மத்திய கிழக்கு

துபாயில் 10 ஆண்டுகளில் ஏற்படவுள்ள மாற்றம்!

  • April 28, 2024
  • 0 Comments

துபாய் நகர விமான நிலையம் நகர மாநிலத்தின் இரண்டாவது இடத்திற்கு மாற்றுவதற்கான நகர்வுகளை முன்னெடுக்கவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. அடுத்த 10 ஆண்டுகளில் இதற்கான திட்டத்தை முன்னெடுக்கவுள்ளதாகவும் இதற்காக 35 பில்லியன் செலவிடவுள்ளதாகவும் ஆட்சியாளர் ஷேக் முகமது பின் ரஷீத் அல் மக்தூமின் அறிவித்துள்ளார். கொரோனா வைரஸ் தொற்றுநோய்க்கு பிறகு ஏற்பட்ட வருமான இழப்பை சீர்படுத்தும் வகையில் இந்த திட்டம் அமுற்படுத்தவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதனை நடைமுறைப்படுத்த  நீண்டகாலமாக  திட்டமிடப்பட்டாலும், 2009 ஆண்டு ஏற்பட்ட பொருளாதார நெருக்கடியின் காரணமாக கைவிடப்பட்டது. “எதிர்கால […]

இலங்கை

தென்கொரியாவிற்கு இடம்பெயரும் இலங்கையின் முன்னாள் ஜனாதிபதி?

தென்கொரியாவிற்கு இடம்பெயர்வதாக கூறப்படும் வதந்திகளை முன்னாள் ஜனாதிபதியும் நாடாளுமன்ற உறுப்பினருமான மைத்திரிபால சிறிசேன வன்மையாக நிராகரிப்பதாக தெரிவித்துள்ளார். எந்த விடயம் தொடர்பில் அவர் விடுத்துள்ள அறிக்கையில் சுட்டிக்காட்டியுள்ளார். மேலும், தென் கொரியாவுக்கோ வேறு எந்த நாட்டுக்கோ தான் செல்ல வேண்டிய அவசியமில்லை எனவும் முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.

ஐரோப்பா

மேற்குல நாடுகளுக்கு கடுமையான பதிலடி கொடுக்கப்படும் : ரஷ்யா கடும் மிரட்டல்

உறைந்த ரஷ்ய சொத்துக்கள் பறிமுதல் செய்யப்பட்டால் “கடுமையான” பதிலடி கொடுக்கப்படும் என ரஷ்யா மேற்கு நாடுகளை அச்சுறுத்தியுள்ளது. முடக்கப்பட்ட சொத்துக்களை திரும்பப் பெறுவதற்கு ஈடாக உக்ரைனிடம் இருந்து கைப்பற்றப்பட்ட பகுதிகளை ரஷ்யா ஒருபோதும் விட்டுக்கொடுக்காது எனவும் ரஷ்ய வெளியுறவு அமைச்சக செய்தித் தொடர்பாளர் மரியா ஜாகரோவா தெரிவித்துள்ளார். “எங்கள் தாய்நாடு விற்பனைக்கு இல்லை” என்றும் ஜாகரோவா வலியுறுத்தியுள்ளார். “ஒரு ரஷ்ய சொத்துக்கள் தீண்டப்படாமல் இருக்க வேண்டும், இல்லையெனில் மேற்கத்திய திருட்டுக்கு கடுமையான பதில் இருக்கும். மேற்கு நாடுகளில் […]

