ஐரோப்பா

தந்தை கண் முன்னே ரஷ்ய இளைஞரை கொன்ற சுறா பிடிபட்டது

  • June 9, 2023
  • 0 Comments

சுற்றுலா சென்றிருந்த ரஷ்ய இளைஞர் ஒருவரை அவரது தந்தையின் கண் முன்னே கபளீகரம் செய்த சுறா மீனை அதிகாரிகள் பிடித்துள்ளார்கள். ரஷ்யாவிலிருந்தால் உக்ரைனுடன் போருக்குச் செல்ல நேரிடலாம் என்பதால், அதைத் தவிர்ப்பதற்காகவோ என்னவோ எகிப்துக்கு தன் தந்தையுடன் சுற்றுலா சென்றுள்ளார் விளாடிமிர் (23) என்ற இளைஞர்.ஆனால், Hurghada என்னுமிடத்தில் கடற்கரைக்குச் சென்றிருந்த விளாடிமிர் கடலில் நீந்திக்கொண்டிருக்க, அவரது தந்தை கரையிலிருந்தவண்ணம் அவரைக் கவனித்துக்கொண்டிருந்திருக்கிறார். அப்போது திடீரென அங்கு வந்த ஒரு சுறா, விளாடிமிரைத் தாக்கத் துவங்கியுள்ளது. சுற்றுலாப்பயணிகள் […]

உலகம்

தீவிரமடையும் போர் பதற்றம்! அதிகரிக்கும் டிரோன் தாக்குதல்

உக்ரைன் ரஷ்யா போரில் ட்ரோன் தாக்குதல்கள் தற்போது அதிகரித்துள்ளன. சில நாட்களுக்கு முன்பு, ரஷ்யாவின் மாஸ்கோ அருகே அடுக்குமாடி கட்டிடம் ஆளில்லா விமானத்தால் தாக்கப்பட்டது. அ தில் சிலர் காயமடைந்தனர். பதிலுக்கு ரஷ்யாவும் ஆளில்லா விமானத் தாக்குதலை நடத்தியது. இதற்கிடையே மிகப்பெரிய அணையை குண்டு வைத்து தகர்த்ததாக இரு நாடுகளும் பரஸ்பர குற்றச்சாட்டை வைத்துக் கொண்டிருக்கிறது. இன்று ரஷ்யாவின் தென்மேற்கு பகுதியில் உள்ள வோரோனேஜ் நகரில் இரு நாட்டு எல்லையில் அமைந்துள்ள அடுக்குமாடி குடியிருப்பு வளாகம் மீது […]

ஐரோப்பா

ககோவ்கா அணை தகர்ப்பிற்கு ரஷ்யா தான் காரணமா? : ஆதாரத்தை வெளியிட்ட உக்ரைன்!

  • June 9, 2023
  • 0 Comments

ககோவ்கா அணை அழிக்கப்பட்டமைக்கு ரஷ்யா தான் காரணம் என்பதை நிரூபிக்கும் வகையில், தொலைப்பேசி அழைப்பை இடைமறித்ததாக உக்ரைன் தெரிவித்துள்ளது. ககோவ்கா அணை தகர்ப்பு விவகாரத்தில் உக்ரைன் மற்றும் ரஷ்யா ஆகிய இரு நாடுகளும் பரஸ்பரம் குற்றம்சாட்டி வருகின்ற நிலையில், இந்த தகவல் வெளியாகியுள்ளது. இதன்படி  உக்ரைனின் பாதுகாப்பு சேவை அதன் டெலிகிராம் சேனலில் கூறப்படும் உரையாடலின் ஒன்றரை நிமிட ஆடியோ கிளிப்பை வெளியிட்டது. அதில், ரஷ்ய ராணுவ அதிகாரி ஒருவர், பேரழிவின் பின்னணியில் தங்கள் நாசவேலை குழு […]

