ஐரோப்பா

நேட்டோ நாட்டை குறிவைக்கும் ரஷ்யா : பிரித்தானியாவின் பாதுகாப்பு உத்தி என்ன?

ரஷ்யாவிடம் இருந்து வரும் அச்சுறுத்தல்களை வெளிப்படுத்திய பிரித்தானிய பிரதமர் கெய்ர் ஸ்டாமர் நாட்டின் பாதுகாப்பை பலப்படுத்த வேண்டியதன் அவசியத்தை எடுத்துரைத்தார்.

ரஷ்யா நான்கு ஆண்டுகளுக்குள் நேட்டோ நாடொன்றின் மீது தாக்குதல் நடத்தக்கூடும் என்ற உளவுத்துறையினரின் கணிப்பையும் அவர் மேற்கோள் காட்டியுள்ளார்.

அடுத்த மாதம் நடைபெறவிருக்கும் நேட்டோ உச்சி மாநாட்டிற்கு முன்பு, நீண்டகாலமாகத் தாமதமாகி வரும் பாதுகாப்பு முதலீட்டுத் திட்டத்தைத் தனது அரசாங்கம் வெளியிடும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

தென்மேற்கு இங்கிலாந்தில் உள்ள ஒரு ட்ரோன் தயாரிப்பாளரைச் சந்தித்து கருத்து வெளியிட்டபோதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

இதன்போது மேலும் கருத்து வெளியிட்ட அவர், “2030-ஆம் ஆண்டிலேயே ரஷ்யா நேட்டோ மீது தாக்குதல் நடத்தக்கூடும் என்பது எங்களின் உளவுத்துறை மதிப்பீடு மற்றும் நேட்டோவில் உள்ள பிற நாடுகளின் மதிப்பீடு ஆகும் எனக் குறிப்பிட்டார்.

டுத்த ஆண்டு முதல் பாதுகாப்புச் செலவினங்களை மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 2.5% ஆக உயர்த்துவதாகவும், அடுத்த நாடாளுமன்றத்தில் அதை 3% ஆக அதிகரிப்பதாகவும் உறுதியளித்துள்ளார்.

இதேவேளை பிரிட்டனின் பாதுகாப்புத் திறன்கள் குறித்த ஆய்வைத் தொடர்ந்து உருவாக்கப்பட்ட 10 ஆண்டு கால பாதுகாப்பு முதலீட்டுத் திட்டம், கடந்த ஆண்டு இறுதியில் வெளியிடப்படவிருந்தது, ஆனால் அது இன்னும் தயாரிக்கப்படவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.

 

VD

About Author

You may also like

ஐரோப்பா செய்தி

சாலையோர கடையில் தேநீர் – சாதாரண நபராக மாறிய ஜெர்மனி சான்ஸ்லர்

இந்தியாவுக்கு விஜயம் செய்துள்ள ஜெர்மனி சான்ஸ்லர் ஓலப் ஸ்கோல்ஸ் டில்லியில் உள்ள சாலையோர தேநீர்கடை ஒன்றில் தேநீர் அருந்திய புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. அரசு
ஐரோப்பா செய்தி

ஜெர்மனியில் விசா உள்ளிட்ட ஒட்டுமொத்த சட்டதிட்டத்திலும் மாற்றம்

ஜெர்மனியில் விசா வழங்கும் முறையை மட்டும் அல்லாமல் ஒட்டுமொத்த சட்டதிட்டத்தையும் நவீனப்படுத்த உத்தேசித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. ஜெர்மனி சான்ஸ்லர் இதனை தெரிவித்துள்ளார். ஐரோப்பாவிலேயே மிகப்பெரிய பொருளாதார நாடாக இருக்கும்