இதுவரை கருடன் எவ்வளவு வசூல் செய்துள்ளது தெரியுமா?

சூரி கதாநாயகனாக நடித்து கடந்த மே 31ஆம் தேதி வெளிவந்த திரைப்படம் கருடன். இப்படத்தை துரை செந்தில் குமார் இயக்கியிருந்தார்.
இப்படத்தில் சூரியுடன் இணைந்து சசிகுமார், உன்னி முகுந்தன், ஷிவதா, ரோஷினி உள்ளிட்ட பலரும் நடித்திருந்தனர். முதல் நாளில் இருந்தே இப்படத்திற்கு மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்து வந்தது.
பாக்ஸ் ஆபிஸில் பட்டையை கிளப்பிய இப்படம் ப்ளாக் பஸ்டர் ஹிட்டாகியுள்ளது. இந்த நிலையில், கருடன் திரைப்படம் வெளிவந்து 9 நாட்களை கடந்துள்ள நிலையில், இதுவரை செய்துள்ள வசூல் குறித்து தகவல் வெளியாகியுள்ளது.
அதன்படி, உலகளவில் 9 நாட்களில் ரூ. 37 கோடிக்கும் மேல் கருடன் திரைப்படம் வசூல் செய்துள்ளது. அதே போல் தமிழகத்தில் ரூ. 29 கோடி வரை வசூல் செய்து பாக்ஸ் ஆபிஸில் மாஸ் காட்டியுள்ளது.
(Visited 30 times, 1 visits today)