ஆசியா

வியட்னாமின் ஹோ சி மின் சிட்டி நகரில் தட்டம்மைத் தொற்று: மூவர் பலி!

வியட்னாமின் ஹோ சி மின் சிட்டி நகரில் தட்டம்மைக் கிருமிப் பரவல் ஏற்பட்டுள்ளது.அந்நகரில் முதன்முறையாக தட்டம்மைக் கிருமிப் பரவல் ஏற்பட்டிருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது. தட்டம்மைக் கிருமித்தொற்றுக்கு ஆளான மூவர் உயிரிழந்து விட்டதாகவும் உள்ளூர் ஊடகங்கள் தெரிவித்தன.

அதனைத் தொடர்ந்து ஒன்றிலிருந்து ஐந்து வயதுக்கு உட்பட்ட சிறுவர்கள் கூடுதலானோருக்குத் தட்டம்மைத் தடுப்பூசி போடும் திட்டத்தை ஹோ சி மின் சிட்டி தொடங்கும் என்று வியட்னாம் செய்தி நிறுவனம் தெரிவித்தது. ஏற்கெனவே அந்தத் தடுப்பூசியைப் போட்டுக்கொண்டோருக்கும் இது பொருந்தும் என்றும் தெரிவிக்கப்பட்டது.

தற்போதைய தட்டம்மைக் கிருமிப் பரவல் எவ்வளவு மோசமடையும் என்பதைப் பொறுத்து தடுப்பூசி கூடுதல் வயதான சிறுவர்களுக்கும் போடப்படலாம் என்று விஎன்எக்ஸ்பிரஸ் குறிப்பிட்டது.

மருத்துவ நிலையங்கள் தட்டம்மைத் தொற்றை அடையாளம் காண்பதற்கான பரிசோதனைகளுக்கென சில பகுதிகளை ஒதுக்கும். காய்ச்சலுடன் தோலில் தடிப்பு ஏற்பட்டோருக்கு 24 மணிநேரத்துக்குள் பரிசோதனை மேற்கொள்ளப்படும் என்று தெரிவிக்கப்பட்டது.

இவ்வாண்டு தொடக்கத்திலிருந்து ஆகஸ்ட் மாதம் 22ஆம் திகதி வரை ஹோ சி மின் சிட்டியில் 353 தட்டம்மைத் தொற்றுச் சம்பவங்கள் பதிவாகியுள்ளன. 2021லிருந்து 2023ஆம் ஆண்டு வரை அந்நகரில் ஒருவர் மட்டுமே தட்டம்மைத் தொற்றுக்கு ஆளானார் என்று ஹோ சி மின் சிட்டியின் நோய்த் தடுப்பு நிலையம் தெரிவித்தது.

சென்ற வாரம் அந்நகரில் 85 பேர் காய்ச்சலுடன் தோல் தடிப்புக்கு ஆளாயினர். அவர்களில் 20 பேருக்குத் தட்டம்மைத் தொற்று ஏற்பட்டது உறுதிப்படுத்தப்பட்டது.

Mithu

About Author

You may also like

ஆசியா செய்தி

கொரிய நாட்டவர் போல் தெரிவதற்காக நபர் ஒருவர் செய்த அதிர்ச்சி செயல்

தாய்லந்தைச் சேர்ந்த போதைப்பொருள் கடத்தல்காரர் ஒருவரின் செயற்பாடு அதிர்ச்சியை ஏற்பட்டுள்ளது. அவர் கொரியாவைச் சேர்ந்த கவரத்தக்க நபர் போல் தோற்றமளிக்க பல்வேறு ஒட்டுறுப்பு அறுவைச் சிகிச்சைகளைச் (plastic
ஆசியா செய்தி

25 போர் விமானங்கள், 03 போர் கப்பல்கள் மூலம் தைவானை ஊடுறுத்த சீனா!

வொஷிங்கடனுக்கும் பீஜிங்கிற்கும் இடையிலான பதற்றங்கள் அதிகரித்துள்ள நிலையில், சீனா இன்றைய தினம் தைவானுக்கு தனது 25 போர் விமானங்கள் மற்றும் மூன்று போர்கப்பல்களை அனுப்பியதாக பாதுகாப்பு அமைச்சகம்