விளையாட்டு

ICC U-19 உலகக்கிண்ணம் யாருக்கு? இன்று பலப்பரீட்சை!

  • February 6, 2026
  • 0 Comments

19 வயதுக்கு உட்பட்டோருக்கான உலகக்கிண்ண தொடரின் Under-19 World Cup இறுதி ஆட்டம் இன்று (06) நடைபெறவுள்ளது. இறுதிப்போட்டியில் இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகள் பலப்பரீட்சை நடத்துகின்றன. இலங்கை நேரப்படி போட்டி பிற்பகல் 1 மணிக்கு ஆபிரிக்க நாடான சிம்பாப்பேயில் ஆரம்பமாகும். ஆயுஷ் மாத்ரே தலைமையிலான இந்திய அணி போட்டி தொடர் முழுவதும் சிறப்பாக விளையாடிவருகின்றது. தோல்வி எதையும் சந்திக்கவில்லை. இங்கிலாந்து அணியும் தோல்வியை சந்திக்காமல் இறுதிப்போட்டிக்கு முன்னேறி இருக்கிறது. எனவே, இரு அணிகளும் சமபலத்துடன் மோதுகின்றன. […]

இலங்கை செய்தி

இலங்கை -மாலைதீவு பாதுகாப்பு ஒத்துழைப்பு குறித்து ஆராய்வு!

  • February 6, 2026
  • 0 Comments

இலங்கைக்கான மாலைதீவு தூதுவர் Masood Imad, பாதுகாப்பு செயலாளர் எயார் வைஸ் மார்ஷல் சம்பத் தூயகொந்தவை சந்தித்து பேச்சு நடத்தினார். பாதுகாப்பு அமைச்சில் மரியாதை நிமித்தம் மேற்படி சந்திப்பு இடம்பெற்றது. இதன்போது பரஸ்பர முக்கியத்துவம் மிக்க விடயங்கள் தொடர்பாக இரு தரப்பினரும் கலந்துரையாடினர். குறிப்பாக, இலங்கை மற்றும் மாலத்தீவுக்கு இடையில் நீண்டகாலமாக நிலவி வரும் இருதரப்பு உறவுகளை மேலும் வலுப்படுத்துவது மற்றும் பாதுகாப்பு ஒத்துழைப்பு துறைகளில் தொடர்புகளை மேம்படுத்துவது குறித்தும் கவனம் செலுத்தப்பட்டது. இரு நாடுகளுக்கிடையிலான நெருங்கிய […]

அரசியல் இலங்கை செய்தி

புலிகளை ஒழிப்பதற்கான போர் தமிழர்களுக்கு எதிரானது அல்ல – நாமல்!

  • February 6, 2026
  • 0 Comments

“நாம் தமிழர்களுக்கு எதிராக போர் தொடுக்கவில்லை. பயங்கரவாத அமைப்புக்கு எதிராகவே போர் இடம்பெற்றது. எனவே, புலிகள் அமைப்பை தோற்கடித்தமை இனவாதம் கிடையாது.” இவ்வாறு ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன SLPP கட்சியின் தேசிய அமைப்பாளர் நாமல் ராஜபக்ச Namal Rajapaksa தெரிவித்தார். ” படையினர் போரை முடிவுக்கு கொண்டுவந்தது தொடர்பில் சுதந்திர தின நிகழ்வில் பெருமையாகக் கூறப்படவில்லை. அதைவிடுத்து டித்வா புயல் பற்றியே வர்ணனை வழங்கப்பட்டது. சில நாடுகளில் முதலாம் உலகம்போரில் கிடைத்த வெற்றி தொடர்பில்கூட இன்றளவிலும் பேசப்படுகின்றது.” […]

ஆஸ்திரேலியா உலகம்

“மிக முக்கிய பாதுகாப்பு ஒப்பந்தம் கைச்சாத்து”

