அமெரிக்காவில் அங்காடி ஒன்றில் துப்பாக்கிச்சூடு ;மூவர் மரணம், 10 பேர் காயம்
அமெரிக்காவின் அர்கன்சாஸ் மாநிலத்தில் பேரங்காடி ஒன்றில் நடந்த துப்பாக்கிச்சூட்டில் பொதுமக்கள் மூவர் கொல்லப்பட்டதாகக் காவல்துறை கூறியுள்ளது.மேலும், 10 பேர் காயமடைந்தனர். அவர்களில் இருவர் காவல்துறை அதிகாரிகள் என்று மாநிலக் காவல்துறை குறிப்பிட்டது. இச்சம்பவம் லிட்டில் ராக்குக்குத் தெற்கே 100 கிலோமீட்டர் தொலைவில் உள்ள ஃபோர்டிஸ் நகரின் ‘மேட் புட்சர்’ கடையில் நடந்தது. ஜூன் 21ஆம் திகதி அந்தப் பேரங்காடியில் நபர் ஒருவர் துப்பாக்கியால் சுடத் தொடங்கினார். காவல்துறையினர் திருப்பிச் சுட்டதில் அந்த நபருக்கும் காயம் ஏற்பட்டதாக அர்கன்சாஸ் […]













