அரசியல் வாழ்க்கையில் தான் எடுத்த சிறந்த முடிவை வெளிப்படுத்திய அமெரிக்க ஜனாதிபதி
கமலா ஹாரிஸை ஜனாதிபதி வேட்பாளராக முன்னிறுத்தியது தனது அரசியல் வாழ்க்கையில் தான் எடுத்த சிறந்த முடிவு என்று அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன் தெரிவித்துள்ளார்.
சிகாகோவில் ஆரம்பமான ஜனநாயகக் கட்சியின் தேசிய மாநாட்டில் உரையாற்றும் போதே அமெரிக்க ஜனாதிபதி இதனைத் தெரிவித்துள்ளார்.
ஜனாதிபதி தேர்தலில் இருந்து விலக முடிவு செய்த பிறகு ஜோ பைடன் தனது ஆதரவாளர்களிடம் பேசும் கடைசி நேரமாக இது கருதப்படுகிறது.
ஜோ பைடன் அமெரிக்காவிற்கு சிறந்ததை செய்ததாக கூறினார்.
அப்போது, உணர்ச்சிவசப்பட்ட அமெரிக்க ஜனாதிபதியை அவரது மகளும், ஜனநாயக கட்சி ஜனாதிபதி வேட்பாளர் கமலா ஹாரிசும் கட்டித்தழுவி, ஜோ பைடனை நன்றியுடன் வரவேற்றது பலரது கவனத்தையும் ஈர்த்தது.
கட்சி மாநாட்டில் உரையாற்றிய கமலா ஹாரிஸ், நான் எப்போதும் ஜோ பைடனுக்குக் கடமைப்பட்டிருக்கிறேன் என்றார்.
(Visited 7 times, 1 visits today)