இலங்கை செய்தி

இலங்கையில் தகவல் வழங்குவோருக்கு வெகுமதி

  • March 22, 2024
  • 0 Comments

இலங்கையில் சட்டவிரோத துப்பாக்கிகள் மற்றும் கைக்குண்டுகள் தொடர்பில் தகவல்களை வழங்குவோருக்கான வெகுமதி தொகை அதிகரிக்கப்பட்டுள்ளது. பொலிஸ் மா அதிபர் தேசபந்து தென்னகோனின் தீர்மானத்தின் பிரகாரம் இந்த தொகை அதிகரிக்கப்பட்டுள்ளது. இதன்படி, ரீ56 ரக துப்பாக்கி குறித்து தகவல் அளிப்பவருக்கு 500,000 ரூபாய் வழங்கப்படவுள்ளது. அத்துடன், தானியங்கி ஆயுதங்கள் அல்லது கைத்துப்பாக்கிகளுக்கு 300,000 ரூபாவும், ரிவோல்வருக்கு 250,000 ரூபாவும் வெகுமதியாக வழங்கப்படும் என பொலிஸ் ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது.

இலங்கை

வவுனியாவில் வர்த்தக நிலையத்தில் இருந்து சடலம் ஒன்று மீட்பு!

  • March 22, 2024
  • 0 Comments

வவுனியா தோனிக்கல் ஆலயடி வீதியில் அமைந்துள்ள வர்த்தக நிலையத்தில் இருந்து ஆண் ஒருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளதாக வவுனியா பொலிஸார் தெரிவித்தனர். குறித்த நபர் கடந்த சில நாட்களாக சுகவீனமுற்று காணப்பட்ட நிலையிலேயே இன்று அதிகாலை தனது வர்த்தக நிலையத்தில் இருந்து சடலமாக மீட்கப்பட்டுள்ளார். 43 வயதுடைய இரண்டு பிள்ளைகளின் தந்தையான ரெ.நேசேந்திரன் என்பவரே இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டுள்ளார். இச்சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை வவுனியா பொலிஸாரால் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.  

வாழ்வியல்

ஒற்றைத் தலைவலி அலட்சியம் வேண்டாம்

  • March 22, 2024
  • 0 Comments

தீராத ஒற்றைத்தலைவலிக்காக மருத்துவமனை வந்தவரிடம் பரிசோதனை மேற்கொண்ட மருத்துவர்கள், அவரது மூளையில் நிறைந்திருந்த நாடாப்புழுக்களை கண்டு அதிர்ச்சி அடைந்தனர். நடப்பு வாழ்க்கைச் சூழலின் தலையாய உடல் உபாதைகளில் ஒன்றாக தலைவலி விளங்குகிறது. சூடான டீ/காபி, இசை, தூக்கம் அல்லது தலைவலி தைலம் என எளிமையான முறையில் அப்படியான தலைவலியை தாண்டி வருவோர் அதிகம். ஆனபோதும் மைக்ரேன் என்ற பெயரில் மண்டையிடியாய் வலி கண்டவர்கள் பாடு சொல்லி மாளாது. அப்படியானவர்கள் மருத்துவ உதவியை நாடுவது அவசியம். அமெரிக்காவில் அவ்வாறு […]

ஐரோப்பா

ரஷ்யா மற்றும் பெலாரஸில் இருந்து தானிய இறக்குமதிக்கு வரி விதிக்குமாறு உத்தரவு!

  • March 22, 2024
  • 0 Comments

ரஷ்யா மற்றும் பெலாரஸில் இருந்து தானிய இறக்குமதிக்கு வரி விதிக்க ஐரோப்பிய ஆணையம் அதன் உறுபு நாடுகளுக்கு உத்தரவிட்டுள்ளது. பிரஸ்ஸல்ஸில் நடந்த ஐரோப்பிய ஒன்றிய தலைவர்களின் உச்சிமாநாட்டின் தொடக்க நாளின் முடிவில் பேசிய வான் டெர் லேயன், மேற்படி தெரிவித்துள்ளார். இந்த நடவடிக்கை ரஷ்யாவின் தானியங்கள், எண்ணெய் வித்துக்கள் மற்றும் பெறப்பட்ட பொருட்களின் இறக்குமதி மூலம் ஐரோப்பிய ஒன்றிய சந்தையை சீர்குலைப்பதை தடுக்கும் எனக் கூறினார். “ஐரோப்பிய ஒன்றியத்திற்கு இந்த பொருட்களை ஏற்றுமதி செய்வதன் மூலம் கிடைக்கும் […]

