மேற்கிந்தியத் தீவுகளை வீழ்த்தியது இலங்கை அணி!
மேற்கிந்தியத் தீவுகள் அணிக்கு எதிரான முதலாவது ஒருநாள் போட்டியில் இலங்கை அணி, 41 ஓட்டங்களால் வெற்றி பெற்றுள்ளது.
ஜமைக்கா, கிங்ஸ்டனில் உள்ள சபீனா பார்க் மைதானத்தில் நடைபெற்ற இப்போட்டியில நாணயச் சுழற்சியில் வெற்றி பெற்ற மேற்கிந்திய தீவுகள் அணி, முதலில் பந்து வீச்சை தேர்வு செய்தது.
இதற்கமைய துடுப்பெடுத்தாடிய இலங்கை அணி, நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவர்கள் நிறைவில் 7 விக்கெட்டுகளை இழந்து 303 ஓட்டங்களைப் பெற்றது.
குசல் மெண்டிஸ் 62 பந்துகளில் 72 ஓட்டங்களையும், பெதும் நிஸ்ஸங்க 66 ஓட்டங்களையும் பெற்று அணிக்கு வலு சேர்த்தனர்.
304 ஓட்டங்கள் என்ற இலக்கை நோக்கிப் பதிலுக்குத் துடுப்பெடுத்தாடிய மேற்கிந்தியத் தீவுகள் அணி, இலங்கை அணியின் துல்லியமான பந்துவீச்சை எதிர்கொள்ள முடியாமல் 49.2 ஓவர்களில் 262 ஓட்டங்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து தோல்வியடைந்தது.
துஷ்மந்த சமீர 10 ஓவர்கள் பந்துவீசி 67 ஓட்டங்களுக்கு 4 விக்கெட்டுகளைக் கைப்பற்றினார்.
இந்த வெற்றியின் மூலம் 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் இலங்கை அணி 1-0 என முன்னிலை வகிக்கின்றது.
2ஆவது ஒருநாள் கிரிக்கெட் போட்டி எதிர்வரும் 07 ஆம் திகதி நடைபெறவுள்ளது.





