பாரசீக வளைகுடாவில் இரு கப்பல்களை பறிமுதல் செய்த ஈரான்! 15 பணியாளர்கள் கைது!
பாரசீக வளைகுடாவில் இரண்டு வெளிநாட்டு எண்ணெய் கப்பல்களை நேற்றைய தினம் ஈரான் கைப்பற்றியதாக அந்நாட்டு மாநில ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. குறித்த கப்பலில் எரிபொருள் கடத்தப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது. இருப்பினும் கப்பல் எந்த நாட்டின் கொடியின் கீழ் பயணித்தது அல்லது எந்த நாட்டிற்கு சொந்தமானது என்பது தொடர்பான விபரங்கள் வெளியிடப்படவில்லை. புரட்சிகர காவல்படையின் கடற்படையின் பிராந்திய தளபதியான ஜெனரல் ஹெய்டர் ஹொனாரியன் மொஜாரட் (Heidar Honarian Mojarrad) டேங்கர்கள் டீசல் உட்பட சுமார் 1 மில்லியன் லிட்டர் எரிபொருளை […]