விளையாட்டு

IPL 2024: குஜராத் டைட்டன்ஸ் அணியில் இணைந்த 5-வது தமிழ் வீரர்

  • March 22, 2024
  • 0 Comments

ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் குஜராத் டைட்டன்ஸ் அணிக்கு விளையாட தமிழ்நாடு வீரர் சந்தீப் வாரியர் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார். அந்த அணியின் நட்சத்திர வீரர் முகமது ஷமி காயம் காரணமாக விலகியுள்ள நிலையில் சந்தீப் வாரியருக்கு வாய்ப்பு கிடைத்துள்ளது. ஐபிஎல் தொடரில் அறிமுகமான முதல் சீசனிலேயே கோப்பையை வென்று அசத்திய அணி குஜராத் டைட்டன்ஸ். இந்தாண்டு தொடரில் அந்த அணியின் கேப்டனாக சுப்மன் கில் பொறுப்பேற்றுள்ளார். குஜராத் கேப்டனாக இருந்த ஹர்திக் பாண்டியா மும்பை அணிக்கு சென்றதால் கில் […]

ஐரோப்பா

சுவிஸில் வட்டி விகிதங்கள் வீழ்ச்சி – வங்கி வெளியிட்ட மகிழ்ச்சியான தகவல்

  • March 22, 2024
  • 0 Comments

சுவிஸ் மத்திய வங்கி வியாழனன்று அதன் முக்கிய வட்டி விகிதத்தை குறைப்பதாக அறிவித்துள்ளது. இது ஒரு ஆச்சரியமான நடவடிக்கையாகவும். சமீபத்திய மாதங்களில் குறைப்பை அறிவித்த முதல் பெரிய நிதி மையமாக சுவிட்சர்லாந்தை உருவாக்குகிறது. சுவிஸ் மத்திய வங்கி அதன் முக்கிய விகிதத்தை 1.75 சதவீதத்திலிருந்து 1.50 சதவீதமாக குறைத்தது. அதன் மார்ச் கூட்டத்தில், சுவிஸ் மத்திய வங்கி – சில நேரங்களில் எதிர்பாராத முடிவுகளுக்கு பெயர் பெற்றது. நாட்டில் பணவீக்கத்தைக் கட்டுப்படுத்த மத்திய வங்கியின் உந்துதலை SNB […]

உலகம்

அமெரிக்காவில் பன்றியின் சிறுநீரகத்தை நோயாளிக்கு பொருத்திய வைத்தியர்கள்!

  • March 22, 2024
  • 0 Comments

அமெரிக்காவின் பாஸ்டனில் உள்ள அறுவை சிகிச்சை நிபுணர்கள் உலகின் முதல் மரபணு ரீதியாக வடிவமைக்கப்பட்ட பன்றி சிறுநீரகத்தை வெற்றிகரமாக  பொருத்தி சாதனை படைத்துள்ளார். மாசசூசெட்ஸ் பொது மருத்துவமனையில் சிறுநீரக நோயால் பாதிக்கப்பட்ட நோயாளியான ரிச்சர்ட் ஸ்லேமனுக்கு இந்த அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்டுள்ளது. முன்னதாக, பன்றியின் சிறுநீரகங்கள் மற்றும் மூளை ஆகியன இறந்த நன்கொடையாளர்களுக்கு தற்காலிகமாக பொருத்தப்பட்டன. துரதிர்ஷ்டவசமாக, பன்றிகளிடமிருந்து இதய மாற்று அறுவை சிகிச்சை செய்த சில மாதங்களுக்குள் இரண்டு ஆண்கள் இறந்தனர். இந்நிலையிலேயே மேற்படி சிகிச்சை […]

