இலங்கை

தமிழ் சிங்கள புத்தாண்டு – இலங்கையில் எரிபொருள் விநியோகம் தொடர்பில் வெளியான தகவல்

தமிழ் சிங்கள புத்தாண்டு கொண்டாட்டத்தின் போது சிபெட்கோ எரிபொருள் நிலையங்களினால் தொடர்ந்தும் எரிபொருள் விநியோகம் செய்வதற்கு தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளதாக இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபனம் தெரிவித்துள்ளது.

நாட்டின் எரிபொருள் தேவையை பூர்த்தி செய்வதற்காக, பிரதான முனையங்கள் மூலம் எரிபொருள் இருப்புக்களை இறக்குமதி செய்து, கிடங்குகளில் போதுமான இருப்புக்களை பராமரிக்க நிறுவனம் நடவடிக்கை எடுத்துள்ளது.

அத்துடன், எரிபொருள் இருப்புக்களை பராமரிப்பது தொடர்பாக அனைத்து எரிபொருள் நிலைய உரிமையாளர்களுக்கும் அறிவித்தல் விடுக்கப்பட்டுள்ளது.

வினியோகஸ்தர்களின் எரிபொருள் விண்ணப்பம் செய்யும் பணியை எளிதாக்கும் வகையில், காசோலை மூலம் பரிவர்த்தனை செய்ய வரும் 15ம் திகதி வரை அவகாசம் வழங்கப்பட்டுள்ளது.

இந்த காலப்பகுதியில், எரிபொருள் விநியோக நடவடிக்கைகளுக்காக போதுமான டேங்கர்களை ஈடுபடுத்த இலங்கை பெற்றோலியகூட்டுத்தாபனம் தீர்மானித்துள்ளதாக பெற்றோலிய கூட்டுத்தாபனம் தெரிவித்துள்ளது.

SR

About Author

You may also like

அரசியல் இலங்கை

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதிய உதவிச்செயற்திட்டம் மார்ச் 20 ஆம் திகதி பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிக்கப்படும்

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதியத்தின் உதவிச்செயற்திட்டத்தை எதிர்வரும் 20 ஆம் திகதி நாணய நிதியப் பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிப்பதற்கு எதிர்பார்த்திருப்பதாக சர்வதேச நாணய நிதியத்தின் நிறைவேற்றுப்பணிப்பாளர் கிறிஸ்டலினா
இலங்கை செய்தி

இலங்கையில் பெண்களுக்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரிப்பு!

இலங்கையில் பெண்களுக்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரிப்பு! இலங்கையில் பெண்களிற்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. பெண் பாராளுமன்ற உறுப்பினர்கள் குழு பெண்களிற்கு எதிரான சைபர்