இந்த ஆண்டின் வெப்பமான மாதமாக ஜுலை மாதம் தெரிவு!
இந்த ஆண்டு ஜூலை மாதம் உலகிலேயே அதிக வெப்பமான மாதமாக இருக்கும் என விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.
உலகம் முழுவதும் வெப்ப அலைகளின் தாக்கம் காரணமாக, வெப்பநிலை வரலாறு காணாத அளவுக்கு உயர்ந்துள்ளது.
கடந்த 120,000 ஆண்டுகளில் ஜூலை மாதம் மிகவும் வெப்பமான மாதமாக இருக்கலாம் என்று சில விஞ்ஞானிகள் சுட்டிக்காட்டுகின்றனர். அதேபோல் கடந்த 2019-ம் ஆண்டுதான் அதிக வெப்பமான ஆண்டாக இருந்தது.
கோப்பர்நிக்கஸ் காலநிலை மாற்ற சேவையின்படி, உலகின் மிக வெப்பமான நாளாக ஜூலை 6 என்று பெயரிடப்பட்டுள்ளது.
1940 ஆம் ஆண்டில், தினசரி உலகளாவிய வளிமண்டல வெப்பநிலை 13 டிகிரி செல்சியஸ் ஆக இருந்தது, இது 17 டிகிரி செல்சியஸ் மதிப்பை எட்டியதாகத் தெரிவிக்கப்படுகிறது.
(Visited 12 times, 1 visits today)





