இலங்கை

வட்டவளை பிரதேசத்தில் கிணற்றிலிருத்து சடலமாக மீட்கப்பட்ட 3 வயது சிறுவன்!

  • March 22, 2024
  • 0 Comments

வட்டவளை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பினோயா மேல் பகுதியில் உள்ள தோட்ட வீடொன்றில் விளையாடிக் கொண்டிருந்த சிறுவனின் சடலம் வீட்டின் பின்புறம் அமைந்துள்ள கிணற்றில் இருந்து மீட்கப்பட்டுள்ளதாக வட்டவளை பொலிஸார் தெரிவித்தனர். 3 வயது 9 மாத வயதுடைய கதிரவேல் ரோஹித்தின் சடலமே விவசாய கிணற்றில் காணப்பட்டதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர். வீட்டில் விளையாடிக் கொண்டிருந்த குழந்தை காணாமல் போனதால், குழந்தையின் தந்தை மற்றும் தோட்ட வீடுகளில் வசிக்கும் தோட்டத் தொழிலாளர்கள் இணைந்து நடத்திய தேடுதல் வேட்டையில் கிணற்றில் இருந்து […]

வட அமெரிக்கா

கனடாவில் இடம்பெற்ற பயங்கர விபத்து சம்பவம்; ஐவர் பரிதாபகரமாக உயிரிழப்பு!

  • March 22, 2024
  • 0 Comments

கனடாவில் இடம்பெற்ற கோர விபத்துச் சம்பவத்தில் 5 பேர் கொல்லப்பட்டுள்ளனர். கனடாவின் கியூபெக் மாகாணத்தின் சபாயிஸ் பகுதியில் இந்த வாகன விபத்துச் சம்பவம் இடம்பெற்றுள்ளது.பிக்அப் ரக வாகனமொன்றும் வேன் ஒன்றும் மோதிக் கொண்டதில் இந்த விபத்து நேர்ந்துள்ளது. உயிரிழந்தவர்களில் நான்கு பேர் க்ரீ வாஸ்வான்பீ பகுதியைச் சேர்ந்தவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த விபத்து காரணமாக பாதை மூடப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது. விபத்திற்கான காரணங்கள் எதுவும் இதுவரையில் வெளியிடப்படவில்லை.சம்பவம் தொடர்பில் பொலிஸார் விசாரணகைளை ஆரம்பித்துள்ளனர்.

ஆசியா

இந்தோனேஷியா கடலில் கவிழ்ந்து விபத்துக்குள்ளான அகதிகள் படகு – 60 பேர் பத்திரமாக மீட்பு

  • March 22, 2024
  • 0 Comments

வங்காள தேசத்தில் வசித்து வரும் ஏராளமான அகதிகள் கடல் வழியாக இந்தோனேஷியா, மலேசியா உள்ளிட்ட நாடுகளுக்கு படகில் தப்பி செல்வது தொடர்கதையாக நடந்து வருகிறது. இவர்கள் சட்டவிரோத மாக பாதுகாப்பு இல்லாமல் படகில் செல்வதால் அடிக்கடி விபத்துக்கள் ஏற்பட்டு பலர் உயிர் இழந்து வருகின்றனர்.இந்நிலையில் வங்காள தேசத்தில் இருந்து 100-க்கும் மேற்பட்டவர்கள் படகில் இந்தோனேஷியா சென்று கொண்டிருந்தனர். இந்தோனேஷியா வடக்கில் கோலா பூடான் கடற்கரையில் இருந்து சுமார் 25 கிலோ மீட்டர் தூரத்தில் படகு சென்று கொண்டிருந்த […]

