இலங்கையில் ரஷ்யா, இந்தியா உள்ளிட்ட 7 நாடுகளுக்கு இலவச விசா திட்டம்!
இந்தியா, சீனா மற்றும் ரஷ்யா உள்ளிட்ட ஏழு நாடுகளைச் சேர்ந்த பார்வையாளர்களுக்கு விசா இன்றி நுழைய அனுமதிக்கும் முன்னோடி திட்டம் ஏப்ரல் 30, 2024 வரை நீட்டிக்கப்பட்டுள்ளதாக சுற்றுலாத்துறை அமைச்சர் ஹரின் பெர்னாண்டோ தெரிவித்துள்ளார்.
முன்னோடித் திட்டத்தின் அடுத்த சில வாரங்களில் இது தொடர்பான இறுதி முடிவு எடுக்கப்படும் என்று அவர் கூறினார்.
கடந்த ஆண்டு அக்டோபரில், இந்தியா, சீனா, ரஷ்யா, மலேசியா, ஜப்பான், இந்தோனேஷியா மற்றும் தாய்லாந்து ஆகிய நாடுகளில் இருந்து வருபவர்களுக்கு 31 மார்ச் 2024 வரை பைலட் திட்டமாக விசா இல்லாமல் நுழைவதற்கு அமைச்சரவை ஒப்புதல் அளித்தது.
(Visited 6 times, 1 visits today)