பொழுதுபோக்கு

மகளின் அழுத்தம் – சூப்பர் ஹிட் படத்தின் Part – 2 க்கு பிளான் போடும் அர்ஜூன்

அர்ஜுன் மற்றும் தம்பி ராமையா இருவரும் சமீபத்தில் சம்பந்தி ஆனார்கள். இவர்கள் வாரிசுகளுக்கு தடபுடலாக திருமணம் செய்து அசத்தினார்கள்.

இது ஒரு காதல் கல்யாணம். கெருகம்பாக்கத்தில் உள்ள அனுமன் கோவிலில் இவர்களது கல்யாணம் மிகச் சிறப்பாக நடைபெற்றது.

தம்பி ராமையா மகன் உமாபதி ராமையா மற்றும் அர்ஜுனின் மகள் ஐஸ்வர்யா இருவரும் கடந்த இரண்டு வருடங்களாக காதல் உறவில் இருந்து வந்தார்கள்.

உமாபதி அர்ஜுன் போல் பாடி பிட்னெஸ் கடைபிடிக்கும் நபராம். நான்கு படங்களில் நடிக்கவும் செய்திருக்கிறார். இதனால் அர்ஜுனுக்கு மிகவும் நெருங்கிய நபராக மாறினார்.

ஏற்கனவே மருமகன் உமாபதிக்கு நடிப்பும் வரும் என்பதால் இப்பொழுது அர்ஜுன் அவரை வைத்து இரண்டாம் பாகம் படம் ஒன்றை எடுக்கப் போகிறாராம். அர்ஜுன் மற்றும் சிம்ரன் நடிப்பில் 2002ஆம் ஆண்டு வெளிவந்த படம் ஏழுமலை.

இந்த படம் அப்பொழுது பிளாக்பஸ்டர் ஹிட் அடித்தது. தற்சமயம் அதன் இரண்டாம் பாகத்தை எடுக்க திட்டமிட்டுள்ளார்.

அர்ஜுனின் மருமகன் உமாபதி, ஆதாங்கப்பட்டது மகாஜனங்களே, மணியார் குடும்பம், திருமணம், தண்ணி வண்டி போன்ற நான்கு படங்களில் நடித்துள்ளார் இதனால் அவரை வைத்து ஏழுமலை படத்தின் இரண்டாம் பாகத்தை எடுக்க போகிறாராம் ஆக்சன் கிங். இதற்கு மகள் ஐஸ்வர்யா கொடுத்த அழுத்தம் தான் முக்கிய காரணமாம்.

(Visited 4 times, 1 visits today)

MP

About Author

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

பொழுதுபோக்கு

ஆஸ்கர் விருதை தட்டிச் சென்ற நாட்டு நாட்டு பாடல் – ரசிகர்கள் மகிழ்ச்சி

ஆர்.ஆர்.ஆர் திரைப்படத்தில் இடம்பெற்ற நாட்டு நாட்டு பாடலுக்கு ஆஸ்கார் விருது கிடைத்துள்ளது. சிறந்த பாடல் பிரிவில் அந்த பாடல் ஆஸ்கார் விருது வென்றுள்ளது. சினிமா உலகின் மிக
பொழுதுபோக்கு

பாண்டியர்களின் ஆட்டம் ஆரம்பம் : யாத்திசை படத்தின் முதல் நாள் வசூல் விபரம்!

  • April 23, 2023
பாண்டியர்களின் வீரவரலாற்றை சொல்லும் யாத்திசை திரைப்படம் நேற்று திரையறங்குகளில் வெளியாகி நல்ல விமர்சனத்தை பெற்று வருகிறது. அறிமுக இயக்குனர் தரணி ராசேந்திரன் இயக்கத்தில் புது முகங்களான சேயோன்