லொஹான் ரத்வத்தவின் விளக்கமறியல் நீடிப்பு
முன்னாள் இராஜாங்க அமைச்சர் லொஹான் ரத்வத்த மற்றும் அவரது மனைவி ஆகியோர் எதிர்வரும் 18ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.
நுகேகொட நீதவான் நீதிமன்றத்தினால் இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
மிரிஹான பகுதியில் உள்ள அவரது மனைவியின் வீட்டிலிருந்து இலக்க தகடு இல்லாத சொகுசு ரக வாகனம் ஒன்று மீட்கப்பட்டமை தொடர்பில் லொஹான் ரத்வத்த கடந்த 31ஆம் திகதி கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த நிலையில் அவரது விளக்கமறியல் நீடிக்கப்பட்டுள்ளது.
(Visited 2 times, 1 visits today)