பொழுதுபோக்கு

‘கயல்’ பிரபலங்கள் ஒரு நாளைக்கு வாங்கும் சம்பளம் எவ்வளவு தெரியுமா?

சன் டிவியில் ஃபேமிலி டிராமாவாக ஒளிபரப்பாகி வரும் சீரியல் ‘கயல்’. இந்த தொடரை பி.செல்வம் என்பவர் இயக்கி வரும் நிலையில், ‘யாரடி நீ மோகினி’, ‘கல்யாண முதல் காதல் வரை’ போன்ற சீரியல்களில் நடித்த சைத்ரா ரெட்டி ஹீரோயினாக நடித்து வருகிறார். இவருக்கு ஜோடியாக ‘ராஜா ராணி 2’ சீரியலில் நடித்த சஞ்சீவ் கார்த்திக் நடிக்கிறார்.

2021 ஆம் ஆண்டு துவங்கப்பட்ட இந்த சீரியல், தற்போது ஆயிரம் எபிசோடுகளை கடந்து வெற்றிகரமாக ஒளிபரப்பாகி வருகிறது.

பரபரப்பான திருப்பங்களுடன் ஒளிபரப்பாகி வரும் இந்த சீரியலில், முக்கிய பிரபலங்கள் வாங்கும் சம்பளம் குறித்த தகவல் தற்போது வெளியாகி உள்ளது. அதன்படி இந்த சீரியலுக்கு தூணாக இருக்கும் கயல் கதாபாத்திரத்தில் நடித்து வரும் சைத்ரா ரெட்டி ஒரு எபிசோடுக்கு ரூபாய் 25 ஆயிரம் முதல் ரூபாய் 30-ஆயிரம் வரை சம்பளமாக பெறுகிறார்.

இவரைத் தொடர்ந்து, எழில் கதாபாத்திரத்தில் நடித்து வரும் சஞ்சீவ்… ரூபாய் 20 ஆயிரம் முதல் 25 ஆயிரம் வரை பெறுவதாக கூறப்படுகிறது.

See also  மேஜர் முகுந்தாக சிவகார்த்திகேயன்... கண் கலங்க வைக்கும் அமரன் ட்ரெய்லர்

கதாநாயகியை விட கதாநாயகன் கதாபாத்திரத்தில் நடித்து வரும் சஞ்சீவி சம்பளம் குறைவு என்பது இதன் மூலம் தெரிகிறது.

விக்னேஷ் கதாபாத்திரத்தில் நடித்து வரும் கோபி, அவருடைய மனைவி தேவியாக நடித்து வரும் நிலா கிரேசி… ஆகியோர் ஒரு நாளைக்கு 10 ஆயிரம் ரூபாய் சம்பளமாக பெறுகிறார்கள்.

அதேபோல் மூர்த்தி, தர்மலிங்கம், வடிவு ,கதாபாத்திரங்களில் நடித்து வரும் பிரபலங்கள் 12 முதல் 15 ஆயிரம் வரை சம்பளமாக வாங்குகின்றனர்.

காமாட்சி, ராஜலட்சுமி, சிவசங்கரி, ஆனந்தி, கதாபாத்திரத்தில் நடித்துவரும் பிரபலங்கள் ரூபாய் 10 ஆயிரம் முதல் 12 ஆயிரம் வரை சம்பளமாக பெறுகின்றனர். இவர்களை தவிர அன்பு, ஆறுமுகம், தனம், ஷாலினி, ஆகிய கதாபாத்திரங்களில் நடித்து வருபவர்கள் ரூபாய் 5 ஆயிரம் முதல் 8 ஆயிரம் வரை சம்பளம் பெற்று வருவதாக கூறப்படுகிறது. கயல் சீரியல் பிரபலங்களின் இந்த லேட்டஸ்ட் சம்பள பட்டியல் சமூக வலைத்தளத்தில் வைரலாகி வந்தாலும், இதுகுறித்த எந்த ஒரு அதிகார பூர்வ தகவலும் வெளியாகவில்லை.

See also  2000 கோடியை தட்டித்தூக்குமா "கங்குவா"?? எந்தவிதமான மாற்றுக் கருத்தும் இல்லை

(Visited 1 times, 1 visits today)
Avatar

MP

About Author

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

பொழுதுபோக்கு

ஆஸ்கர் விருதை தட்டிச் சென்ற நாட்டு நாட்டு பாடல் – ரசிகர்கள் மகிழ்ச்சி

ஆர்.ஆர்.ஆர் திரைப்படத்தில் இடம்பெற்ற நாட்டு நாட்டு பாடலுக்கு ஆஸ்கார் விருது கிடைத்துள்ளது. சிறந்த பாடல் பிரிவில் அந்த பாடல் ஆஸ்கார் விருது வென்றுள்ளது. சினிமா உலகின் மிக
பொழுதுபோக்கு

பாண்டியர்களின் ஆட்டம் ஆரம்பம் : யாத்திசை படத்தின் முதல் நாள் வசூல் விபரம்!

  • April 23, 2023
பாண்டியர்களின் வீரவரலாற்றை சொல்லும் யாத்திசை திரைப்படம் நேற்று திரையறங்குகளில் வெளியாகி நல்ல விமர்சனத்தை பெற்று வருகிறது. அறிமுக இயக்குனர் தரணி ராசேந்திரன் இயக்கத்தில் புது முகங்களான சேயோன்

You cannot copy content of this page

Skip to content