உலக சந்தையில் கச்சா எண்ணெய் விலையில் மாற்றம்!
உலக சந்தையில் கச்சா எண்ணெய் விலை குறைந்துள்ளது.
கச்சா எண்ணெய் விநியோகத்தை அதிகரிக்க ரஷ்யா எடுத்த முடிவு, ஜெட் எரிபொருளுக்கான தேவை குறைவு மற்றும் அமெரிக்க வட்டி விகிதங்கள் குறித்த அந்நாட்டு மத்திய வங்கி முடிவெடுப்பதற்கு சில நாட்களுக்கு முன் சந்தையில் ஏற்பட்ட மந்தநிலை போன்ற காரணங்களால் கச்சா எண்ணெய் விலை குறைந்துள்ளதாக சந்தை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
இதன்படி, பிரன்ட் கச்சா எண்ணெய் பேரல் ஒன்றின் விலை 86.74 டொலர்களாகவும், வெஸ்ட் டெக்சாஸ் (WTI) கச்சா எண்ணெய் பீப்பாய் ஒன்றின் விலை 82.03 டொலர்களாகவும் காணப்பட்டது.
ஆனால் முன்னதாக, கச்சா எண்ணெய் விலை 4 மாதங்களில் இல்லாத உச்சத்தை எட்டியது.
சவுதி அரேபியா மற்றும் ஈராக்கின் கச்சா எண்ணெய் விநியோகம் குறைந்துள்ளது, சீனா மற்றும் அமெரிக்காவின் பொருளாதார வளர்ச்சி குறித்த நேர்மறையான தகவல்கள் இதற்குக் காரணம் என்று சந்தை வட்டாரங்கள் தெரிவித்தன.
ரஷ்யா தனது கச்சா எண்ணெய் ஏற்றுமதியை மார்ச் மாதம் முதல் நாளொன்றுக்கு 200,000 பீப்பாய்கள் அதிகரிக்க முடிவு செய்துள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.