ஆஸ்திரேலியாவிற்கு புதிதாக குடியேறிய இளைஞனுக்கு சிறுமியால் நேர்ந்த கதி
ஆஸ்திரேலியா – குயின்ஸ்லாந்து Point Vernon பகுதியில் உள்ள கேரவன் பூங்காவில் 24 வயது இளைஞன் கத்தியால் குத்திக் கொல்லப்பட்ட சம்பவம் தொடர்பில் 14 வயது சிறுமி பொலிஸ் காவலில் வைக்கப்பட்டுள்ளார்.
குறித்த இளைஞன் குறித்த சந்தேகத்திற்கிடமான சிறுமியால் கத்தியால் குத்தி கொல்லப்பட்டதை மற்றுமொரு சிறுமி பூங்காவில் பார்த்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
செயல் ஆய்வாளர் கிரேக் மான்ஸ்ஃபீல்ட், இந்தச் சம்பவத்தைச் சுற்றி பல சந்தேகத்திற்கிடமான சூழ்நிலைகள் இருப்பதாகவும், கொலைக் குற்றச்சாட்டில் தொடர்புடையதாக நம்பப்படுவதாகவும் கூறினார்.
14 வயதுடைய இந்த இரண்டு சிறுமிகளும் இந்த இளைஞனுடன் இருந்ததற்கான காரணம் குறித்தும் பொலிஸாரின் கவனம் செலுத்தப்பட்டுள்ளது.
மேலும், உயிரிழந்த இளைஞனுக்கும் 14 வயது சிறுமிக்கும் இடையில் ஏதாவது தொடர்பு இருந்திருக்கலாம் என சந்தேகிக்கும் பொலிஸார், கொலைக்கு சில மணித்தியாலங்களுக்கு முன்னர் அவர்கள் சந்தித்துக் கொண்டதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
குறித்த இளைஞன் அண்மையில் ஆஸ்திரேலியாவிற்கு குடிபெயர்ந்துள்ளதாக பொலிஸ் பரிசோதகர் தெரிவித்துள்ளார்.
சந்தேகத்திற்கிடமான சிறுமி நாளை சிறுவர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படவுள்ளதுடன், இந்த சம்பவம் தொடர்பில் தகவல் தெரிந்தவர்கள் தமக்கு அறிவிக்குமாறு பொலிஸார் கோரியுள்ளனர்.