பொலிவியாவில் நடந்த சாலை விபத்தில் 22 பேர் உயிரிழப்பு
பொலிவியன் ஆண்டிஸில் உள்ள நெடுஞ்சாலையில் டிரக்கும் பேருந்தும் நேருக்கு நேர் மோதியதில் 22 பேர் கொல்லப்பட்டனர் மற்றும் 16 பேர் காயமடைந்தனர்.
இறந்தவர்களில் 14 பேர் இதுவரை அடையாளம் காணப்பட்டுள்ளனர் என்று காவல்துறை தெரிவித்துள்ளது.
அவர்களில் குறைந்தது ஒரு சிலி நாட்டவர் இருப்பதாக சிலியின் வெளியுறவு அமைச்சகம் தெரிவித்துள்ளது.
முன்னதாக, இறந்தவர்களில் இரு வாகனங்களின் ஓட்டுநர்களும் உள்ளடங்குவதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.
பொலிவியாவின் படகாமாயா நகரத்திற்கும் வடக்கு சிலியில் உள்ள டாம்போ கியூமாடோ நகரத்திற்கும் இடையிலான சாலையில் இந்த விபத்து நடந்துள்ளது.
இரு தென் அமெரிக்க நாடுகளை இணைக்கும் பரபரப்பான வணிக மற்றும் சுற்றுலா பாதையில் சிலியை நோக்கி பேருந்து சென்று கொண்டிருந்தது.
முதற்கட்ட விசாரணையில், ஒரு வாகனத்தை முந்திச் செல்ல முயன்றபோது, எதிர் பாதையில் டிரக் கடந்து சென்றது தெரியவந்ததாக போக்குவரத்து அதிகாரி நிலோ டோரிகோ தெரிவித்தார்.