இதுதான் LCU வின் கடைசி படமா? ரசிகர்களுக்கு ஷாக்
மாநகரம், கைதி, மாஸ்டர், விக்ரம், லியோ போன்ற சிறந்த படங்களை இயக்கி தமிழ் சினிமாவில் முன்னணி இயக்குனர்களில் ஒருவராக வலம் வருபவர் லோகேஷ் கனகராஜ்.
தற்போது, ரஜினிகாந்தின் 171-வது படமான ‘கூலி’ படத்தை இயக்கி வருகிறார். ‘லோகேஷ் கனகராஜ் சினிமாட்டிக் யுனிவர்ஸ்’ அதாவது எல்சியு என்ற ஒரு கான்செப்ட்டை தொடங்கி அவர் இயக்கும் படங்களை அதில் சேர்த்து வருகிறார்.
இதில், இவர் இயக்கத்தில் வெளியான கைதி, விக்ரம், லியோ போன்ற படங்கள் அடங்கும். அதை தொடர்ந்து, லிஸ்டில் லோகேஷ் தயாரிப்பில் உருவாகி வரும் ‘பென்ஸ்’ திரைப்படமும் இணைந்துள்ளது.
அதில், “நான் கூலி படத்திற்கு பிறகு கைதி 2 திரைப்படத்தையும் ரோலக்ஸ் திரைப்படத்தையும் இயக்க உள்ளேன். அதன் பின், விக்ரம் 2 படத்தை இயக்கவுள்ளேன். இது தான் என் இயக்கத்தில் வெளியாகும் கடைசி LCU படம் என நினைக்கிறேன்” என்று கூறியுள்ளார்.