பொழுதுபோக்கு

அமரன் படத்திற்காக சாய் பல்லவி வாங்கிய சம்பளம் எவ்வளவு தெரியுமா?

தென்னிந்திய சினிமாவில் முக்கிய கதாநாயகிகளில் ஒருவர் நடிகை சாய் பல்லவி. கவர்ச்சியே காட்டாமல் நடித்து சாதித்தவர்களின் வரிசையில் இவரையும் உள்ளடக்கலாம்.

இவர் தற்போது நடித்துள்ள திரைப்படம் அமரன். இப்படத்தில் சிவகார்த்திகேயன் கதாநாயகனாக நடிக்க ராஜ்குமார் பெரியசாமி இயக்கியுள்ளார்.

மேஜர் முகுந்த் வரதராஜனின் வாழ்க்கை வரலாறு தான் அமரன் திரைப்படம். இப்படம் வருகிற 31ஆம் தேதி தீபாவளி பண்டிகைக்கு வெளிவருகிறது. இப்படத்தை உலகநாயகன் கமல் ஹாசன் தனது ராஜ் கமல் நிறுவனம் மூலம் தயாரித்துள்ளார்.

நேற்று இப்படத்தின் ட்ரைலர் வெளிவந்து நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. இந்த ட்ரைலர் படத்தின் மீது இருந்த எதிர்பார்ப்பை இன்னும் அதிகரித்துள்ளது என்று தான் சொல்லவேண்டும்.

இந்த நிலையில், இப்படத்தில் முகுந்த் வரதராஜனின் மனைவி இந்து ரெபேக்கா வர்கீஸ் கதாபாத்திரத்தில் தான் நடிகை சாய் பல்லவி நடித்துள்ளார். இந்த கதாபாத்திரத்தில் நடிப்பதற்காக அவர் வாங்கிய சம்பளம் குறித்து தகவல் வெளியாகியுள்ளது.

அதன்படி, இப்படத்தில் நடிக்க நடிகை சாய் பல்லவி ரூ. 3 கோடி சம்பளம் வாங்கியுள்ளார் என சொல்லப்படுகிறது. ஆனால், இது எந்த அளவிற்கு உண்மையான தகவல் என தெரியவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

MP

About Author

You may also like

பொழுதுபோக்கு

ஆஸ்கர் விருதை தட்டிச் சென்ற நாட்டு நாட்டு பாடல் – ரசிகர்கள் மகிழ்ச்சி

ஆர்.ஆர்.ஆர் திரைப்படத்தில் இடம்பெற்ற நாட்டு நாட்டு பாடலுக்கு ஆஸ்கார் விருது கிடைத்துள்ளது. சிறந்த பாடல் பிரிவில் அந்த பாடல் ஆஸ்கார் விருது வென்றுள்ளது. சினிமா உலகின் மிக
பொழுதுபோக்கு

பாண்டியர்களின் ஆட்டம் ஆரம்பம் : யாத்திசை படத்தின் முதல் நாள் வசூல் விபரம்!

  • April 23, 2023
பாண்டியர்களின் வீரவரலாற்றை சொல்லும் யாத்திசை திரைப்படம் நேற்று திரையறங்குகளில் வெளியாகி நல்ல விமர்சனத்தை பெற்று வருகிறது. அறிமுக இயக்குனர் தரணி ராசேந்திரன் இயக்கத்தில் புது முகங்களான சேயோன்
error: Content is protected !!