ஆஸ்திரேலியா

உக்ரைனுக்கு 100 மில்லியன் டொலர் மதிப்பிலான ராணுவ உதவி – ஆஸ்திரேலியா அறிவிப்பு

  • April 28, 2024
  • 0 Comments

ரஷ்யா-உக்ரைன் இடையிலான போர் 2 ஆண்டுகளை கடந்த பிறகும் தொடர்ந்து நடந்து வருகிறது. நேட்டோ உறுப்பு நாடுகளான அமெரிக்கா மற்றும் பிற மேற்கத்திய நாடுகள் உக்ரைனுக்குத் தேவையான ராணுவ மற்றும் நிதியுதவிகளை வாரி வழங்கி வருகின்றன. இந்நிலையில் ஆஸ்திரேலிய பாதுகாப்புத்துறை மந்திரி ரிச்சர்டு மார்லெஸ் உக்ரைன் நாட்டுக்கு பயணம் மேற்கொண்டுள்ளார். உக்ரைனின் லிவிவ் நகருக்குச் சென்ற அவர்,உக்ரைன் பிரதமர் டெனிஸ் ஷமிஹாலை சந்தித்துப் பேசினார். அதன்பின் செய்தியாளர்களிடம் பேசிய ரிச்சர்டு மார்லெஸ், ஆஸ்திரேலிய அரசு சார்பில் உக்ரைனுக்கு […]

ஆசியா

ஈராக்கில் டிக்-டாக் பெண் பிரபலம் மர்ம நபரால் சுட்டு கொலை

  • April 28, 2024
  • 0 Comments

ஈராக்கை சேர்ந்த டிக்-டாக் பெண் பிரபலம் ஓம் பகத். பாப் இசைக்கு நடனமாடும் வீடியோக்களை டிக்-டாக்கில் பகிர்ந்து வந்தார்.மேலும் பல்வேறு வீடியோக்களையும் வெளியிட்டு வந்தார். இவரை சமூக வலைதளங்களில் 5 லட்சம் பேர் பின்தொடருகிறார்கள். இந்த நிலையில் ஓம் பகத், மர்ம நபரால் சுட்டுக்கொல்லப்பட்டார். கிழக்கு பாக்தாத்தின் ஜோயோனா மாவட்டத்தில் உள்ள தனது வீட்டு முன்பு காரில் ஓம் பகத் அமர்ந்திருந்தார். அப்போது மோட்டார் சைக்கிளில் வந்த மர்ம நபர் ஒருவர், திடீரென்று துப்பாக்கியால் ஓம் பகத்தை […]

பொழுதுபோக்கு

அஜித்தை தரக்குறைவாக பேசிய வடிவேலு.. 20 வருட பகைக்கு இதுதான் காரணமா?

  • April 28, 2024
  • 0 Comments

நடிகர் அஜித்துக்கும் நடிகர் வடிவேலுக்கும் இடையே கடந்த 20 ஆண்டுகளுக்கு முன் நடந்த பிரச்சனையால் அவர்கள் இருவரும் இணைந்து பணியாற்றுவதை தவிர்த்து வருகின்றனர். நடிகர் அஜித் தமிழ் சினிமாவில் முன்னணி மாஸ் நடிகராக வலம் வந்து கொண்டிருக்கிறார். எந்தவித சினிமா பின்புலமும் இன்றி சினிமாவில் முன்னுக்கு வந்தவர் தான் அஜித். தெலுங்கில் வெளிவந்த பிரேம புஷ்தகம் படம் மூலம் ஹீரோவாக அறிமுகமானார் அஜித். நடிகர் அஜித்தும், நகைச்சுவை நடிகர் வடிவேலுவும் 2002-ம் ஆண்டுக்கு முன்பு வரை தொடர்ச்சியாக […]

இலங்கை

இலங்கையின் சனத்தொகையில் ஏற்பட்டுள்ள பாரிய வீழ்ச்சி : கேள்விக்குறியாகும் எதிர்காலம்!

  • April 28, 2024
  • 0 Comments

இலங்கையில் வருடாந்த பிறப்பு வீதத்தில் கணிசமான வீழ்ச்சி காணப்படுகின்ற அதேவேளை வருடாந்த இறப்புகளின் எண்ணிக்கை 2020 ஆம் ஆண்டிலிருந்து அதிகரித்துள்ளதாக பதிவாளர் நாயகம் திணைக்களம் தெரிவித்துள்ளது. 2020ஆம் ஆண்டுக்கு முன்னர் சுமார் 325,000 ஆக இருந்த வருடாந்த பிறப்புகளின் எண்ணிக்கை தற்போது 280,000 ஆகக் குறைந்துள்ளதாக சிரேஷ்ட பிரதிப் பதிவாளர் நாயகம் சட்டத்தரணி லக்ஷிகா கணேபொல தெரிவித்துள்ளார். இதற்கிடையில், ஆண்டு இறப்புகளின் எண்ணிக்கை சுமார் 180,000 ஆக அதிகரித்துள்ளது, இது 2020 க்கு முன்பு 140,000 ஆக […]

