இலங்கை

ஈஸ்டர் ஞாயிறு குண்டுத் தாக்குதல்: மைத்திரிபாலவிடம் இருந்து வாக்குமூலம் பதிவு

சுமார் 6 மணித்தியாலங்கள் வாக்குமூலம் பதிவு செய்த பின்னர், முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன குற்றப் புலனாய்வுத் திணைக்களத்திலிருந்து (CID) வெளியேறினார். கண்டியில் அவர் வழங்கிய வாக்குமூலம் தொடர்பில் இன்று காலை 10.30 மணியளவில் குற்றப் புலனாய்வுப் பிரிவினரிடம் ஆஜராகியிருந்தார். கடந்த 21ஆம் திகதி ஈஸ்டர் ஞாயிறு குண்டுத் தாக்குதல்களுடன் தொடர்புடையவர்களை தமக்குத் தெரியும் என முன்னாள் ஜனாதிபதி கண்டியில் தெரிவித்திருந்தமை தொடர்பில் அவசர விசாரணைகளை மேற்கொள்ளுமாறு பொது பாதுகாப்பு அமைச்சர் திரன் அலஸ் பொலிஸ் மா […]

இலங்கை

இலங்கையின் பல பகுதிகளில் இடியுடன் கூடிய மழைக்கு சாத்தியம்!

  • March 25, 2024
  • 0 Comments

இலங்கையின் பல பகுதிகளில் இடியுடன் கூடிய மழை பெய்யும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வுக்கூறியுள்ளது. தென் மாகாணம் மற்றும் மொனராகலை மாவட்டங்களில் 100 மில்லி மீற்றர் மழைவீழ்ச்சியை எதிர்பார்க்கலாம் எனவும் முன்னிறிவிக்கப்பட்டுள்ளது. மேற்கு, சபரகமுவ, தெற்கு, மத்திய மற்றும் வட மேற்கு மாகாணங்களில் பல இடங்களில் மாலை அல்லது இரவு வேளைகளில் இடியுடன் கூடிய மழை பெய்யும் என்று வானிலை ஆய்வு துறை கூறுகிறது. இதற்கிடையில், இடியுடன் கூடிய மழை மற்றும் மின்னல் தாக்கம் காரணமாக ஏற்படக்கூடிய  […]

ஆசியா

இஸ்ரேளுக்கு கடும் கண்டனம் வெளியிட்ட பிரான்ஸ்

இஸ்ரேலிய பிரதம மந்திரி பெஞ்சமின் நெதன்யாகுவிடம், தெற்கு காஸா நகரமான ரஃபாவிலிருந்து மக்களை கட்டாயமாக மாற்றுவது “போர் குற்றமாக” இருக்கும் என்று பிரெஞ்சு ஜனாதிபதி இம்மானுவேல் மக்ரோன் தெரிவித்துள்ளார். இரு தலைவர்களுக்கும் இடையே தொலைபேசி உரையாடல் ஒன்று இடம்பெற்றதாகவும் தெரிவிக்கப்படுகிறது. புதிய குடியேற்றங்களுக்காக ஆக்கிரமிக்கப்பட்ட மேற்குக் கரையில் 800 ஹெக்டேர் நிலத்தை கைப்பற்றிய இஸ்ரேலின் அறிவிப்பை மக்ரோன் “கடுமையாகக் கண்டித்துள்ளார்”என்று அவரது அலுவலகம் தெரிவித்துள்ளது.

ஐரோப்பா

மொஸ்கோ தாக்குதல் : நீதிமன்றத்தில் முன்னிலையான சந்தேகநபர்கள்!

  • March 25, 2024
  • 0 Comments

மொஸ்கோவில் நடத்தப்பட்ட பயங்கரவாத தாக்குதல் சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்டவர்களில் இருவர் தங்களின் குற்றத்தை ஒப்புக்கொண்டுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. கைது செய்யப்பட்ட அனைவரும் நீதிமன்றத்தில் இன்று (25.03) முன்னிலையான நிலையில் அவர்கள் தங்கள் குற்றத்தை ஒப்புக் கொண்டதாக கூறப்படுகிறது. மாஸ்கோவின் குரோக்கஸ் சிட்டி ஹாலில் நடந்த தாக்குதலில் கொல்லப்பட்டவர்களில் குறைந்தது 03 குழந்தைகளும் உள்ளடங்குவதாக புலனாய்வாளர்கள் தெரிவித்துள்ளனர். பலியானவர்கள் இன்னும் அடையாளம் காணப்படவில்லை என்றும் அதிகாரிகள் குறிப்பிட்டுள்ளனர்.  

இந்தியா

கேரளாவில் 2 வயது மகளை அடித்தே கொன்ற கொடூர தந்தை!!

