வரலாற்று சாதனை படைத்த நமீபியா வீரர்
நேபாள் நாட்டில் முத்தரப்பு தொடர் நடைபெற்று வருகிறது. இந்த தொடரில் நேபாள், நமீபியா, நெதர்லாந்து ஆகிய அணிகள் மோதுகிறது.
இதன் முதல் போட்டி இன்று நடைபெற்றது. இதில் நமீபியா – நேபாள் மோதின. இதில் டாஸ் வென்ற நமீபியா பேட்டிங்கை தேர்வு செய்தது.
அதன்படி முதலில் ஆடிய நமீபியா 20 ஓவர் முடிவில் 4 விக்கெட்டுகளை இழந்து 206 ரன்கள் எடுத்தது. அதிகபட்சமாக லோஃப்டி ஈடன் 101 ரன்கள் குவித்தார்.
இதனையடுத்து களமிறங்கிய நேபாள் அணி 18.5 ஓவர்களில் 186 ரன்னில் ஆல் அவுட் ஆனது. இதன் மூலம் 20 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. ஆட்டநாயகனாக லோஃப்டி ஈடன் தேர்வு செய்யப்பட்டார்.
இந்த போட்டியில் அதிவேக சதம் அடித்து லோஃப்டி ஈடன் வரலாற்று சாதனை படைத்துள்ளார். அவர் 33 பந்துகளில் சதம் அடித்து அசத்தியுள்ளார். இதில் 11 பவுண்டரி, 8 சிக்சர்கள் அடங்கும்.
இதற்கு முன்னதாக 34 பந்துகளில் சதம் அடித்து கௌசல் மல்லா அதிவேகமாக சதம் அடித்தவர்களின் பட்டியலில் முதலிடத்தில் இருந்தார்.
இவரைத் தொடர்ந்து தென் ஆப்பிரிக்கா வீரர் டேவிட் மில்லர் (35 பந்துகள்) 2-வது இடத்திலும், ரோகித் சர்மா (35 பந்துகள்) 3-வது இடத்திலும் இடம் பெற்றிருந்தனர்.
இவர்கள் அனைவரையும் பின்னுக்கு தள்ளி, அதிவேகமாக சதம் அடித்தவர்களின் பட்டியலில் நம்பர் 1 இடத்தை ஈடன் பிடித்துள்ளார்.