ஆஸ்திரேலியா

ஆஸ்திரேலியாவில் புதிய அச்சுறுத்தல் – பொது மக்களுக்கு எச்சரிக்கை

  • March 22, 2024
  • 0 Comments

தலைநகர் மெல்போர்னில் தட்டம்மை நோயால் பாதிக்கப்பட்ட நபர் கண்டுபிடிக்கப்பட்டதனையடுத்து, மக்களை கவனமாக இருக்குமாறு சுகாதாரத்துறை எச்சரித்துள்ளது. அம்மை நோயால் பாதிக்கப்பட்ட வெளிநாட்டு சுற்றுலாப்பயணி ஒருவரால் இந்த நோய் தாக்கப்பட்டதாகவும், தென்கிழக்கு மெல்போர்னில் உள்ள மக்கள் மிகவும் கவனமாக இருக்குமாறும் தெரிவிக்கப்பட்டுள்ளது. தட்டம்மை நோயினால் பாதிக்கப்பட்ட சுற்றுலாப் பயணி அப்பகுதியில் 18 இடங்களுக்குச் சென்று மார்ச் 14 முதல் 19 வரை நாட்டில் தங்கியிருந்ததாகக் குறிப்பிடப்படுகிறது. அம்மை நோய் மிக விரைவாக பரவும் அபாயம் உள்ளதால், மக்கள் இது […]

தென் அமெரிக்கா

மெக்சிகோ எல்லையில் வாகனம் ஒன்றுக்குள் இருந்து 10 பேரின் சடலங்கள் மீட்பு!

  • March 22, 2024
  • 0 Comments

வடக்கு மெக்சிகோ எல்லை மாநிலமான நியூவோ லியோனில் உள்ள ஆய்வாளர்கள் வாகனம் ஒன்றுக்குள் இருந்து   10 பேரின் சடலங்களை மீட்டுள்ளதாக அறிவித்துள்ளனர். மான்டேரிக்கு வெளியே உள்ள பெஸ்குவேரியா பகுதியில் எரிந்த நிலையில் காணப்பட்ட வாகனம் ஒன்றுக்குள் இருந்து ஒரு உடலையும் மூன்று மண்டை ஓடுகளையும் முதலில் கண்டுபிடித்ததாக அரசு வழக்கறிஞர்கள் தெரிவித்தனர். குறித்த 10 பேரும் எப்படி உயிரிழந்துள்ளார்கள் என்பது குறித்த தகவல்கள் எதுவும் வெளியாகவில்லை. எத்தனை பேர் பாதிக்கப்பட்டார்கள், எப்படி இறந்தார்கள் என்பதைத் தீர்மானிக்க விசாரணைகள் […]

ஐரோப்பா

அதிக அளவில் பேப் 3000 ரக வெடிகுண்டுகளை உற்பத்தி செய்யும் ரஷ்யா

  • March 22, 2024
  • 0 Comments

ரஷ்யாவின் நிஸ்னி நவ்கோராடு பகுதியில் உள்ள ஆயுத தொழிற்சாலையில் பேப் 3000 ரக விமானத்தின் மூலம் வீசக்கூடிய வெடிகுண்டுகள், அதிக எண்ணிக்கையில் தயாரிக்கப்பட்டு வருவதாக தெரிவிக்கப்படுகின்றது. அந்நாட்டின் பாதுகாப்புத்துறை அமைச்சர் செர்கீ ஷோய்கு இதனை தெரிவித்தார். ஆயுத தொழிற்சாலையை ஆய்வு செய்த அவர், ரஷ்ய ராணுவத்துக்கான வெடிபொருள்கள் உற்பத்தி 22 சதவீதம் அதிகரித்துள்ளதாகத் தெரிவித்தார். உக்ரைனுடனான போரில் ஈடுபட்டுள்ள ராணுவத்தினருக்கு வெடிகுண்டுகள் உள்ளிட்ட ஆயுதங்களைத் தடையில்லாமல் போதுமான அளவுக்கு வழங்கும் வகையில், உற்பத்தியை அதிகரித்துள்ளதாகவும் அவர் தெரிவித்தார

error: Content is protected !!