அரசியல் இலங்கை செய்தி

மாகாணசபைத் தேர்தலை நடத்துமாறு மஹிந்த அணி மீண்டும் அழுத்தம்!

  • February 20, 2026
  • 0 Comments

மாகாணசபைத் தேர்தலை விரைவில் நடத்துமாறு ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன SLPP கட்சி மீண்டும் வலியுறுத்தியுள்ளது. கொழும்பில் இன்று (20) நடைபெற்ற ஊடக சந்திப்பின்போதே அக்கட்சியின் உறுப்பினரான முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் திஸ்ஸ குட்டியாராச்சி issa Kuttiarachchi இந்த வலியுறுத்தலை விடுத்தார். “ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சிக்கு மக்கள் மத்தியில் செல்வாக்கு அதிகரித்துவருகின்றது. எனவே, மாகாணசபைத் தேர்தலை நடத்துமாறு அரசாங்கத்துக்கு சவால் விடுக்கின்றோம். மாகாணசபைத் தேர்தல் நடத்தப்பட்டால் அதில் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சி நிச்சயம் வெற்றிபெறும்.” – […]

இலங்கை செய்தி

வடக்கில் முதலீடு செய்யுமாறு இந்திய முதலீட்டாளர்களுக்கு அழைப்பு!

  • February 20, 2026
  • 0 Comments

இந்திய அரசாங்கத்தின் நிதியுதவியுடன் வடக்கு மாகாணத்தில் மிகப்பெரிய அபிவிருத்தித் திட்டங்கள் முன்னெடுக்கப்படவுள்ள நிலையில், அதற்காக இந்திய அரசாங்கத்துக்கும் மக்களுக்கும் வடக்கு மாகாண மக்கள் சார்பில் ஆளுநர் நா.வேதநாயகன் தமது மனமார்ந்த நன்றிகளைத் தெரிவித்துள்ளார். வடக்கு மாகாணத்துக்கு பயணம் மேற்கொண்டுள்ள இலங்கைக்கான இந்திய உயர்ஸ்தானிகராலயத்தின் பிரதி உயர்ஸ்தானிகர் சத்யஞ்சல் பாண்டே வடக்கு மாகாண ஆளுநரை இன்று வெள்ளிக்கிழமை (20.02.2026) காலை ஆளுநர் செயலகத்தில் சந்தித்துக் கலந்துரையாடினர். யாழ்ப்பாணத்திலுள்ள  இந்தியத் துணைத்தூதரகத்தின் கொன்சியூலர் ஜெனரல் சாய்முரளியும் இச்சந்திப்பில் பங்கேற்றார். இச்சந்திப்பின்போது, […]

விளையாட்டு

சூப்பர் 8 சுற்று நாளை ஆரம்பம்: போட்டிகள் தொடர்பான முழு விபரம்…!

  • February 20, 2026
  • 0 Comments

T20 World Cup உலகக்கிண்ண தொடரில் மிக முக்கிய சுற்றான சூப்பர் 8 super 8 சுற்று நாளை (21) ஆரம்பமாகின்றது. இதற்கமைய சூப்பர் 8 சுற்றில் முதலாவது போட்டியில் பாகிஸ்தான் மற்றும் நியூசிலாந்து அணிகள் மோதுகின்றன. கொழும்பு ஆர்.பிரேமதாச மைதானத்தில் இலங்கை நேரப்படி இரவு 7 மணிக்கு போட்டி ஆரம்பமாகும். 22 ஆம் திகதி இலங்கை மற்றும் இங்கிலாந்து அணிகள் பலப்பரீட்சை நடத்தவுள்ளன. கண்டி பல்லேகல மைதானத்தில் முற்பகல் 3 மணிக்கு இப்போட்டி ஆரம்பமாகும். அன்றைய […]

இலங்கை செய்தி

மாகாணசபைத் தேர்தல் குறித்து ஆராய விஜித ஹேரத் தலைமையில் விசேட குழு நியமனம்!

