நாட்டின் பொருளாதாரத்திற்கு பங்களிக்குமாறு இந்தியர்களை வலியுறுத்தும் மாலத்தீவு
இருதரப்பு உறவுகளுக்கு மத்தியில் மாலத்தீவுக்கு வரும் இந்திய சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை குறைந்து வருவதால், மாலத்தீவு நாட்டின் சுற்றுலா அமைச்சர் , சுற்றுலாவை நம்பியிருக்கும் நாட்டின் பொருளாதாரத்திற்கு பங்களிக்குமாறு இந்தியர்களை வலியுறுத்தினார். மாலத்தீவு சுற்றுலாத்துறை அமைச்சர் இப்ராஹிம் பைசல், பிடிஐ வீடியோக்களுக்கு இங்கு அளித்த பேட்டியில், தனது நாட்டிற்கும் இந்தியாவிற்கும் இடையிலான வரலாற்று உறவுகளை வலியுறுத்தினார். “எங்களுக்கு ஒரு வரலாறு உண்டு. புதிதாக தேர்ந்தெடுக்கப்பட்ட எங்கள் அரசும் (இந்தியாவுடன்) இணைந்து பணியாற்ற விரும்புகிறோம். நாங்கள் எப்போதும் அமைதி […]












