இலங்கையில் இறக்குமதி செய்யப்படும் உணவு பொருட்களுக்கான வரி அதிகரிப்பு!
இலங்கையில் உருளைக்கிழங்கு மீதான விசேட இறக்குமதி வரியை 10 ரூபாவினால் அதிகரிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
அத்துடன், ஒரு கிலோ வெங்காயத்திற்கான வரியை 20 ரூபாவால் அதிகரிக்க நிதியமைச்சு நடவடிக்கை எடுத்துள்ளது.
இதன்படி உருளைக்கிழங்கு மீதான இறக்குமதி வரி 50 ரூபாவில் இருந்து 60 ரூபாவாக 10 ரூபாவினாலும், இறக்குமதி செய்யப்படும் வெங்காயத்திற்கான வரி 10 ரூபாவில் இருந்து 30 ரூபாவாகவும் அதிகரிக்கப்பட்டுள்ளது.
இதன்காரணமாக சந்தைகளில் வெங்காயம் மற்றும் உருளைக்கிழங்கின் விலைகள் அதிகரிக்க வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது.
(Visited 15 times, 1 visits today)