இந்தியா செய்தி

இந்திய கடற்படைக்கு 3 ஆவது அணுசக்தி நீர்மூழ்கி கப்பல்!

  • April 4, 2026
  • 0 Comments

இந்தியாவில் தயாரிக்கப்பட்ட 3ஆவது அணுசக்தி நீர்மூழ்கி கப்பல் அந்நாட்டு கடற்படையில் இணைக்கப்பட்டுள்ளது. இதற்குரிய நிகழ்வு விசாகப்பட்டினத்தில் நேற்று நடைபெற்றது. ஐஎன்எஸ் அரிதாமன் என பெயரிடப்பட்டுள்ள மேற்படி நீர்மூழ்கி கப்பல் 7,000 டன் எடையில் தயாரிக்கப்பட்டுள்ளது. அணு ஆயுதம் மூலம் தாக்குதல் நடத்தும் இந்த நீர்மூழ்கி கப்பலில் 90 சதவீதம் உள்நாட்டு தொழில்நுட்பம் பயன்படுத்தப்பட்டுள்ளது எனக் கூறப்படுகின்றது. தண்ணீருக்குள் மணிக்கு 45 கிலோ மீட்டர் வேகத்தில் இந்த நீர்மூழ்கி கப்பல் பயணிக்கும். இந்திய கடற்படையில் உள்ள ஐஎன்எஸ் அரிஹன்ட் […]

ஆஸ்திரேலியா செய்தி

ஆஸ்திரேலியாவில் வேகமாக பரவும் புதிய வகை COVID – 19!

  • April 4, 2026
  • 0 Comments

“சிக்காடா” Cicada என்றழைக்கப்படும் BA.3.2 வகை புதிய கோவிட்-19 COVID வைரஸ் ஆஸ்திரேலியாவிலும் வேகமாக பரவ ஆரம்பித்துள்ளது. அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய நாடுகளில் வேகமாகப் பரவிவந்த நிலையிலேயே, தற்போது பசுபிக் நாடுகளிலும் வைரஸ் தொற்று ஏற்பட்டுள்ளது. குறிப்பாக ஆஸ்திரேலியாவின் நியூ சவுத் வேல்ஸ் மற்றும் குயின்ஸ்லாந்து ஆகிய மாநிலங்களில் இதன் தாக்கம் அதிகமாக உள்ளது. எனினும், முந்தைய கோவிட் வகைகளை விட புதிய வகை வைரஸ் அதிக ஆபத்தானது இல்லை எனக் கூறப்படுகின்றது. உலக சுகாதார அமைப்பின் […]

உலகம் செய்தி

ஈரான்மீதான ராணுவ நடவடிக்கை: 365 அமெரிக்க படையினர் காயம்!

  • April 4, 2026
  • 0 Comments

ஈரானுடனான போர் காரணமாக இதுவரையில் 365 அமெரிக்க படையினர் காயமடைந்துள்ளனர். பென்டகன் வெளியிட்டுள்ள புதிய அறிக்கையில் இவ்விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது. 247 ராணுவத்தினரும், 63 கடற்படையினரும், 36 விமானப் படையினரும், படையினருமே இவ்வாறு காயமடைந்துள்ளனர். போரில் 13 அமெரிக்க படையினர் பலியாகியுள்ளனர். அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் என்பன இணைந்து ஈரான்மீதான ராணுவ நடவடிக்கையை கடந்த பெப்ரவரி 28 ஆம் திகதி ஆரம்பித்தன. இன்று 36ஆவது நாளாக போர் தொடகின்றது.

உலகம் செய்தி

அமெரிக்க போர் விமானங்கள்மீது தாக்குதல்: ஈரான் மக்கள் கொண்டாட்டம்!

