இலங்கையில் அத்தியாவசிய பொருட்களின் விலைகள் அதிகரிக்க வாய்ப்பு!
கொழும்பு துறைமுகத்தில் உள்ள 1,000 கொள்கலன்களை விடுவிப்பதில் ஏற்பட்ட தாமதம் காரணமாக தாம் 100 மில்லியன் ரூபாவிற்கும் அதிகமான கூடுதல் செலவினங்களை எதிர்கொள்ள வேண்டிய கட்டாயத்தில் உள்ளதாக இலங்கையில் உள்ள இறக்குமதியாளர்கள் குற்றம் சாட்டுகின்றனர். முக்கிய இறக்குமதியாளர்கள் தங்களுக்கு ஒரு கொள்கலனுக்கு 100,000 வீதமும் சிலருக்கு அதிகரித்த போக்குவரத்துக் கட்டணங்கள், துறைமுக தாமதக் கட்டணம் மற்றும் கூடுதல் பணியாளர் தேவைகள் காரணமாக ரூ. 300,000 வரையில் செலவு ஏற்படுவதாக தெரிவித்துள்ளனர். தாமதமான கொள்கலன்களில் அத்தியாவசிய உணவுப் பொருட்கள், […]