வட அமெரிக்கா

கல்வி சுற்றுலாவுக்கு மாணவர்களை ஏற்றிச் சென்ற பஸ் தீக்கரை

  • June 9, 2023
  • 0 Comments

கனடாவின் பிரிட்டிஷ் கொலம்பிய மாகாணத்தில் பாடசாலை மாணவர்களை கல்வி சுற்றுலா ஏற்றிச் சென்ற பஸ் ஒன்று தீக்கிரையாகி உள்ளது. பஸ்ஸில் பயணம் செய்த ஆரம்ப பாடசாலை மாணவர்கள் எவருக்கும் ஆபத்து கிடையாது என அறிவிக்கப்பட்டுள்ளது.மேற்கு வாங்கூவார் பகுதியிலிருந்து பூங்கா ஒன்றிற்கு பயணித்துக் கொண்டிருந்தபோது பஸ் திடீரென தீ பற்றி கொண்டுள்ளது. பஸ்ஸின் சாரதி, ஆசிரியர்கள் மற்றும் ஏனைய பணியாளர்கள் கூட்டாக இணைந்து மிக வேகமாக பாடசாலை மாணவர்களை பஸ்ஸிலிருந்து வெளியேற்றியதாக தெரிவிக்கப்படுகிறது. தரம் ஆறு மற்றும் ஏழு […]

இலங்கை

கையடக்க தொலைபேசிகளை கொள்ளையிடும் குழுவின் பிரதான சந்தேக நபர் கைது!

யாழ்ப்பாணத்தில் கடந்த சில மாதங்களாக தனியார் பேரூந்துகளில் பயணிக்கும் பெண்கள் மற்றும் வயோதிபர்களின் கையடக்கத் தொலைபேசிகளைக் கொள்ளையிடும் குழுவொன்றின் பிரதான சந்தேகநபர் மாவட்ட குற்றத்தடுப்பு பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார். சந்தேகநபரிடமிருந்து திருடப்பட்ட 9 கையடக்கத் தொலைபேசிகள் மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். அத்துடன், திருடப்பட்ட கையடக்கத் தொலைபேசிகளை கொள்வனவு செய்த நால்வரும் யாழ்.மாவட்ட குற்றத்தடுப்புப் பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளனர். காரைநகர் மற்றும் மானிப்பாய் பகுதிகளுக்கு செல்லும் பயணிகள் பேரூந்துகளில் பயணிக்கும் வயோதிபர்கள் மற்றும் பெண்களின் கைத்தொலைபேசிகளை மிகவும் சூட்சுமமான […]

ஆசியா

பிலிப்பைன்ஸில் மயோன் எரிமலைக்கு அருகில் உள்ள குடியிருப்பாளர்களை வெளியேற்றும் நடவடிக்கை!

  • June 9, 2023
  • 0 Comments

பிலிப்பைன்ஸின் மயோன் எரிமலைக்கு அருகில் உள்ள குடியிருப்பாளர்களை வலுக்கட்டாயமாக வெளியேற்றும் நடவடிக்கை ஆரம்பிக்கப்பட்டுள்ளது. இதன்படி  மயோன் பள்ளத்தின் 6-கிலோமீட்டர் (3.7-மைல்) சுற்றளவில் உள்ள பகுதி ஆபத்தான பகுதியாக அடையாளப்படுத்தப்பட்டுள்ளது. இருப்பினும் இந்த பகுதயில் பல ஏழை கிராமவாசிகள் பல ஆண்டுகளாக வசித்து வருகின்றனர். இந்நிலையிலேயே அவர்களை வலுக்கட்டாயமாக வெளியேற்றும் நடவடிக்கை ஆரம்பிக்கப்பட்டுள்ளது. நிரந்தர ஆபத்து வலயத்திலிருந்து குடியிருப்பாளர்களை வெளியேற்றும் நடவடிக்கை நடைபெற்று வருவதாகவும், நெருக்கடி முடியும் வரை இடம்பெயர்ந்தவர்களுக்கு உதவி வழங்குவதாக உறுதியளித்ததாகவும் ஜனாதிபதி பெர்டினாண்ட் மார்கோஸ் […]

இந்தியா

விரைவில் நரேந்திர மோடி அமெரிக்கா பயணம்!

