ன நல்லலிங்கம் என்ற அஜந்தன் சுப்ரமணியம் என்ற இந்த சந்தேக நபர் கைது செய்யப்பட்டதன் பின்னர் கொலைக் குற்றச்சாட்டுக்களை எதிர்கொள்வதற்காக பிரான்சுக்கு நாடு கடத்தப்படவுள்ளதாக உள்ளூர் ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
2022 செப்டம்பரில் பிரான்சில் அபிராமன் பாலகிருஷ்ணனை படுகொலை செய்தமை மற்றும் மற்றொரு நபரை கொலை செய்ய முயன்றதாக அஜந்தன் சுப்ரமணியம் என்கிற பிரசன்ன நல்லலிங்கம் என்ற இந்த சந்தேக நபர் மீது குற்றம் சாட்டப்பட்டது.
கனடாவின் நீதித்துறை கடந்த புதன் கிழமை நாடுகடத்தப்படுவதை உறுதி செய்தது.
32 வயதான இந்த சந்தேக நபர் 2021 ஆம் ஆண்டுக்கு பின்னர் இலங்கையில் இருந்து தப்பி அமெரிக்கா மற்றும் பிரான்ஸில் இருந்து கனடாவிற்கு வந்து கனேடிய பாதுகாப்பு படையினரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
2022 ஆம் ஆண்டு அபிராமன் பாலகிருஷ்ணன் கொல்லப்பட்ட போது, அஜந்தன் சுப்பிரமணியம் இந்த நாட்டில் நடந்த பல கொலைகள் மற்றும் குற்றங்களுக்காக கைது வாரண்ட் பிறப்பிக்கப்பட்ட ஒரு நபர் என்று கூறப்படுகிறது.