இலங்கை

அத்தியாவசிய நுகர்வுப் பொருட்களின் விலை குறைப்பு

பண்டிகைக் காலத்தை முன்னிட்டு சில அத்தியாவசிய நுகர்வுப் பொருட்களின் விலையை லங்கா சதொச நிறுவனம் குறைத்துள்ளது. இதன்படி, வாடிக்கையாளர்கள் இந்த தயாரிப்புகளை நாடளாவிய ரீதியில் உள்ள அனைத்து லங்கா சதொச விற்பனை நிலையங்களிலிருந்தும் பெற்றுக்கொள்ள முடியும். இதன்படி, 650 ரூபாவாக இருந்த ஒரு கிலோ பெரிய வெங்காயத்தின் விலை 100 ரூபாவினால் குறைக்கப்பட்டுள்ளது. 1,050 ரூபாவாக இருந்த சிவப்பு கௌபீயின் விலை 52 ரூபாவினாலும் 1,150 ரூபாவாக இருந்த வெள்ளை கௌபீயின் விலை 50 ரூபாவினாலும் குறைக்கப்பட்டுள்ளது. […]

மத்திய கிழக்கு

காசா: ஷிபா மருத்துவமனையில் 50 ஹமாஸ் பயங்கரவாதிகள் படுகொலை…

  • March 22, 2024
  • 0 Comments

ஹமாஸ் பயங்கரவாத அமைப்புக்கு எதிரான போரை இஸ்ரேல் தீவிரப்படுத்தி உள்ளது. இந்நிலையில், இஸ்ரேல் பாதுகாப்பு படை, காசா பகுதியில் உள்ள மிக பெரிய ஷிபா மருத்துவமனையில் புகுந்து அதிரடி தாக்குதலில் ஈடுபட்டது. இதனை அறிந்ததும், ஹமாஸ் பயங்கரவாத அமைப்பினரும் பதில் தாக்குதலில் ஈடுபட்டனர். வளாகத்திற்குள் படையினர் நுழைந்து நடத்திய தாக்குதலில் நேற்று காலை 50 ஹமாஸ் பயங்கரவாதிகள் கொல்லப்பட்டனர். கடந்த திங்கட்கிழமை காலை முதல் இதுவரை வளாகத்திற்குள் 140-க்கும் மேற்பட்ட ஹமாஸ் பயங்கரவாதிகளை படை வீரர்கள் படுகொலை […]

பொழுதுபோக்கு

கொரோனா லாக்டவுனில் வெளிவந்த உண்மை… சம்யுக்தா வாழ்வில் நடந்தது என்ன?

  • March 22, 2024
  • 0 Comments

பிக்பாஸ் நான்காவது சீசனில் போட்டியாளராக கலந்துகொண்டதன் மூலம் பேமஸ் ஆனவர் தான் சம்யுக்தா. கார்த்திக் என்பவரை காதலித்து திருமணம் செய்துகொண்ட இவருக்கு ரயான் என்கிற மகனும் இருக்கிறார். தற்போது தனது மகனுடன் தனியாக வசித்து வரும் சம்யுக்தா, தன் கணவரை பிரிந்ததற்கான காரணத்தை வெளியிடாமல் சீக்ரெட்டாக வைத்திருந்தார். இந்நிலையில், நேர்காணல் ஒன்றில் கலந்துகொண்டபோது கணவர் உடனான பிரிவு குறித்து முதன்முறையாக மனம் விட்டு பேசி உள்ளார் சம்யுக்தா. சம்யுக்தாவின் கணவர் கார்த்திக் துபாயில் வேலை பார்த்து வந்துள்ளார். […]

இலங்கை

ஜனாதிபதியினால் ராணுவ கட்டுப்பாட்டில் இருந்த 278 ஏக்கர் காணிகள் விடுவிப்பு!

