ஆசியா

நேப்பாளத்தில் கனமழை, நிலச்சரிவில் சிக்கி 11 பேர் உயிரிழப்பு!

நேப்பாளத்தில் கடந்த 36 மணிநேரத்தில் குறைந்தது 11 பேர் உயிரிழந்தனர்.அங்குப் பெய்த கனமழை நிலச்சரிவுகளையும் திடீர் வெள்ளத்தையும் ஏற்படுத்தியது. முக்கிய நெடுஞ்சாலைகளும் சாலைகளும் வழிமறிக்கப்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

எட்டுப் பேரைக் காணவில்லை. அவர்கள் வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டனர் அல்லது நிலச்சரிவுகளில் புதையுண்டனர் என்று காவல்துறைப் பேச்சாளர் டான் பஹடுர் கார்கி கூறினார்.காயமடைந்த 12 பேர் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்றுவருவதாகவும் அவர் சொன்னார்.“மீட்புப் பணியாளர்கள் நிலச்சரிவுகளை அகற்றி, சாலைகளைத் திறக்க முயற்சி செய்கின்றனர்,” என்று திரு கார்கி ராய்ட்டர்ஸ் செய்தி நிறுவனத்திடம் கூறினார்.இடிபாடுகளை அகற்ற கனமான கருவிகள் பயன்படுத்தப்படுவதாகவும் அவர் சொன்னார்.

கோசி ஆற்றுநீர் அதிகரித்துவருவதாகவும், உத்தேச வெள்ளங்கள் குறித்து எச்சரிக்கையாக இருக்கும்படி குடியிருப்பாளர்களைக் கேட்டுக்கொண்டுள்ளதாகவும் ‘சுன்சரி’ மாவட்டத்தின் மூத்த அதிகாரியான பெட் ராஹ் ஃபுயால், ராய்ட்டர்ஸ் செய்தி நிறுவனத்திடம் கூறினார்.

தண்ணீரை வெளியேற்ற, கோசி அணைக்கட்டின் 56 மடைவாய்களும் திறக்கப்பட்டதாக அதிகாரிகள் கூறினர்.வழக்கமாக, 10 முதல் 12 மடைவாய்கள் மட்டுமே திறக்கப்பட்டிருக்கும்.‘நாராயணி’, ‘ராப்டி’, ‘மஹாகலி’ ஆகிய ஆறுகளிலும் நீர் நிலைகள் அதிகரித்துவருவதாக அவர்கள் கூறினர்.

காட்மாண்டு பகுதியில், சில ஆறுகளில் நீர் அளவுக்கு அதிகமாக உயர்ந்து பொங்கி வழிந்தோடியதில், சாலைகளில் வெள்ளம் ஏற்பட்டு, பல வீடுகள் மூழ்கின.

கடந்த ஜூன் மாத நடுப்பகுதியிலிருந்து நேப்பாளம் முழுதும் ஏற்பட்ட நிலச்சரிவுகள், வெள்ளங்கள், மின்னல் தாக்குதல்கள் ஆகியவற்றில், குறைந்தது 50 பேர் உயிரிழந்து விட்டனர்.இதற்கிடையே, பங்ளாதேஷில் ஏற்பட்ட வெள்ளத்தால் இரண்டு மில்லியன் பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.வெள்ளத்தில் உயிரிழந்தோரின் எண்ணிக்கை எட்டுக்கு அதிகரித்துள்ளதாகவும் அதிகாரிகள் தெரிவித்தனர்.

Mithu

About Author

You may also like

ஆசியா செய்தி

கொரிய நாட்டவர் போல் தெரிவதற்காக நபர் ஒருவர் செய்த அதிர்ச்சி செயல்

தாய்லந்தைச் சேர்ந்த போதைப்பொருள் கடத்தல்காரர் ஒருவரின் செயற்பாடு அதிர்ச்சியை ஏற்பட்டுள்ளது. அவர் கொரியாவைச் சேர்ந்த கவரத்தக்க நபர் போல் தோற்றமளிக்க பல்வேறு ஒட்டுறுப்பு அறுவைச் சிகிச்சைகளைச் (plastic
ஆசியா செய்தி

25 போர் விமானங்கள், 03 போர் கப்பல்கள் மூலம் தைவானை ஊடுறுத்த சீனா!

வொஷிங்கடனுக்கும் பீஜிங்கிற்கும் இடையிலான பதற்றங்கள் அதிகரித்துள்ள நிலையில், சீனா இன்றைய தினம் தைவானுக்கு தனது 25 போர் விமானங்கள் மற்றும் மூன்று போர்கப்பல்களை அனுப்பியதாக பாதுகாப்பு அமைச்சகம்