  • February 6, 2026
  • 0 Comments

Update – ஆஸ்திரேலியா மற்றும் இந்தோனேசியாவுக்கிடையில் புதிய பாதுகாப்பு ஒப்பந்தம் கைச்சாத்திடப்பட்டுள்ளது. ………. முதலாம் இணைப்பு ஆஸ்திரேலியா Australia மற்றும் இந்தோனேசியா Indonesia ஆகிய நாடுகளுக்கிடையில் வரலாற்றுச் சிறப்புமிக்க பாதுகாப்பு ஒப்பந்தம் security treaty கைச்சாத்திடப்படவுள்ளது. இருநாடுகளின் இராணுவ ஒத்துழைப்பை வலுப்படுத்தும் நோக்கிலேயே மேற்படி ஒப்பந்தம் கைச்சாத்திடப்படவுள்ளது. ஆஸ்திரேலியா பிரதமர் Anthony Albanese இந்தோனேசியாவுக்கு பயணம் மேற்கொண்டுள்ளார். அந்நாட்டு ஜனாதிபதியை Prabowo Subianto சந்தித்து கலந்துரையாடிய பின்னர் இன்று ஒப்பந்தம் கைச்சாத்திடப்படலாம் என தெரியவருகின்றது. “ஆஸ்திரேலியா–இந்தோனேசியா உறவுகளில் […]

வாழ்வியல்

நிகழ்காலமே நிஜம்: மகிழ்ச்சியான வாழ்வின் ரகசியம்

  • February 5, 2026
  • 0 Comments

“நேற்றைய வருத்தத்தையும் நாளைய பயத்தையும் சுமந்து திரிவதை விட, இன்றைய தருணத்தை (Present Moment) கொண்டாடுவதுதான் மகிழ்ச்சியான வாழ்வின் ரகசியம்” – இந்தத் தத்துவம் இன்றைய 2026-ஆம் ஆண்டுச் சூழலில் மிகவும் டிரெண்டாகி வரும் ஒரு முக்கியமான வாழ்வியல் சிந்தனையாகும். இன்றைய தருணத்தில் வாழ்தல் (Mindfulness): ஒரு விரிவான பார்வை இன்றைய மின்னணு உலகில், மனித மனம் எப்போதும் கடந்த காலத்தின் கசப்பான நினைவுகளிலும் அல்லது எதிர்காலத்தின் நிச்சயமற்ற பயங்களிலும் சிக்கித் தவிக்கிறது. இதைத் தடுத்து மகிழ்ச்சியாக […]

இலங்கை செய்தி

154 கடவுச்சீட்டுகளுடன் பெண் ஒருவர் கைது

  • February 5, 2026
  • 0 Comments

மோசடி வெளிநாட்டு வேலைவாய்ப்பு முகவர் நிலையம் ஊடாக, டுபாய், ருமேனியா மற்றும் மத்திய கிழக்கு நாடுகளுக்கு வேலைவாய்ப்புக்காக நபர்களைச் சேர்த்து வந்த பெண் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்புப் பணியகத்தின் விசேட விசாரணைப் பிரிவின் பொலிஸ் பிரிவைச் சேர்ந்த அதிகாரிகளினால்  இந்த‌ பெண் கைது செய்யப்பட்டுள்ளார். பணியகத்தின் விசேட விசாரணைப் பிரிவுக்குக் கிடைத்த தகவலுக்கு அமைய, முல்லேரியா பிரதேசத்தில் வாடகை அடிப்படையில் பெறப்பட்ட வீடொன்றில் இயங்கி வந்த இந்த போலி வெளிநாட்டு வேலைவாய்ப்பு முகவர் […]

உலகம் செய்தி

போர் குற்றங்களில் ஈடுபட்ட சூடான் தளபதிகள் மீது தடை விதித்த இங்கிலாந்து!

