அமெரிக்கா-தென்கொரிய போர் விமானங்கள் கூட்டு விமானப் பயிற்சி
அமெரிக்க, தென்கொரிய விமானப் படைகளைச் சேர்ந்த 200க்கும் மேற்பட்ட போர் விமானங்கள் இவ்வாரம் கூட்டுப் பயிற்சியை மேற்கொள்வதாகத் தென்கொரிய விமானப் படை தெரிவித்துள்ளது. ஐந்து நாள்களுக்கு அவை 24 மணி நேரமும் பயிற்சியில் ஈடுபடும் என்று ஆகஸ்ட் 20ஆம் திகதி அது கூறியது. வடகொரியாவின் அச்சுறுத்தல்களை எதிர்கொள்வதற்கான தயார்நிலையை மேம்படுத்தும் ‘உல்ச்சி ஃப்ரீடம் ஷீல்டு’ பயிற்சிகளின் ஓர் அங்கமாக விமானப் பயிற்சி இடம்பெறுவதாகக் கூறப்பட்டது. தற்காப்புச் சுற்றுக்காவல் விமானங்கள், பாவனைப் பயிற்சிகளில் ஈடுபடுத்தப்படுவதாகத் தென்கொரிய விமானப் படை […]