  • March 25, 2024
  • 0 Comments

கேரள மாநிலம் மலப்புரத்தில் 2 வயது மகளை தந்தையே அடித்துக் கொன்ற கோடூரம் அரங்கேறி இருக்கிறது. அந்தக் குரூர தந்தையை மலப்புரம் பொலிஸார் கைது செய்து விசாரித்து வருகிறார்கள். மலப்புரம் உதிரும்பொயிலைச் சேர்ந்தவர் முகமது ஃபைஸ். இவர் தான் தனது இரண்டு வயது மகளை அடித்துக் கொன்ற அந்த குரூர தந்தை. இது தொடர்பாக அந்தக் குழந்தையின் தாய் மற்றும் அவரது உறவினர்கள் அளித்த புகாரின் பேரில் ஃபைஸை பொலிஸார் கைது செய்துள்ளனர். பொலிஸ் நடத்திய முதற்கட்ட […]

இந்தியா

உஜ்ஜைனி கோயிலில் பாரிய தீ விபத்து: 13 அர்ச்சகர்கள் படுகாயம்

மத்தியப் பிரதேச மாநிலம், உஜ்ஜைனில் உள்ள மகாகாளேஸ்வரர் கோயிலில் இன்று காலை கர்ப்பகிரகத்தில் திடீரென ஏற்பட்ட தீவிபத்து சிக்கி 13 அர்ச்சகர்கள் காயமடைந்துள்ளனர். அவர்கள் அனைவரும் மாவட்ட மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவதாக ஆட்சியர் நீரஜ் குமார் சிங் தெரிவித்துள்ளார். மேலும் விபத்து தொடர்பாக விசாரணைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. ‘குலால்’ சமய விழாவின் ஒரு பகுதியாக ஹோலியின் போது பயன்படுத்தப்படும் வண்ணப் பொடி வீசப்பட்டபோது தீ விபத்து ஏற்பட்டதாக நேரில் பார்த்தவர்கள் தெரிவித்துள்ளனர். இதனிடையே காயமடைந்து இந்தூரில் உள்ள […]

பொழுதுபோக்கு

தன் நீண்ட நாள் காதலரான மத்யாஸ் போவை கரம் பிடித்தார் தாப்ஸி!

  • March 25, 2024
  • 0 Comments

நடிகை தாப்ஸி தனது நீண்ட நாள் காதலரான மத்யாஸ் போவை கடந்த மார்ச் 23 அன்று உதய்ப்பூரில் திருமணம் செய்துள்ளார். நண்பர்கள், உறவினர்கள் என நெருங்கியவர்கள் மட்டுமே இதில் கலந்து கொண்டிருக்கின்றனர். கடந்த பிப்ரவரி மாதத்தில் நடிகை தாப்ஸிக்கும் அவரது காதலர், முன்னாள் பேட்மிண்டன் ப்ளேயர் மத்யாஸ் போவுக்கும் விரைவில் திருமணம் நடக்க இருப்பதாக செய்திகள் வெளியானது. ஆனால், அந்த செய்தியை தாப்ஸி மறுத்தார். இப்படியான சூழ்நிலையில்தான் கடந்த மார்ச் 23 அன்று இந்த ஜோடிக்கும் உதய்ப்பூரில் […]

இலங்கை

கெஹலியவின் பிணை கோரிக்கை தொடர்பில் நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவு!

  • March 25, 2024
  • 0 Comments

முன்னாள் சுகாதார அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்லவின் பிணை கோரிக்கை மீதான வழக்கு இன்று (25.3) கொழும்பு உயர் நீதிமன்றத்தில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது. இதன்போது குறித்த வழக்கை எதிர்வரும் நான்காம் திகதி மீள அழைக்க நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.

ஐரோப்பா

சர்வதேச நட்பு நாடுகளுக்கு உக்ரைன் அவசர அழைப்பு

திங்கள்கிழமை காலை கிய்வ் மீது ரஷ்ய ஏவுகணைத் தாக்குதலைத் தொடர்ந்து தனது நாட்டிற்கு அதிக வான் பாதுகாப்புகளை வழங்க சர்வதேச நட்பு நாடுகளுக்கு உக்ரைனின் வெளியுறவு மந்திரி டிமிட்ரோ குலேபா அழைப்பு விடுத்துள்ளார். “இது உக்ரைனுக்கு அவசரமாக அதிக வான் பாதுகாப்பு தேவை என்பதை நினைவூட்டுகிறது, குறிப்பாக பேட்ரியாட் அமைப்புகள் மற்றும் ரஷ்ய தாக்குதலை முறியடிக்கும் திறன் கொண்ட ஏவுகணைகள்” என்று அவர் கூறியுள்ளார்.

இலங்கை

பேருவளை – வகுப்பறையை உடைத்து மடிக்கணினிகளை திருடிய மாணவர்கள் கைது

  • March 25, 2024
  • 0 Comments

பேருவளை பகுதியில் உள்ள பாடசாலையொன்றின் ஸ்மார்ட் வகுப்பறையை உடைத்து 12 மடிக்கணினிகளைத் திருடிய அதே பாடசாலையைச் சேர்ந்த இரு மாணவர்கள் உட்பட ஐவர் இன்று (25) கைது செய்யப்பட்டுள்ளதாக பேருவளை பொலிஸார் தெரிவித்தனர். அடுத்த வருடம் சாதாரணத்தர பரீட்சைக்கு தோற்றவுள்ள 16 வயதுடைய மாணவர்கள் இருவர் மற்றும் பாணந்துறை மற்றும் பாதுக்க பிரதேசங்களில் வசிக்கும் மூவர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். கடந்த பெப்ரவரி மாதம் போயா தினத்தன்று மடிக்கணினிகள் திருடப்பட்டுள்ளதாக முறைப்பாடு கிடைத்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். […]

error: Content is protected !!