நீரில் மூழ்கிய உழவு இயந்திரம் – காணாமல் போன நான்கு மாணவர்களின் சடலம் மீட்பு
அம்பாறை, கார்தீவில் உழவு இயந்திரம் வெள்ளத்தில் சிக்கியதில் காணாமல் போன 6 மத்ரஸா மாணவர்களின் நான்கு பேரில் ஜனாசா மீட்கப்பட்டுள்ளன.
நேற்று முதல் இன்று வரை பொலிஸார், இராணுவம், கடற்படை மற்றும் பிரதேசவாசிகள் இணைந்து மீட்புப்பணியில் ஈடுபட்டிருந்தனர்.
எவ்வாறாயினும், காணாமற்போன ஏனைய இரண்டு மாணவர்கள், உழவு இயந்திரத்தின் சாரதி மற்றும் உதவியாளர் ஆகியோரைக் தேடும் பணி முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.
அம்பாறை மாவட்டம் காரைதீவு பொலிஸ் பிரிவிற்குட்பட்ட மாவடிப்பள்ளி சின்னப்பாலத்திற்கு அருகில் மாணவர்களை ஏற்றிச் சென்ற உழவு இயந்திரம் வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டதாக நேற்று (26) பிற்பகல் தெரிவிக்கப்பட்டது.
நிந்தவூர் காஷிபுல் உலூம் அறபுக் கல்லூரியிலிருந்து சம்மாந்துறைக்கு விடுமுறையில் சென்ற மாணவர்களை ஏற்றிச் சென்ற உழவு இயந்திரமே விபத்துக்குள்ளானது.
சீரற்ற காலநிலை காரணமாக பாடசாலை விடுமுறை வழங்கப்பட்டிருந்தது , அதற்குள் அம்பாறை கல்முனை பிரதான வீதி மற்றும் வெலியாய மாவடிப்பள்ளி பாலத்தின் இருபுறமும் மழைநீர் நிரம்பியிருந்தது.
இதன் காரணமாக சம்மாந்துறை பிரதேசத்தில் வசிக்கும் சிறுவர்கள் வீடுகளுக்கு செல்ல முடியாத நிலை ஏற்பட்டது.
அங்கு சம்மாந்துறை நோக்கி பயணித்த உழவு இயந்திரத்தில் 11 மாணவர்கள் ஏறி, மாணவர்களை ஏற்றிச் சென்ற உழவு இயந்திரம் வெள்ளம் சூழ்ந்த வீதியின் ஊடாக சென்று கொண்டிருந்த போது, எதிர்பாராதவிதமாக வெள்ளம் காரணமாக கவிழ்ந்தது.
உழவு இயந்திரத்தில் இருந்தவர்கள் நீரோட்டத்தில் அடித்துச் செல்லப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.
இருப்பினும், அவர்களில், அப்பகுதியில் உள்ள அதிவலு மின்கம்பத்தை பிடித்திருந்த 05 மாணவர்களை மீட்புக்குழுவினர் உயிருடன் மீட்டு அருகில் உள்ள வைத்தியசாலைகளுக்கு சிகிச்சைக்காக அழைத்து சென்றனர்.
மேலும் இந்த விபத்தில் 12 வயதுக்கும் 16 வயதுக்கும் இடைப்பட்ட 6 மாணவர்கள், உழவு இயந்திரத்தின் சாரதி மற்றும் அவருடன் பயணித்த மற்றுமொருவர் வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டு தற்போது காணாமல் போயுள்ளனர்.
இச்சம்பவத்தை அடிப்படையாகக் கொண்டு, பொலிஸ் ஊடகப் பேச்சாளரும், பிரதிப் பொலிஸ்மா அதிபருமான சட்டத்தரணி நிஹால் தல்துவ, இவ்வாறான சம்பவங்கள் தொடர்பில் பெற்றோர்களும் முதியவர்களும் கவனம் செலுத்த வேண்டுமென தெரிவித்துள்ளார்
மேலும், இதுபோன்ற சந்தர்ப்பங்களை குழந்தைகளுக்கு வழங்கக்கூடாது.
”அவர்களுக்கு பதை தெரியவில்லை என்றால், வெள்ளம் வந்தால், பாதையை கடக்க வேண்டாம். இந்த பாதையில் பலவிதமான எதிர்பாராத பள்ளங்கள் இருக்கலாம்.
சாலையின் சில பகுதிகள் உடைந்து இருக்கலாம்.பெரும்பாலும் குழந்தைகள் இப்படித்தான் பயணம் செய்கின்றனர். பெற்றோர்களும் பெரியவர்களும் இதில் கவனம் செலுத்த வேண்டாம் என பொலிஸ் ஊடகப் பேச்சாளரும், பிரதிப் பொலிஸ்மா அதிபருமான சட்டத்தரணி நிஹால் தல்துவ தெரிவித்தார்.