தமிழ்நாடு

நகைச்சுவை நடிகர் பிஜிலி ரமேஷ் காலமானார்

யூடியூப் சேனல் மூலமாக பிரபலமாகி அதை தொடர்ந்து சினிமாவில் நடித்து வந்த பிஜிலி ரமேஷ் உடல்நலக் குறைவு காரணமாக இன்று காலமானார்.

யூடியூப் சேனல் ஒன்று நடத்திய பிராங்க் ஷோ மூலமாக மக்கள் மத்தியில் மிகவும் பிரபலமானார் பிஜிலி ரமேஷ். ரஜினி தீவிர ரசிகர் என்றும் இவரது பேச்சு மற்றும் முக பவானைகள் ரசிகர்களிடம் தனிகவனம் பெற்றது.

இதை தொடர்ந்து சினிமாவில் நடிக்கவும் இவருக்கு வாய்ப்பு கிடைத்தது.

பொன்மகள் வந்தாள், நட்பே துணை, ஆடை, கோமாளி உள்ளிட்ட படங்களில் நடித்து சினிமாவில் தனக்கென இடத்தை தக்கவைத்தார். ஆனால் மதுப்பழக்கம் காரணமாக இவரது உடல்நிலை மோசமடைந்தது.

நடிகர் பிஜிலி ரமேஷ் உடல்நலக் குறைவு காரணமாக கடந்த சில நாட்களாக மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பெற்று வந்தார்.

இந்நிலையல் சிகிச்சை பலனின்றி இன்று காலை உயிரிழந்தார். இவரது இறுதி சடங்கு இன்று மாலை 5 மணிக்கு எம்.ஜி.ஆர் நகரில் உள்ள அவரது இல்லத்தில் நடைபெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

(Visited 6 times, 1 visits today)
Avatar

SR

About Author

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

தமிழ்நாடு

தமிழகத்தில் நாளுக்கு நாள் கொரோனாவின் தாக்கம்

தமிழகத்தில் நாளுக்கு நாள் கொரோனாவின் தாக்கம் கணிசமாக அதிகரித்து வரும் நிலையில் ராணிப்பேட்டை மாவட்டம் வாலாஜாபேட்டை அரசு தலைமை மருத்துவமனையில் கொரோனா  தொற்று முன்னேற்பாடு சிகிச்சை பணிகள்
தமிழ்நாடு

பள்ளிக்கு அனுப்ப பெற்றோர்கள் மறுப்பு

நெமிலி அடுத்த கீழ்வீதி கிராமத்தில் புதிய பள்ளி கட்டிடம் கட்டித் தராததை கண்டித்து மாணவர்களை பள்ளிக்கு அனுப்ப பெற்றோர்கள் மறுப்பு. மாணவர்கள் இன்றி வெறிச்சோடி காணப்படும் ஆதிதிராவிடர்

You cannot copy content of this page

Skip to content