ஆசியா

ரஃபா மீதான இஸ்ரேலின் தாக்குதல்: அமெரிக்காவிடம் பாலஸ்தீன ஜனாதிபதி விடுத்துள்ள கோரிக்கை

காசாவில் உள்ள எல்லை நகரமான ரஃபா மீது இஸ்ரேல் தாக்குதல் நடத்துவதை அமெரிக்காவால் மட்டுமே தடுக்க முடியும் என பாலஸ்தீன ஜனாதிபதி மஹ்மூத் அப்பாஸ் தெரிவித்துள்ளார். மேலும் சில நாட்களில் தாக்குதல் நடத்தப்படும் என்று அவர் எதிர்பார்க்கிறார். சவூதி தலைநகர் ரியாத்தில் நடந்த உலகப் பொருளாதார மன்றத்தின் சிறப்புக் கூட்டத்தில் அப்பாஸ் கூறுகையில், “ரஃபாத் தாக்குதலை இஸ்ரேலை மேற்கொள்ள வேண்டாம் என்று அமெரிக்காவைக் கேட்டுக்கொள்கிறோம். இஸ்ரேலை இந்தக் குற்றத்தைச் செய்வதிலிருந்து தடுக்கும் ஒரே நாடு அமெரிக்காதான்” என்று […]

இந்தியா

சுட வைத்த இரும்பு ராடால் இளம்பெண்ணின் முகத்தில் பெயர் எழுதிய இளைஞர்… உத்திர போரதேசத்தில் அரங்கேறிய சம்பவம் !

  • April 28, 2024
  • 0 Comments

திருமணத்திற்கு மறுப்பு தெரிவித்த இளம்பெண்ணைக் கடத்திச் சென்று பாலியல் வன்கொடுமை செய்ததுடன் சூடான இரும்பு கம்பியால் அவரது கன்னத்தில் பெயரை எழுதி சித்ரவதை செய்த சம்பவம் உத்தரப்பிரதேசத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. உத்தரப்பிரதேச மாநிலம், கெரி பகுதியைச் சேர்ந்தவர் அமன் ஹூசைன். இவர் அப்பகுதியில் உள்ள இளம்பெண்ணிடம், திருமணம் செய்வதற்கான விருப்பத்தை தெரிவித்துள்ளார். அவருடைய நடத்தை பிடிக்காததால், அப்பெண் திருமணத்திற்கு மறுத்துள்ளார். அதனால், அப்பெண்ணின் மீது ஹூசனை கோபத்தில் இருந்துள்ளார். இந்நிலையில், வீட்டில் தனியாக இருந்த பெண்ணை, கடத்தி […]

ஆப்பிரிக்கா

தென்மேற்கு கம்போடியாவில் இராணுவ தளத்தில் அதிகரிக்கப்பட்டுள்ள பாதுகாப்பு!

  • April 28, 2024
  • 0 Comments

தென்மேற்கு கம்போடியாவில் உள்ள ஒரு இராணுவ தளத்தில் பாரிய வெடிப்பு சம்பவம் இடம்பெற்றதை தொடர்ந்து குறித்த பகுதியில் பாதுகாப்பு நடவடிக்கை பலப்படுத்தப்பட்டுள்ளது. குறித்த வெடிப்பு சம்பவத்தில் ஏறக்குறைய 20 வீரர்கள் உயிரிழந்துள்ளதுடன், பலர் காயமடைந்தனர். கொம்பொங் ஸ்பியூ மாகாணத்தில் உள்ள தளத்தில் இந்த வெடிப்பு சம்பவத்தால் அருகிலுள்ள வீடுகள் சேதமடைந்தன. இதனை அடுத்து இராணுவம் உடனடியாக தளத்திற்கான பாதையை மூடியது என்றும், கிராம மக்கள் பீதியில் உள்ளனர், பாதுகாப்பான இடத்தைத் தேடினர் என்றும் நபர் ஒருவர் கூறியுள்ளார்.

error: Content is protected !!