பிரித்தானியா நோக்கி பயணித்த அகதிகள் – 160 பேரை மீட்ட அதிகாரிகள்
பிரான்ஸிலிருந்து பிரித்தானியா நோக்கி பயணித்த அகதிகள் தடுத்து நிறுத்தப்பட்டுள்ளனர்.
அதற்கமைய, 160 பேர் மீட்கப்பட்டுள்ளனர். ஒக்டோபர் 31 – நவம்பர் 1 ஆம் திகதிகளுக்கு உட்பட்ட இரவில் இச்சம்பவம் இரு மாவட்டங்களில் இடம்பெற்றுள்ளது.
முதலாவது சம்பவம் நோர்ட் மாவட்ட கடற்கரை வழியாக படகொன்றில் 57 பேர் பயணித்த நிலையில் அவர்களை பிரெஞ்சு கடற்படையினர் மீட்டுள்ளனர்.
அச்சம்பவம் இடம்பெற்ற அதேவேளை, மற்றுமொரு கடற்பிராந்தியம் வழியாக இரண்டு படகுகளில் 103 பேர் பயணித்துள்ளனர். அவர்களை பிரித்தானிய கடற்படையினர் மீட்டுள்ளனர்.
இவ்வருடத்தின் ஆரம்பத்தில் இருந்து இதுவரை 60 அகதிகள் இதுபோன்ற ஆபத்தான கடற்பயணங்களில் பலியாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது.
(Visited 1 times, 1 visits today)