நைஜீரியாவில் மீண்டும் டேங்கர் லொரி வெடித்துச் சிதறியதில் 86 பேர் பலி
நைஜீரியாவில் சரக்குகளைக் கொண்டு செல்ல ரயில் பாதைகள் இல்லாததால் பெரும்பாலும் சாலைகளே பயன்படுத்தப்படுகின்றன. சாலைகள் மோசமாக உள்ளதால் விபத்துக்கள் என்பது தொடர்கதையாக உள்ளன. கடந்த அக்டோபர் மாதம் ஜிகாவா மாகாணத்தில் உள்ள மஜியாவில் எரிபொருள் ஏற்றிச் சென்ற டேங்கர் லொரி கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. லொரியில் இருந்து கசிந்த எரிபொருளை சேகரிக்கும் முயற்சியில் ஈடுபட்ட போது டேங்கர் வெடித்ததில் 147 பேர் உயிரிழந்தனர். தற்போது, மீண்டும் நைஜீரியாவின் வடக்கில் அமைந்துள்ள குராரா என்ற பகுதியில் சென்ற டேங்கர் லொரி, […]