  • March 22, 2024
  • 0 Comments

ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவினால் இன்று (22) யாழ்ப்பாணம் – வலிகாமம் வடக்கில் இராணுவக் கட்டுப்பாட்டிலுள்ள மக்களின் 278 ஏக்கர் காணிகள் விடுவிக்கப்பட்டது. ஜே- 244 வயாவிளான் கிழக்கு , ஜே-245 வயாவிளான் மேற்கு, ஜே-252 பலாலி தெற்கு , ஜே-254 பலாலி வடக்கு, ஜே-253 பலாலி கிழக்கு ஆகிய கிராம சேவையாளர் பிரிவில் இருந்து காணிகள் விடுவிக்கப்பட்டது அச்சுவேலி வயாவிளான் பகுதி ரெயிலர் கடை சந்திப்பகுதியில் நிகழ்வு இன்று இடம்பெற்றது. இதன்போது அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா உள்ளிட்ட […]

பொழுதுபோக்கு

சூது கவ்வும்-2… பட்டையை கிளப்பும் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர்

  • March 22, 2024
  • 0 Comments

இயக்குநர் நலன் குமாரசாமி இயக்கத்தில் நடிகர் விஜய் சேதுபதி நடிப்பில் 2013-ம் ஆண்டு சூது கவ்வும் படம் வெளியானது. இந்த படத்தில் சஞ்சிதா ஷெட்டி, அசோக் செல்வன், பாபி சிம்ஹா, ரமேஷ் திலக், கருணாகரன் என பலர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தனர். இந்த படம் விமர்சன ரீதியாகவும், வசூல் ரீதியாகவும் நல்ல வரவேற்பை பெற்றது. இந்த படத்தின் வெற்றியை தொடர்ந்து சூது கவ்வும் படத்தின் அடுத்த பாகம் உருவாகிறது. சூது கவ்வும் 2 என்று தலைப்பிடப்பட்டு இருக்கும் […]

மத்திய கிழக்கு

இஸ்ரேலின் ஆங்கில மொழி அரசாங்க செய்தி தொடர்பாளர் இடைநீக்கம்!

  • March 22, 2024
  • 0 Comments

இஸ்ரேலின் ஆங்கில மொழி அரசாங்க செய்தி தொடர்பாளர் எய்லோன் லெவி இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளார். இஸ்ரேலிய செய்தித் தொடர்பாளர் எய்லோன் லெவி, சமூக ஊடகங்களில் தெரிவித்த கருத்துக்கள் தொடர்பாக இங்கிலாந்து அரசாங்கத்துடனான சர்ச்சையைத் தொடர்ந்து அரசாங்கத்தால் இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளார். இங்கிலாந்து வெளியுறவுச் செயலர் Lord Cameron உடனான சமீபத்திய ஒன்லைன் தகராறுடன் அவர் தொடர்புப்பட்டிருந்தார். அவர் இடைநீக்கம் செய்யப்பட்டதை இஸ்ரேல் பிரதமர் அலுவலகம் பத்திரிகைக்கு உறுதி செய்துள்ளது. எப்படியிருப்பினும் இதற்கான காரணத்தை இஸ்ரேல் பிரதமர் அலுவலகம் இதுவரையில் தெரிவிக்கவில்லை. […]

பொழுதுபோக்கு

அஜித் தெலுங்கு தயாரிப்பாளரை தேடி ஓடியது 163 கோடிக்காகத்தானா? குட் பேட் அக்லி நியு அப்டேட்

  • March 22, 2024
  • 0 Comments

நடிகர் அஜித்குமார் நடிப்பில் தற்போது விடாமுயற்சி திரைப்படம் உருவாகி வருகிறது. மகிழ் திருமேனி இயக்கும் இப்படத்தில் ஹீரோயினாக திரிஷா நடிக்க, வில்லனாக ஆரவ் மற்றும் அர்ஜுன் நடிக்கின்றனர். படத்தை இந்த ஆண்டு இறுதிக்குள் திரைக்கு கொண்டு வர திட்டமிட்டுள்ளனர். விடாமுயற்சி படத்தின் படப்பிடிப்பு முடிவடையும் முன்னரே அஜித்தின் அடுத்த பட அப்டேட்டும் வெளியானது. அதன்படி அவரின் 63-வது படத்திற்கு குட் பேட் அக்லி என பெயரிடப்பட்டு உள்ளதாகவும், இப்படத்தை ஆதிக் ரவிச்சந்திரன் இயக்க உள்ளதாகவும் அறிவிக்கப்பட்டது. மேலும் […]

error: Content is protected !!