இந்திய பிரதமர் நரேந்திர மோடி எதிர்வரும் 21ம் திகதி அமெரிக்கா செல்லவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடனின் அழைப்பின் பேரில் அவர் அங்கு செல்லவுள்ளார். அமெரிக்கா செல்லும் இந்திய பிரதமர் நரேந்திர மோடி, வரும் 22ம் திகதி அமெரிக்க நாடாளுமன்ற கூட்டத்தில் பங்கேற்று உரை நிகழ்த்தவுள்ளார். மேலும், வரும் 23ம் திக்தி அமெரிக்க வாழ் இந்தியர்களிடையே மோடி உரையாற்றுகிறார். நாட்டின் வளர்ச்சிப் பாதையில் வெளிநாடு வாழ் இந்தியர்களின் பங்கு என்ற தலைப்பில் உரையாற்றவுள்ளார் என்பது […]

ஐரோப்பா

ககோவ்கா அணை உடைப்பு : நீரில் மூழ்கிய முவ்வாயிரத்திற்கும் மேற்பட்ட வீடுகள்!

  • June 9, 2023
  • 0 Comments

ககோவ்கா அணை உடைப்பினால் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கு 20cm குறைந்தாலும், பெருமளவிலான குடியிருப்புகள் நீரில் மூழ்கியிருப்பதாக கூறப்படுகிறது. இன்றைய நிலைவரப்படி,   32 நகரங்களில் உள்ள 3,624 வீடுகள் நீருக்கடியில் அல்லது அதிக வெள்ளத்தில் மூழ்கியுள்ளதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

ஐரோப்பா

இங்கிலாந்து-அமெரிக்க அணுசக்தி ஒப்பந்தத்தால் ரஷ்யாவிற்கு ஏற்பட்டுள்ள நெருக்கடி!

  • June 9, 2023
  • 0 Comments

இங்கிலாந்து-அமெரிக்க அணுசக்தி ஒப்பந்தம் குறித்து கிரெம்ளின் ‘கவலை’ கொண்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அணுசக்தியில் கூட்டாண்மையை விரிவுப்படுத்துவது பற்றி பிரிட்டன் மற்றும் அமெரிக்கா இடையேயான உறவு, ரஷ்யாவின் அணுசக்தி தொழில்துறை பற்றிய கவலைகளை எழுப்பியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. லண்டனும் வாஷிங்டனும் வியாழன் அன்று ஒரு புதிய “அட்லாண்டிக் பிரகடனத்தை” அறிவித்தன. அதில் ரஷ்ய எரிபொருளை நம்பியிருப்பதைக் குறைக்க சிவில் அணுசக்தியை உருவாக்குவது உட்பட பல பகுதிகளில் ஒத்துழைக்க ஒப்புக்கொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

வட அமெரிக்கா

ரகசிய ஆவணங்கள் தொடர்பில் டிரம்ப் மீது பதியப்பட்டுள்ள 7 குற்றச்சாட்டுகள்

  • June 9, 2023
  • 0 Comments

கடந்த 2016ம் ஆண்டு நடைபெற்ற அமெரிக்க ஜனாதிபதி தேர்தலில் டொனால்டு டிரம்ப் வெற்றி பெற்றார். இதனால் 4 ஆண்டுகள் டிரம்ப் அமெரிக்காவின் ஜனாதிபதியாக இருந்தார். பின்னர் 2020ம் ஆண்டு தேர்தலில் ஜோ பைடன் ஜனாதிபதியாக தேர்ந்தெடுக்கப்பட்டார். இதன் காரணமாக தோல்வி பெற்ற டிரம்ப் வெள்ளை மாளிகையை விட்டு வெளியேறினார். அப்போது டொனால்ட் டிரம்ப் தன்னுடன் ரகசிய ஆவணங்களை எடுத்துச் சென்றதாகக் குற்றச்சாட்டு எழுந்தது. அமெரிக்கச் சட்டத்தின்படி ஜனாதிபதிகள் தங்களின் பதவிக் காலம் முடிந்ததும் கையாண்ட அனைத்து ஆவணங்களையும் […]

error: Content is protected !!