  • April 4, 2026
  • 0 Comments

அமெரிக்காவுக்கு சொந்தமான இரு ராணுவ விமானங்களை ஈரான் ராணுவம் சுட்டு வீழ்த்தியுள்ள நிலையில், அந்நாட்டில் பெரும் எழுச்சி ஏற்பட்டுள்ளது. தென்மேற்கு ஈரான் மற்றும் ஹார்முஸ் நீரிணைப் பகுதிகளில் மேற்படி விமானங்கள் சுட்டு வீழ்த்தப்பட்டுள்ளன எனக் கூறப்படுகின்றது. இது மகத்தான வெற்றி எனக் கருதி ஈரான் மக்கள் தெருக்களில் கொண்டாடிவருகின்றனர். இது அமெரிக்காவிற்கு ஏற்பட்ட பின்னடைவு என ஈரான் மக்கள் கருதுகின்றனர். தங்களின் ராணுவ வலிமையைக் குறைத்து மதிப்பிட்டவர்களுக்கு இது ஒரு தகுந்த பதிலடி என்று ஈரான் அரசு […]

விளையாட்டு

IPL இன்றைய போட்டிகள்….!

  • April 4, 2026
  • 0 Comments

IPL 2026 தொடரில் இன்று (04) இரு ஆட்டங்கள் நடைபெற உள்ளன. இதற்கமைய 8 ஆவது லீக் போட்டியில் டெல்லி கேப்பிட்டல்ஸ் Delhi Capitals , மும்பை இந்தியன்ஸ் Mumbai Indians அணிகள் களம் காண்கின்றன. இந்திய நேரப்படி இப்போட்டி மாலை 3.30 இற்கு ஆரம்பமாகும். 9 ஆவது லீக் போட்டியில் குஜராத் டைட்டன்ஸ் Gujarat Titans , ராஜஸ்தான் ராயல்ஸ் Rajasthan Royals அணிகள் மோதுகின்றன. அகமதாபாத்தில் இன்று இரவு 7.30 மணிக்கு இப்போட்டி ஆரம்பமாகும். […]

உலகம் கல்வி

குவைத்தின் பாதுகாப்புக்காக களமிறங்கும் பிரிட்டன்!

  • April 3, 2026
  • 0 Comments

குவைத்தின் Kuwait எண்ணெய் சுத்திகரிப்பு நிலையம்மீது ட்ரோன் தாக்குதல் நடத்தப்பட்டுள்ள நிலையில் அந்நாட்டுக்குரிய பாதுகாப்பு உதவியை வழங்க பிரிட்டன் UK பிரதமர் Keir Starmer முன்வந்துள்ளார் என தெரியவருகின்றது. இதற்கமைய பிரிட்டன் வான் பாதுகாப்பு ஏவுகணை அமைப்புகளை Air defence systems குவைத்தில் நிலைநிறுத்துவது குறித்து இரு நாடுகளினதும் தலைவர்கள் ஆலோசனை நடத்தியுள்ளனர் என சர்வதேச ஊடகமொன்று செய்தி வெளியிட்டுள்ளது. மேற்படி பாதுகாப்பு ஏற்பாட்டுக்குரிய முன்மொழிவானது மத்திய கிழக்கில் நிலவும் பதற்றத்தை தணிக்க உதவும் என்பதுடன், அங்குள்ள […]

உலகம் செய்தி

ட்ரம்பின் மிரட்டல் போர்க்குற்றம்: ஈரான் ஜனாதிபதி பதிலடி!

  • April 3, 2026
  • 0 Comments

ஈரானை கற்காலத்திற்கே கொண்டுசெல்வோம் என்ற அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்பின் Donald Trump கூற்றுக்கு ஈரான் ஜனாதிபதி Masoud Pezeshkian கடும் கண்டனம் வெளியிட்டுள்ளார். ட்ரம்பின் இந்த மிரட்டல் பாரிய போர்க்குற்றத்தைச் செய்வதற்கான நோக்கத்தை வெளிப்படுத்துகின்றது எனவும் அவர் தனது எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளார். “இது தொடர்பில் சட்ட நிபுணரான பின்லாந்து ஜனாதிபதியுடன் கலந்துரையாடினேன். குற்றவாளிகளின் செயல்களுக்கு எதிராக மௌனம் காப்பவர்கள் வரலாற்றில் பெரும் விலையை கொடுக்க நேரிடும் என அவர் குறிப்பிட்டார்.” என ஈரான் ஜனாதிபதி […]

உலகம் செய்தி

ஈரானின் தொழில்முறை முடக்கம்: இஸ்ரேல் பிரதமர் சுட்டிக்காட்டு!

