இலங்கை

இலங்கை நாடாளுமன்ற தேர்தல் : நிதி விடுவிக்கும் உரிமத்தில் கையொப்பமிட்டார் ஜனாதிபதி!

2024ஆம் ஆண்டு நடைபெறவுள்ள நாடாளுமன்றத் தேர்தலுக்காக செலவிடப்படும் என எதிர்பார்க்கப்படும் 11 பில்லியன் ரூபாவை விடுவிக்கும் உரிமத்தில் ஜனாதிபதி கையொப்பமிட்டுள்ளதாக தேர்தல் ஆணையாளர் நாயகம் சமன் ஸ்ரீ ரத்நாயக்க தெரிவித்துள்ளார்.

எதிர்வரும் பொதுத் தேர்தலுக்கான ஆரம்பக்கட்ட பணிகள் தொடர்பிலான கலந்துரையாடலின் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

நேற்று (28) பாராளுமன்றத் தேர்தல் தொடர்பான பூர்வாங்க விடயங்கள் தொடர்பான இரண்டு கலந்துரையாடல்கள் ராஜகிரியவில் உள்ள தேர்தல்கள் பொதுச் செயலாளர் அலுவலகத்தில் இடம்பெற்றன.

மாவட்ட செயலாளர்கள் மற்றும் பிரதி மாவட்ட செயலாளர்களின் பங்குபற்றுதலுடன் முதலாவது கலந்துரையாடல் இடம்பெற்றதுடன் தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் திரு.ஆர்.எம்.ஏ.எல்.

இதேவேளை, மாவட்ட தேர்தல் அதிகாரிகள், உதவி ஆணையாளர்கள், பிரதி தேர்தல் ஆணையாளர்கள் மற்றும் தேர்தல்கள் ஆணைக்குழுவிற்கும் இடையிலான மற்றுமொரு சந்திப்பு நேற்று பிற்பகல் இடம்பெற்றது.

VD

About Author

You may also like

அரசியல் இலங்கை

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதிய உதவிச்செயற்திட்டம் மார்ச் 20 ஆம் திகதி பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிக்கப்படும்

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதியத்தின் உதவிச்செயற்திட்டத்தை எதிர்வரும் 20 ஆம் திகதி நாணய நிதியப் பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிப்பதற்கு எதிர்பார்த்திருப்பதாக சர்வதேச நாணய நிதியத்தின் நிறைவேற்றுப்பணிப்பாளர் கிறிஸ்டலினா
இலங்கை செய்தி

இலங்கையில் பெண்களுக்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரிப்பு!

இலங்கையில் பெண்களுக்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரிப்பு! இலங்கையில் பெண்களிற்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. பெண் பாராளுமன்ற உறுப்பினர்கள் குழு பெண்களிற்கு எதிரான சைபர்