  • February 5, 2026
  • 0 Comments

சூடானில் போர் குற்றங்களில் ஈடுபட்ட 06 நபர்களுக்கு எதிராக இங்கிலாந்து அரசாங்கம் புதிய தடைகளை இன்று அறிவித்துள்ளது. படுகொலைகள் மற்றும் பாலியல் வன்கொடுமையை போர் ஆயுதமாகப் பயன்படுத்தியதாக குற்றம் சாட்டப்பட்ட விரைவு ஆதரவுப் படைகள் (RSF) மற்றும் சூடான் ஆயுதப் படைகள் (SAF) ஆகிய இரண்டின் மூத்த தளபதிகள் மீதும் மேற்படி தடை விதிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பில் கருத்து வெளியிட்டுள்ள யெவெட் கூப்பர் (Yvette Cooper), அரசாங்கம் “போர் இயந்திரத்தை அகற்றுவதை” நோக்கமாகக் கொண்டுள்ளது என்றும், போர் […]

இந்தியா செய்தி

வளர்ந்த இந்தியாவை நோக்கி நாடு வேகமாக பயணிக்கிறது – மாநிலங்களவையில் மோடி கருத்து

  • February 5, 2026
  • 0 Comments

இந்தியா பிரகாசமான எதிர்காலத்தைக் கொண்டிருக்கிறது என தெரிவித்த இந்திய பிரதமர் நரேந்திர மோடி வளர்ந்த இந்தியாவை நோக்கி நாடு வேகமாக பயணிக்கிறது என்றும் கூறியுள்ளார். பட்ஜெட் கூட்டத் தொடரை முன்னிட்டு கடந்த ஜனவரி 28 ஆம் திகதி , நாடாளுமன்ற இரு அவைகளின் கூட்டுக் கூட்டத்தில் குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு உரை நிகழ்த்தினார். அவரது உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீது மக்களவையில் பிரதமர் மோடி உரை நிகழ்த்துவதை தவிர்த்துவிட்டார். இதனையடுத்து, பிரதமர் மோடியின் பதில் […]

ஐரோப்பா

ரஷ்யா – உக்ரைன் இடையே கைதிகள் பரிமாற்றம்!

  • February 5, 2026
  • 0 Comments

அபுதாபியில் அமெரிக்க மத்தியஸ்தத்துடன் முன்னெக்கப்பட்ட சமாதான பேச்சுவார்த்தைகளின் விளைவாக  உக்ரைனும் ரஷ்யாவும் 314 கைதிகளைப் பரிமாறிக் கொள்ள ஒப்புக்கொண்டதாக அமெரிக்கத் தூதர் ஸ்டீவ் விட்காஃப்  (Steve Witkoff) தெரிவித்துள்ளார். குறித்த பேச்சுவார்த்தை அபுதாபியில் இன்று முன்னெடுக்கப்பட்டது. ஜனாதிபதி ஜெலென்ஸ்கியின் உதவியாளர் கைரிலோ புடனோவ் (yrylo Budanov) உட்பட உக்ரைனிய அதிகாரிகள், பேச்சுவார்த்தைகளை ‘உண்மையிலேயே ஆக்கபூர்வமானவை’ என்று விவரித்துள்ளனர். ரஷ்யாவின் பாதுகாப்பு அமைச்சகம் கைதிகள் பரிமாற்றத்தை உறுதிப்படுத்தியது, இரு தரப்பிலும் 157 போர்க் கைதிகள் பரிமாறிக் கொள்ளப்பட்டதாகவும், மூன்று […]

இலங்கை செய்தி

ஜனாதிபதி அநுர இந்தியா செல்ல திட்டம்!

  • February 5, 2026
  • 0 Comments

ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க Anura Kumara Dissanayake இம்மாத நடுப்பகுதியில் இந்தியாவுக்கு விஜயம் மேற்கொள்ளவுள்ளார் என தகவல் வெளியாகியுள்ளது. ஆங்கில இணைய ஊடகமொன்று மேற்படி தகவலை வெளியிட்டுள்ளது. செயற்கை நுண்ணறிவு தாக்க உச்சி மாநாடு AI Impact Summit 2026 பெப்ரவரி 19 மற்றும் 20 ஆம் திகதிகளில் டெல்லியில் இடம்பெறவுள்ளது. இம்மாநாட்டில் பங்கேற்பதற்காகவே ஜனாதிபதி டெல்லி செல்கின்றார். இலங்கை தூதுவர் மகிஷினி கொலன்னே இந்த தகவலை உறுதிப்படுத்தினார் எனவும் மேற்படி செய்தியில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. மாநாட்டில், முன்னணி […]

error: Content is protected !!