கடுமையான புற்றுநோயால் பாதிக்கப்பட்டுள்ள கஜேந்திரகுமார் பொன்னம்பலம்
தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான கஜேந்திரகுமார் பொன்னம்பலம் கடுமையான நோயினால் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் அவரது உடல்நிலை நாளுக்கு நாள் மோசமடைந்து வருவதாகவும் செய்திகள் வெளியாகியுள்ளன.
இந்நிலைமையினால் நாடாளுமன்ற அமர்வுகளில் பங்குபற்ற முடியாத நிலையில் மூன்று மாத காலத்திற்கு விடுமுறை கோரியுள்ளதாகவும் அதற்கு அங்கீகாரம் கிடைத்துள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
நாடாளுமன்ற உறுப்பினர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் சுகவீனமுற்றிருப்பதால் கட்சியின் தலைமைப் பொறுப்பும் நிர்வாகப் பொறுப்பும் கட்சியின் மற்றுமொரு உறுப்பினரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.
கடுமையான நோயினால் பாதிக்கப்பட்டுள்ள அவர் தற்போது வெளிநாட்டில் தங்கியிருந்து சிகிச்சைப் பெற்றுவருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
(Visited 6 times, 1 visits today)