இலங்கை பாராளுமன்றத்தின் புதிய சார்ஜென்ட் நியமனம்
இலங்கை நாடாளுமன்றத்தின் 6ஆவது சேர்ஜண்டாக கடமையாற்றிய நரேந்திர பெர்னாண்டோ ஓய்வுபெற்றதையடுத்து, 7ஆவது சேர்ஜண்டாக திரு.குஷான் சம்பத் ஜயரத்ன கடமைகளைப் பொறுப்பேற்றுள்ளார்.
ஓய்வுபெற்ற சார்ஜென்ட் நரேந்திர பெர்னாண்டோ, பாராளுமன்ற அறைக்கு செல்லும் வெள்ளிக் கதவுக்கு அருகில் புதிய சார்ஜென்ட் குஷான் சம்பத் ஜயரத்னவிடம் கதாயுதத்தையும், வாளையும் கையளித்தார்.
திரு. ஜெயரத்ன அவர்கள் 1994 முதல் 2007 வரை இலங்கை கடற்படையில் பணியாற்றியுள்ளார்.
குறிப்பாக, கடமையின் போது நீண்ட காலமாக Fast Attack Craft Flotilla உடன் இணைந்த நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ளார்.
பின்னர் 2007 ஆம் ஆண்டு இலங்கை பாராளுமன்றத்தில் உதவி சேர்ஜண்டாக சேவையில் இணைந்து கொண்ட அவர் பின்னர் 2018 ஆம் ஆண்டு பிரதி சார்ஜென்ட் பதவிக்கு உயர்த்தப்பட்டதாக அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
அதன்படி, அவர் 30 ஜனவரி 2024 வரை துணை சார்ஜென்ட்-அட்-அம்ஸ் என்ற பதவியில் பணியாற்றினார்.