ஐரோப்பா

அயர்லந்திலிருந்து பயணத்தை ஆரம்பித்த உல்லாசக் கப்பல் – 3.5 ஆண்டுகளுக்கு பயணம்

அயர்லந்தின் பெல்ஃபஸ்ட் (Belfast) நகரிலிருந்து மூன்றரை ஆண்டுகளுக்கு உலகைச் சுற்றவிருக்கும் முதல் உல்லாசக் கப்பலான Odyssey புறப்பட்டுள்ளது.

கடந்த மே மாதம் அந்நகரிலிருந்து புறப்படவிருந்த அந்தக் கப்பல் திடீரெனப் பழுதடைந்தது. தற்போது அவை சரிசெய்யப்பட்டுவிட்டன.

கப்பலை இயக்க அனுமதி கிடைத்துள்ளதாக Villa Vie Residences நிறுவனம் தெரிவித்தது. இதையடுத்து 650 பயணிகளை ஏற்றக்கூடிய Odyssey சொகுசுக் கப்பலின் பயணம் தொடங்கியுள்ளது.

7 கண்டங்களையும் 425 துறைமுகங்களையும் கடந்து உலகம் முழுதும் சுற்றிவர அதற்கு 1,301 நாள்களாகும். கப்பல் சிங்கப்பூர் வரை பயணம் செய்யும்.

பயணிகளில் சிலர் கப்பலைத் தங்களது நிரந்தர இல்லமாக மாற்றிக்கொள்ள விரும்புகின்றனர். பயணம் 4 மாதங்களுக்குத் தாமதமடைந்தாலும் அடுத்த மூன்றரை ஆண்டுகளுக்கு உல்லாசமாக உலகைச் சுற்றி வரப்போவதை எண்ணி மகிழ்ச்சியடைவதாக தெரிவித்துள்ளனர்.

(Visited 39 times, 1 visits today)

SR

About Author

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

ஐரோப்பா செய்தி

சாலையோர கடையில் தேநீர் – சாதாரண நபராக மாறிய ஜெர்மனி சான்ஸ்லர்

இந்தியாவுக்கு விஜயம் செய்துள்ள ஜெர்மனி சான்ஸ்லர் ஓலப் ஸ்கோல்ஸ் டில்லியில் உள்ள சாலையோர தேநீர்கடை ஒன்றில் தேநீர் அருந்திய புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. அரசு
ஐரோப்பா செய்தி

ஜெர்மனியில் விசா உள்ளிட்ட ஒட்டுமொத்த சட்டதிட்டத்திலும் மாற்றம்

ஜெர்மனியில் விசா வழங்கும் முறையை மட்டும் அல்லாமல் ஒட்டுமொத்த சட்டதிட்டத்தையும் நவீனப்படுத்த உத்தேசித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. ஜெர்மனி சான்ஸ்லர் இதனை தெரிவித்துள்ளார். ஐரோப்பாவிலேயே மிகப்பெரிய பொருளாதார நாடாக இருக்கும்