ஆசியா செய்தி

உலகின் முன்னணி நிறுவனம் இந்துஜா குழும உறுப்பினர்களுக்கு சிறைத்தண்டனை

உலகின் முன்னணி நிறுவனங்களில் ஒன்றான இந்துஜா குழுமத்தின் தலைவர் பிரகாஷ் இந்துஜா, அவரது மனைவி கமால் இந்துஜா, மகன் அஜய் மற்றும் மருமகள் நம்ரதா ஆகியோர் சுவிட்சர்லாந்தில் வசிக்கின்றனர்.

இவர்கள் இந்தியாவில் இருந்து சட்டவிரோதமாக வேலையாட்களை அழைத்து வந்து தங்கள் வீட்டில் பணியமர்த்தி வருவதாகவும், அவர்களுக்கு குறைந்த ஊதியம் வழங்கி அதிக நேரம் வேலை செய்யும்படி மிரட்டுவதாகவும் குற்றம் சாட்டப்பட்டது.

வேலைக்கு அழைத்து வருபவர்களின் பாஸ்போர்ட்டுகளையும் வாங்கி வைத்துக்கொண்டு மிரட்டி வேலை வாங்கியதாகவும் குற்றச்சாட்டு எழுந்தது. இதுதொடர்பாக சுவிட்சர்லாந்து நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது.

வழக்கு விசாரணை நிறைவடைந்த நிலையில், இன்று தீர்ப்பு வழங்கப்பட்டது.

இதில், மனித கடத்தல் தொடர்பான குற்றச்சாட்டில் இந்து இந்துஜா குழும தலைவரான பிரகாஷ் இந்துஜா விடுவிக்கப்பட்டார்.

ஆனால், பிற குற்றச்சாட்டுகள் நிரூபிக்கப்பட்டதால் தண்டனை வழங்கப்பட்டது.

78 வயது பிரகாஷ் இந்துஜா மற்றும் 75 வயது அவரது மனைவி கமால் இந்துஜா ஆகியோருக்கு தலா நான்கரை ஆண்டுகளும், மகன், மருமகள் ஆகியோருக்கு தலா நான்கு ஆண்டுகளும் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டது.

KP

About Author

You may also like

செய்தி

பாணின் விலை குறைப்பு!

450 கிராம் பாண் ஒன்றின் விலையை 10 ரூபாவினால் குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி   இன்று (08) நள்ளிரவு முதல் இந்த விலை அமுலுக்குவரும் என அகில இலங்கை
செய்தி

உள்ளுராட்சி தேர்தல் : தபால் மூல வாக்களிப்புக்கான திகதி அறிவிப்பு!

உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான தபால் மூல வாக்கெடுப்புக்களை இம்மாதம் 28ஆம் திகதி முதல் 31ஆம் திகதி வரை நடத்துவதற்கு தீர்மானித்துள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. நிதி நெருக்கடி