நீர்கொழும்பில் 53 மசாஜ் நிலையங்கள் முற்றுகை!! இரு பெண்களுக்கு எச்.ஐ.வி. தொற்று உறுதி
நீர்கொழும்பு பொலிஸ் பிரிவுக்குட்பட்ட 53 மசாஜ் நிலையங்கள் சோதனையிடப்பட்டு உடனடியாக அமுலுக்கு வரும் வகையில் மூடப்பட்டுள்ளன. அந்த மசாஜ் மையங்களின் பணிப்பெண்களில் இருவருக்கு எச்.ஐ.வி. தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளதாக பொலிசார் தெரிவித்தனர். முறையான அனுமதியின்றி மசாஜ் நிலையங்கள் இயங்கி வருவதும் தெரியவந்துள்ளது. நீர்கொழும்பு பொலிஸ் பிரிவில் இயங்கும் 53 மசாஜ் நிலையங்கள் கடந்த வாரம் முதல் நீர்கொழும்பு பொலிஸாரால் அவசர பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டுள்ளன. நீர்கொழும்பு பிரிவுக்கு பொறுப்பான அதிகாரி, பொலிஸ் அத்தியட்சகர் எரிக் பெரேரா தலைமையில் […]













