இலங்கை செய்தி

யாழில் மோட்டார் சைக்கிள் திருட்டு அதிகரிப்பு

யாழ்ப்பாண நகர் பகுதியில் அண்மைக்காலமாக மோட்டார் சைக்கிள் திருட்டுக்கள் அதிகரித்து உள்ளதாகவும் , அது தொடர்பில் மக்கள் விழிப்பாக இருக்குமாறும் காவல்துறையினர் அறிவித்துள்ளனர்.

அண்மைய நாட்களில் பல முறைப்பாடுகள் காவல் நிலையங்களுக்கு கிடைக்க பெற்றுள்ளதாகவும் காவல்துறையினர் தெரிவித்தனர்.

வீடுகளுக்கு முன்பாக , கடைகளுக்கு முன்பாக தமது மோட்டார் சைக்கிள்களை நிறுத்தி விட்டு , ஒரு சில நிமிடத்தில் திரும்பி வந்திடுவோம் எனும் நோக்கில் , மோட்டார் சைக்கிள் திறப்புக்களை எடுக்காமலும், மோட்டார் சைக்கிள்களை இயங்கு நிலையில் விட்டும் சிலர் செல்கின்ற சமயங்களை அவதானித்து , அந்த மோட்டார் சைக்கிள்கள் திருடப்பட்டுள்ளன.

திருடப்படும் மோட்டார் சைக்கிள்கள் அன்றைய தினம் மாலை அல்லது மறுநாள் ஆள்நடமாட்டம் அற்ற பகுதிகளில் கைவிடப்பட்ட நிலைகளில் காவல்துறையினரினால் மீட்கப்படுகின்றன.

எனவே மோட்டார் சைக்கிளை நிறுத்தி விட்டு செல்வோர் அதனை பூட்டி பாதுகாப்பாக நிறுத்தி செல்லுமாறு காவல்துறையினர் அறிவித்துள்ளனர்.
அத்துடன் திருடப்படும் மோட்டார் சைக்கிள்களை கொண்டு ஏதேனும் குற்ற செயல்களில் ஈடுபடுகின்றனரா?

இத்தகைய மோட்டார் சைக்கிள் திருட்டில் கும்பலாக ஈடுபடுகின்றனரா ? அல்லது ஓரிருவர் மாத்திரம் ஈடுபடுகின்றனரா என காவல்துறையினர் விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.

(Visited 11 times, 1 visits today)
Avatar

Jeevan

About Author

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

அரசியல் இலங்கை

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதிய உதவிச்செயற்திட்டம் மார்ச் 20 ஆம் திகதி பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிக்கப்படும்

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதியத்தின் உதவிச்செயற்திட்டத்தை எதிர்வரும் 20 ஆம் திகதி நாணய நிதியப் பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிப்பதற்கு எதிர்பார்த்திருப்பதாக சர்வதேச நாணய நிதியத்தின் நிறைவேற்றுப்பணிப்பாளர் கிறிஸ்டலினா
செய்தி

பாணின் விலை குறைப்பு!

450 கிராம் பாண் ஒன்றின் விலையை 10 ரூபாவினால் குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி   இன்று (08) நள்ளிரவு முதல் இந்த விலை அமுலுக்குவரும் என அகில இலங்கை

You cannot copy content of this page

Skip to content