  • April 3, 2026
  • 0 Comments

இஸ்ரேல் மற்றும் அமெரிக்காவின் வான்வழித் தாக்குதல்களால் ஈரானின் தொழில்துறை மற்றும் உட்கட்டமைப்புகள் கடுமையாக சேதமடைந்துள்ளன என்று இஸ்ரேல் பிரதமர் Benjamin Netanyahu தெரிவித்துள்ளார். குறிப்பாக ஈரானின் எஃகு steel உற்பத்தித் திறனில் 70 சதவீதம் அழிக்கப்பட்டுள்ளது எனவும் அவர் கூறியுள்ளார். இவ்வாறான தாக்குதல்கள் ஈரானிய புரட்சிகரப் பாதுகாப்புப் படையினரின் நிதி ஆதாரங்களையும் ஆயுத உற்பத்தித் திறனையும் முடக்குவதை நோக்கமாகக் கொண்டுள்ளன என சுட்டிக்காட்டியுள்ளார். ராணுவ நோக்கங்களுக்காகப் பயன்படுத்தப்படாத எஃகு ஆலைகள் போன்ற பொது மக்களுடன் தொடர்புடைய நிறுவனங்களை […]

இந்தியா செய்தி தமிழ்நாடு

பா.ஜ.க. வேட்பாளர் பட்டியலில் அண்ணாமலைக்கு ‘வெட்டு’!

  • April 3, 2026
  • 0 Comments

தமிழக சட்டப்பேரவை தேர்தலுக்கான பா.ஜ.கவின் BJP வேட்பாளர் பட்டியல் வெளியாகியுள்ள நிலையில், அண்ணாமலைக்கு இடமளிக்கப்படாமை தொடர்பில் பலகோணங்களில் கருத்துகள் முன்வைக்கப்பட்டுவருகின்றன. பெரும்பாலானோர் கணித்தபடியே வேட்பாளர் பட்டியல் அமைந்திருந்தாலும், எவரும் எதிர்பார்க்காத வகையில் அண்ணாமலைக்கு ‘வெட்டு’ விழுந்துள்ளது பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. தமிழக தேர்தலுக்கான தொகுதி மற்றும் வேட்பாளர் தேர்வில் இம்முறை நயினார் நாகேந்திரன், எல்.முருகனின் கையே ஓங்கியிருந்தது. இதனால், அவர்கள் அண்ணாமலைக்கு சாதகமான தொகுதிகளை கேட்டுப் பெறாமல் இருந்துவிட்டனர் என்று அவரின் ஆதரவாளர்கள் கடும் விமர்சனங்களை முன்வைத்துவருகின்றனர். […]

உலகம் செய்தி

ஈரானின் ராணுவ வலிமை அழியவில்லை: அமெரிக்க உளவுத்துறை எச்சரிக்கை!

  • April 3, 2026
  • 0 Comments

ஈரான்மீது அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் ஆகிய நாடுகள் தொடுத்துவரும் கூட்டு தாக்குதல்களில் அந்நாட்டின் ராணுவ வலிமையை இன்னும் முழுமையாக அழிக்கவில்லை என்று அமெரிக்க உளவுத்துறை தெரிவித்துள்ளது. இது தொடர்பில் உரிய தரப்புகளுக்கு உளவுத்துறை அறிக்கையிட்டுள்ளது என சர்வதேச ஊடகமொன்று செய்தி வெளியிட்டுள்ளது. ஈரானிடம் இன்னும் பாதிக்கும் மேற்பட்ட ஏவுகணை ஏவுதளங்கள் மற்றும் ஆயிரக்கணக்கான ஆளில்லா விமானங்கள் எஞ்சியிருப்பதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. ஈரானின் ஆயுதக் கிடங்குகள் பெருமளவு சிதைக்கப்பட்டுவிட்டதாக ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் கூறிய கருத்திற்கு மாறாக உளவுத் தகவல்கள் […]

error: Content is protected !!