இலங்கை

இலங்கை – கோட்டாபயவிற்கு நடந்தது அநுரவிற்கும் நடக்கலாம் – முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினரின் சூட்சும பதில்!

ஜனாதிபதித் தேர்தலுக்குப் பின்னர் ஜனாதிபதி அனுரகுமார திஸாநாயக்கவின் அண்மைக்கால தீர்மானங்கள், முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தனது தேர்தலுக்குப் பின்னர் எடுத்த தீர்மானங்களுக்கு நிகரானவை என முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் மஹிந்தானந்த அளுத்கமகே தெரிவித்துள்ளார்.

“கோட்டாபய ராஜபக்ச ஜனாதிபதியாக தெரிவு செய்யப்பட்டவுடன், அவரும் ஜனாதிபதி அலுவலகத்திற்கு சொந்தமான 993 வாகனங்களை ஏனைய திணைக்களங்களுக்கு பகிர்ந்தளித்தார். மதிய உணவு இடைவேளைக்கு ஒதுக்கப்பட்ட நேரத்தையும் குறைத்து, பால் தேநீருக்குப் பதிலாக சாதாரண தேநீரை வழங்கினார், ஜனாதிபதி மாளிகைக்குப் பதிலாக சிறிய வீடொன்றில் தங்கியிருந்தார்” என முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் சுட்டிக்காட்டினார்.

மக்களின் அதிக எதிர்பார்ப்புகளின் அடிப்படையில் அரசாங்கம் உருவாக்கப்பட்டாலும், அவ்வாறான அரசாங்கத்தை முன்னெடுத்துச் செல்வது கடினம் எனத் தெரிவித்த மஹிந்தானந்த அளுத்கமகே, கோட்டாபய ராஜபக்ஷவுக்கும் இதுவே நேர்ந்தது.

ஜனாதிபதித் தேர்தலில் முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவுக்கு ஆதரவளிப்பதாக உறுதியளித்த சகலருடனும் இணைந்து பரந்த எதிர்க்கட்சியொன்றை உருவாக்குவதற்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாகவும் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் தெரிவித்தார்.

எதிர்வரும் பொதுத் தேர்தலை எதிர்கொள்ள முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தலைமையில் புதிய கூட்டணி அமைக்கப்படும் என அவர் மேலும் தெரிவித்தார்.

ரணில் விக்கிரமசிங்க கூட்டணிக்கு தலைமை தாங்கினாலும், பொதுத் தேர்தலில் போட்டியிடப் போவதில்லை, தேசியப்பட்டியல் ஊடாக நாடாளுமன்றத்துக்கு செல்ல மாட்டார் என அவர் ஏற்கனவே அறிவித்துள்ளார் என மஹிந்தானந்த அளுத்கமகே மேலும் தெரிவித்துள்ளார்.

VD

About Author

You may also like

அரசியல் இலங்கை

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதிய உதவிச்செயற்திட்டம் மார்ச் 20 ஆம் திகதி பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிக்கப்படும்

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதியத்தின் உதவிச்செயற்திட்டத்தை எதிர்வரும் 20 ஆம் திகதி நாணய நிதியப் பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிப்பதற்கு எதிர்பார்த்திருப்பதாக சர்வதேச நாணய நிதியத்தின் நிறைவேற்றுப்பணிப்பாளர் கிறிஸ்டலினா
இலங்கை செய்தி

இலங்கையில் பெண்களுக்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரிப்பு!

இலங்கையில் பெண்களுக்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரிப்பு! இலங்கையில் பெண்களிற்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. பெண் பாராளுமன்ற உறுப்பினர்கள் குழு பெண்களிற்கு எதிரான சைபர்