ஐரோப்பா

ரஷ்யாவின் தீவிர தாக்குதல்: 31,000 உக்ரைன் வீரர்கள் பலி

ரஷ்யாவின் முழு அளவிலான படையெடுப்பில் இருந்து 31,000 உக்ரேனிய வீரர்கள் கொல்லப்பட்டதாக ஜனாதிபதி வோலோடிமிர் ஜெலென்ஸ்கி தெரிவித்துள்ளார். இது ஒரு வருடத்திற்கும் மேலான் முதல் அதிகாரப்பூர்வ எண்ணிக்கை ஆகும் ரஷ்ய இராணுவத் திட்டமிடலுக்கு உதவும் என்பதால் காயமடைந்தவர்களின் எண்ணிக்கையை தன்னால் வெளியிட முடியாது என்று கிய்வில் நடந்த செய்தியாளர் கூட்டத்தில் ஜெலென்ஸ்கி கூறியுள்ளார். மேலும் ரஷ்யா இராணுவ இழப்புகளை வெளியிடவில்லை, அது இரகசியமாக கருதுகிறது என்பதும் குறிப்பிடத்தக்கது.

பொழுதுபோக்கு

நடிகருடன் ரகசிய உறவில் இருக்கும் விவாகரத்தான நடிகை? வருடத்திற்கு ஒரு ஆளாம்…

  • February 26, 2024
  • 0 Comments

ஜாலியான படத்தில் சேர்ந்து நடித்ததில் இருந்தே தன் பக்கம் அந்த இளம் நடிகரை கவர்ந்து விட்டாராம் அந்த பிரபல நடிகை. அவரது கவனிப்பில் மயங்கிய நடிகர் இதுவரை காதல் என்கிற பெயரில் இன்னொரு நடிகையுடன் உல்லாசமாக வாழ்ந்த ரகசிய வாழ்க்கையை உதறித்தள்ளி இருப்பதாக ஷாக்கிங் தகவல்கள் கசிந்துள்ளன. யாருக்கும் தெரியாமல் நாம வாழலாம் என நடிகை சொன்ன மேட்டர் பிடித்துப் போய் தான் அந்த நடிகையுடன் ரகசிய குடித்தனத்தையே தற்போது அந்த நடிகர் நடத்தி வருகிறார் என்கின்றனர். […]

ஆசியா

பங்களாதேஷில் காட்டு யானைகளை சிறைப்பிடிக்க தடை!

  • February 26, 2024
  • 0 Comments

காட்டு யானைகளை அடக்கவும், அவற்றை சிறைபிடிக்கவும் தடை விதித்து வங்கதேச உயர் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது. காட்டு யானைகள் பங்களாதேஷில் மிகவும் ஆபத்தான உயிரினங்களாக குறிப்பிடப்பட்டுள்ளன. பங்களாதேஷில் தற்போது 200 யானைகள் உள்ளன, அவற்றில் பாதி அடக்கமான யானைகள். அடக்க யானைகளுக்கான உரிமம் பெற்ற சிலர், அந்த அனுமதியை தவறாகப் பயன்படுத்தி, பிச்சை எடுப்பது, சர்க்கஸ் அல்லது தெருக்காட்சிகள், விறகு இழுத்தல் போன்ற கடும் இழுபறி வேலைகளுக்கு கால்நடைகளை பயன்படுத்துவதாக கூறப்படுகிறது. எனவே, அந்த உரிமங்களை ரத்து […]

இலங்கை

இலங்கை இன்று இப்படி இருப்பதற்கு யுத்தத்தை ஆரம்பித்தவர்களுக்கும் பொறுப்புள்ளது – நாமல்!