  • February 20, 2026
  • 0 Comments

மாகாணசபைத் தேர்தலை எந்தமுறைமையின்கீழ் நடத்த வேண்டும் என்பது தொடர்பில் ஆராய்வதற்காக நியமிக்கப்பட்ட விசேட நாடாளுமன்ற தெரிவுக்குழுவுக்குரிய Special Parliamentary Select Committee உறுப்பினர்கள் பெயரிடப்பட்டுள்ளனர். நாடாளுமன்றம் இன்று (20) முற்பகல் 9.30 மணிக்கு சபாநாயகர் தலைமையில் கூடியது. இதன்போதே மேற்படி குழுவுக்குரிய உறுப்பினர்களின் பெயர் விபரங்களை சபாநாயகர் அறிவித்தார். மேற்படி விசேட நாடாளுமன்ற தெரிவுக்குழுவின் தலைவராக அமைச்சர் விஜித ஹேரத் Vijith Herath நியமிக்கப்பட்டுள்ளார். பிரதி அமைச்சர்களான முனீர் முலபர், சுனில் வட்டகல, அருண் ஹேமசந்திரா ஆகியோரும், […]

இலங்கை செய்தி

புலம்பெயர் தமிழர்கள் போர்க்கொடி: நாமலின் பிரிட்டன் உரை இரத்து!

  • February 20, 2026
  • 0 Comments

புலம்பெயர் தமிழர்களின் கடும் எதிர்ப்பு காரணமாக நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ச, பிரிட்டனில் ஆற்றவிருந்த உரை இரத்து செய்யப்பட்டுள்ளது. முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவின் Mahinda Rajapaksa மகனான நாமல் ராஜபக்ச Namal Rajapaksa , ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் SLPP தேசிய அமைப்பாளராக பதவி வகிக்கின்றார். மாத இறுதியில் ஒக்ஸ்போர்ட் யூனியன் Oxford Union மற்றும் கேம்பிரிட்ஜ் யூனியன் Cambridge Union ஆகியவற்றில் உரையாற்றுவதற்கு நாமல் ராஜபக்ச பிரிட்டன் செல்வதற்கு ஏற்பாடு நடைபெற்றுவந்தது. எனினும், மேற்படி […]

உலகம் செய்தி

மத்திய கிழக்கிலுள்ள அமெரிக்க தளங்கள்மீது தாக்குதல்: ஈரான் எச்சரிக்கை!

  • February 20, 2026
  • 0 Comments

அமெரிக்கா போர் தொடுக்கும்பட்சத்தில் மத்திய கிழக்கில் உள்ள அமெரிக்காவின் அனைத்துதளங்கள்மீதும் தாக்குதல் நடத்தப்படும் என ஈரான் எச்சரிக்கை விடுத்துள்ளது. இது தொடர்பில் ஐ.நா. பாதுகாப்பு சபைக்கு ஈரான் கடிதம் அனுப்பியுள்ளது. இரு தரப்பு பேச்சு தோல்வியடைந்தால் இராணுவ நடவடிக்கை எடுக்கப்படும் என்று டிரம்ப் நிர்வாகம் எச்சரித்துள்ளது. அத்துடன், மத்திய கிழக்கில் அமெரிக்கா தனது யுத்த விமானங்களை அதிகளவில் குவித்து வருகின்து. இந்நிலையில் ஈரான் மற்றும் ரஷ்யா இணைந்து கடற்படைப் பயிற்சிகளை மேற்கொள்வது நிலைமையை மேலும் சிக்கலாக்கியுள்ளது. இவ்வாறானதொரு […]

விளையாட்டு

கடைசி லீக் ஆட்டம் இன்று: சாதனை வெற்றியை பதிவு செய்யுமா ஆஸி.?

