இலங்கை

வவுனியாவில் வீடொன்றில் இருந்து மீட்கப்பட்ட யுவதி ஒருவரின் சடலம்!

வவுனியா, சமனங்குளம் பகுதியில் இருந்து 23 வயது யுவதி ஒருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளதாக சிதம்பரபுரம் பொலிஸார் இன்று (28) தெரிவித்தனர்.

வவுனியா, சமனங்குளம் பகுதியில் உள்ள வீடு ஒன்றில் இளம் யுவதி ஒருவர் தூக்கிட்ட நிலையில் காணப்படுவதாக சிதம்பரபுரம் பொலிஸாருக்கு கிடைத்த தகவலையடுத்து அங்கு சென்ற பொலிஸார் குறித்த யுவதியின் சடலத்தை மீட்டுள்ளனர்.

சடலமாக மீட்கப்பட்டவர் ஆசிகுளம், சிதம்பரநகர் பகுதியைச் சேர்ந்த 23 வயதுடைய ஜெகநாதன் கவிப்பிரியா என்பவராவார். சம்பவம் தொடர்பில் சிதம்பரபுரம் பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

Mithu

About Author

You may also like

அரசியல் இலங்கை

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதிய உதவிச்செயற்திட்டம் மார்ச் 20 ஆம் திகதி பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிக்கப்படும்

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதியத்தின் உதவிச்செயற்திட்டத்தை எதிர்வரும் 20 ஆம் திகதி நாணய நிதியப் பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிப்பதற்கு எதிர்பார்த்திருப்பதாக சர்வதேச நாணய நிதியத்தின் நிறைவேற்றுப்பணிப்பாளர் கிறிஸ்டலினா
இலங்கை செய்தி

இலங்கையில் பெண்களுக்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரிப்பு!

இலங்கையில் பெண்களுக்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரிப்பு! இலங்கையில் பெண்களிற்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. பெண் பாராளுமன்ற உறுப்பினர்கள் குழு பெண்களிற்கு எதிரான சைபர்
error: Content is protected !!