  • February 26, 2024
  • 0 Comments

இலங்கை இன்று இந்த நிலையில் இருப்பதற்கு 75 வருடகால சாபம் என்று கூறுபவர்கள், 80களில் இடம்பெற்ற கலவரம், 60 ஆயிரம் இளைஞர்களை கொன்றது உள்ளிட்ட பல்வேறு விடயங்களுக்கும் பொறுப்பேற்க வேண்டும் என நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். கொள்ளுப்பிட்டியில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்துகொண்டு கருத்து வெளியிட்ட அவர் மேற்படி கூறியுள்ளார். இதன்போது மேலும் கருத்து வெளியிட்ட அவர், இந்த நாட்டில் 75 வருட சாபம் என்று பேசுபவர்கள், 88-89 இளைஞர்களை கொன்றவர்கள், 30 வருட கால […]

இலங்கை

தெற்கு அதிவேக நெடுஞ்சாலையில் பயங்கர விபத்து -ஒருவர் பலி, மூவர் படுகாயம்!

  • February 26, 2024
  • 0 Comments

தெற்கு அதிவேக நெடுஞ்சாலையில் கொட்டாவ மற்றும் கஹதுடுவ ஆகிய இடங்களுக்கு இடையிலான 1 கட்டைக்கு அருகில் இன்று (26) அதிகாலை பயங்கர விபத்து இடம்பெற்றுள்ளது. சிறிய லொறி ஒன்று முன்னால் சென்ற லொறியுடன் மோதியதில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளதுடன், சிறிய லொறியின் சாரதி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் உயிரிழந்துள்ளார்.விபத்தில் படுகாயமடைந்த 3 பேர் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர். அவர்களில் ஆபத்தான நிலையில் இருந்த சாரதியே உயிரிழந்துள்ளார். ரத்கமவில் இருந்து பேலியகொட மீன் சந்தையில் மீன் கொள்வனவு செய்யச் […]

இலங்கை

இலங்கை சபாநாயகருக்கு எதிராக நம்பிக்கையில்லா பிரேரணை சமர்ப்பிப்பு!

  • February 26, 2024
  • 0 Comments

இலங்கை சபாநாயகர் மகிந்த யாப்பா அபேவர்த்தனவிற்கு எதிராக ஐக்கிய மக்கள் சக்தியினால் நம்பிக்கையில்லா பிரேரணைக் கொண்டுவரப்பட்டுள்ளது. சபாநாயகர் பாராளுமன்றம் மற்றும் அரசியலமைப்பின் நம்பிக்கையை மீறியதாக குற்றம் சாட்டியே மேற்படி பிரேரணை கொண்டுவரப்பட்டுள்ளது. எதிர்க்கட்சித் தலைவர் திரு.சஜித் பிரேமதாச தலைமையில், நாடாளுமன்ற உறுப்பினர்களான, சுமந்திரன், லக்ஸ்மன் கிரியெல்ல, ஜி்.எல்.பீரிஸ், திஸ்ஸ அத்தநாயக்க சந்திம வீரக்கொடி மற்றும் திரு.ஷான் விஜயலால் டி சில்வா ஆகியோர் இந்த பிரேரணையை கொண்டுவந்துள்ளனர்.

மத்திய கிழக்கு

ஹமாஸின் பிடியில் இருந்த இஸ்ரேலிய ராணுவ வீரர் படுகொலை…

  • February 26, 2024
  • 0 Comments

இஸ்ரேல் மீது கடந்த ஆண்டு அக்டோபர் 7ம் திகதி ஹமாஸ் பயங்கரவாத அமைப்பு நடத்திய கொடூர தாக்குதலில், 1,200 இஸ்ரேல் மக்கள் உயிரிழந்தனர். 240 பேர் பணய கைதிகளாக பிடித்து செல்லப்பட்டனர். அவர்களின் பிடியில் உள்ள 134 பேரில் 31 பேர் உயிரிழந்து விட்டனர் என்று இஸ்ரேல் சமீபத்தில் அறிவித்தது. இந்த தாக்குதலுக்கு இஸ்ரேலும் பதிலடி கொடுத்து வருகிறது. இதனால், பாலஸ்தீனர்களின் மொத்த உயிரிழப்பு 29,092 ஆக உள்ளது என்று காசா சுகாதார அமைச்சகமும் தெரிவித்து இருந்தது. […]