  • February 20, 2026
  • 0 Comments

T20 World Cup உலகக்கிண்ண தொடரில் லீக் ஆட்டங்கள் இன்றுடன் (20) நிறைவுபெறுகின்றன. கடைசி போட்டியில் பலம்பொருந்திய ஆஸ்திரேலியா Australia அணியும், கத்துக்குட்டி Oman அணியான ஓமானும் களம் காண்கின்றன. கண்டி, பல்லேகல மைதானத்தில் இரவு 7 மணிக்கு இப்போட்டி நடைபெறும். உலகக்கிண்ண தொடரில் இருந்து முதல் சுற்றோடு ஆஸ்திரேலியா வெளியேறியுள்ளது. எனவே, இன்று சாதனை வெற்றியொன்றை நிலைநாட்டி ஆறுதல் பெறுவதற்கு அந்த அணி முயற்சிக்கக்கூடும். சூப்பர் 8 சுற்று நாளை ஆரம்பமாகின்றது. பாகிஸ்தான், நியூசிலாந்து அணிகள் […]

இலங்கை செய்தி

ஜனாதிபதி அநுர, பிரதமர் மோடி இன்று சந்திப்பு!

  • February 20, 2026
  • 0 Comments

ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்கவுக்கும் Anura Kumara Dissanayake , பிரதமர் நரேந்திர மோடிக்கும் Narendra Modi இடையிலான இரு தரப்பு கலந்துரையாடல் இன்று (20) நடைபெறவுள்ளது. புதுடெல்லியில் நடைபெறும் செயற்கை நுண்ணறிவு தாக்க மாநாட்டில் AI Impact Conference பிரதமர் மோடியின் விசேட அழைப்பின் பேரில் ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க பங்கேற்றுள்ளார். இதற்கு இணையாகவே மேற்படி சந்திப்பு நடைபெறவுள்ளது. இதன்போது இரு நாடுகளுக்கும் இடையிலான அரசியல், பொருளார, பாதுகாப்பு மற்றும் கலாசார உறவுகளை மேலும் வலுப்படுத்துவது தொடர்பில் […]

அரசியல் இலங்கை செய்தி

மக்கள் மத்தியில் NPP அரசுக்கான செல்வாக்கு அதிகரிப்பு!

  • February 20, 2026
  • 0 Comments

மாகாணசபைத் தேர்தலின்போது தேசிய மக்கள் சக்தி NPP அரசாங்கம்மீது மக்கள் வைத்துள்ள நம்பிக்கை நிச்சயம் வெளிபடும் என்பது உறுதி என்று பிரதி வெளிவிவகார அமைச்சர் அருண் ஹேமச்சந்திரா Arun Hemachandra தெரிவித்தார். தனியார் தொலைக்காட்சியொன்றுக்கு வழங்கிய நேர்காணலின்போது மாகாணசபைத் தேர்தல் தொடர்பில் எழுப்பட்ட கேள்விக்கு பதிலளிக்கையிலேயே அவர் இவ்வாறு கூறினார். “தேசிய மக்கள் சக்தி அரசாங்கத்துக்கு மக்கள் மத்தியில் உள்ள செல்வாக்கு அதிகரித்துள்ளது. மிகுந்த நம்பிக்கையுடனேயே இதனை நான் அறிவிக்கின்றேன். மாகாணசபைத் தேர்தலின்போது இது தெரியவரும். நிச்சயம் […]

இலங்கை செய்தி

“பாதுகாப்பு அச்சுறுத்தல்களை எதிர்கொள்ள இலங்கைக்கு அமெரிக்கா ஆதரவு”

  • February 19, 2026
  • 0 Comments

அமெரிக்க பசுபிக் கடற்படை கட்டளை (United States Pacific Fleet) தளபதி அட்மிரல் Stephen T. Koehler, பாதுகாப்பு செயலாளர் எயார் வைஸ் மார்ஷல் சம்பத் தூயகொந்தாவை இன்று ( 19) சந்தித்து கலந்துரையாடினார். பாதுகாப்பு அமைச்சில் மேற்படி சந்திப்பு நடைபெற்றது. இதன்போது பசுபிக் பிராந்தியத்தில் உருவாகிவரும் பாதுகாப்பு சூழ்நிலைகள் தொடர்பாக கவனம் செலுத்தப்பட்டது. உருவெடுத்து வரும் கடல்சார் சவால்களை சமாளிப்பதற்காக நெருக்கமான ஒத்துழைப்பு அவசியம் என்பதில் இரு தரப்பினரும் ஒருமித்த கருத்தை வெளியிட்டனர். கடல்சார் துறை […]

error: Content is protected !!