இலங்கை

காணி உரிமைக்கு பதிவு செய்ய அவசரத் தொலைபேசி இலக்கம் அறிமுகம்

  • February 26, 2024
  • 0 Comments

“உறுமய” தேசிய வேலைத் திட்டத்தின் ஊடாக மக்கள் தமது காணியின் முழுமையான உரிமையை அனுபவிக்கும் வாய்ப்பை வழங்கும் நோக்கில் அதற்காக விண்ணப்பிப்பதற்கு அவசரத் தொலைபேசி இலக்கமொன்று அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. தினமும் காலை 8.30 மணி முதல் இரவு 8.30 மணி வரை ஜனாதிபதி அலுவலகம், உறுமய தேசிய செயற்பாட்டு அலுவலகம், 1908 என்ற அவசரத் தொலைபேசி இலக்கம் மற்றும் 0114 354600/ 0114 354601 என்ற தொலைபேசி இலக்கத்துடன் தொடர்பு கொண்டு பொதுமக்கள் தமது கோரிக்கைகளைப் பதிவு செய்வதற்கான […]

இலங்கை

இலங்கைக்கு வருமானத்தை தேடி தரும் இளநீர்!

  • February 26, 2024
  • 0 Comments

இலங்கையில் ஏற்றுமதியை நோக்காகக் கொண்டு ஏறக்குறைய பத்தாயிரம் இளநீர் கன்றுகள் நாட்டப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. ஐக்கிய அரபு இராச்சியத்தில் இலங்கை ஆரஞ்சுக்கு அதிக கிராக்கி காணப்படுவதாகவும், மேலும், பல நாடுகளில் இருந்தும் எமது நாட்டில் உற்பத்தி செய்யப்படும் ஆரஞ்சுக்கு அதிக கிராக்கி இருப்பதாக விவசாய அமைச்சு அறிவித்துள்ளது. வாரத்திற்கு சுமார் 252,000 இளநீர் நாட்டிலிருந்து ஐக்கிய அரபு எமிரேட்ஸுக்கு ஏற்றுமதி செய்யப்படுகின்றன. 2022 ஆம் ஆண்டில் ஆரஞ்சு ஏற்றுமதி மூலம் இரண்டு பில்லியன் ரூபா வருமானம் ஈட்டப்பட்டுள்ளது, கடந்த […]

இலங்கை

இலங்கையில் பொறுப்பற்ற வகையில் செயல்படும் பொதுப்பணித்துறை அதிகாரிகள் : வெளியான கருத்துக்கணிப்பு!

  • February 26, 2024
  • 0 Comments

பொதுப்பணித்துறை அதிகாரிகளின் தொலைபேசி எண்களில் 49%, அதாவது பாதி எண்கள் செயல்படாத எண்கள் என ஒரு கணக்கெடுப்பில் தெரியவந்துள்ளது. பேராதனைப் பல்கலைக்கழகத்தின் பொருளாதாரம் மற்றும் புள்ளிவிபரவியல் திணைக்களத்தினால் தீவு முழுவதையும் உள்ளடக்கிய இந்த கணக்கெடுப்பு நடத்தப்பட்டுள்ளது. தீவகத்தின் ஒவ்வொரு பிரதேச செயலகத்திலும் கடமையாற்றும் கிராம உத்தியோகத்தர், சமுர்த்தி அபிவிருத்தி உத்தியோகத்தர் மற்றும் அபிவிருத்தி உத்தியோகத்தர்களின் பிரதேச செயலகத்தின் இணையத்தளத்தில் வெளியிடப்பட்டுள்ள தொலைபேசி இலக்கங்களைக் கருத்தில் கொண்டு இந்த கணக்கெடுப்பு மேற்கொள்ளப்பட்டுள்ளது. கணக்கெடுக்கப்பட்ட 589 தொலைபேசி எண்களில் 286, […]

error: Content is protected !!