இலங்கை செய்தி

WhatsApp காதலால் விபரீதம் – சிறுமிக்கு நேர்ந்த கதி

  • April 12, 2023
  • 0 Comments

கண்டியில் WhatsApp மூலம் ஏற்பட்ட நட்பினால் 15 வயது சிறுமி பாலியல் துஷ்பிரயோகத்திற்கு உள்ளாக்கப்பட்டுள்ளார். இந்த சம்பத்துடன் தொடர்புடைய  சந்தேக நபர் ஒருவர் தேடப்பட்டு வருகிறார். இது பற்றி மேலும் தெரிய வருவதாவது, கண்டிப் பிரதேசத்தைச் சேர்ந்த 15 வயது சிறுமி ஒருவருடன் அம்பலாந்தோட்டைப் பிரதேசத்தைச் சேர்ந்த ஒருவருக்கும் வட்ஸ் அப் மூலம் காதல் தொடர்பு ஏற்பட்டுள்ளது.  சிறிது காலம் மேற்படி வட்ஸ் அப் காதல் நீடித்துள்ளது. அண்மையில் மேற்படி சிறுமியை நேரடியாக சந்திக்க வந்த அம்பலாந்தோட்டை […]

இலங்கை செய்தி

இலங்கையில் கார் இறக்குமதி தொடர்பில் வெளியான தகவல்

  • April 12, 2023
  • 0 Comments

இலங்கையில் அனுமதி கிடைக்கும் போதெல்லாம் மின்சார கார்களை மட்டுமே இலங்கைக்கு இறக்குமதி செய்ய அரசாங்கம் தீர்மானித்துள்ளது. வெளிநாட்டு வேலைவாய்ப்பு அமைச்சர் மனுஷ நாணயக்கார இதனை தெரிவித்துள்ளார். கொழும்பில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்து கொண்ட அமைச்சர் இதனைத் தெரிவித்துள்ளார். “வெளிநாட்டுத் தொழிலாளர்களை ஊக்குவிக்கும் வகையில், அவர்கள் இந்த நாட்டிற்கு அனுப்பும் அந்நியச் செலாவணித் தொகைக்கு ஏற்ப மின்சார கார்களை இறக்குமதி செய்யும் வசதியை ஏற்படுத்த அரசு முடிவு செய்தது. இதற்கு அமைச்சரவை முழுமையாக ஆதரவளித்தது. இதில் ஹைபிரிட் கார்களுடன் […]

இலங்கை செய்தி

கொழும்பில் புகைப்படத்தால் விபரீதம் – மனைவியை கொலை செய்ய முயற்சித்த கணவர்

  • April 12, 2023
  • 0 Comments

பாணந்துறையில் நிர்வாண படத்தை கள்ளக்காதலனுக்கு அனுப்பினார் எனக் கூறப்படும் மனைவியை கொலை செய்ய முயற்சித்த கணவர் கைது செய்யப்பட்டுள்ளார். இரண்டரை அடி நீளமான வாளுடன் பாணந்துறை தெற்கு பொலிஸார் அவரை கைது செய்துள்ளனர். சந்தேக நபரின் மனைவி, தான் கள்ளத் தொடர்பு வைத்திருந்த நபருக்கு அவரின் நிர்வாண புகைப்படத்தை வட்ஸ் அப் மூலம் அனுப்பியுள்ளதை தெரிந்து கொண்ட பின்னர் , இருவருக்குமிடையில் பிரச்சினை ஏற்பட்டுள்ளது. இதனால் ஆத்திரமுற்றிருந்த கணவர் நேற்று முன்தினம் மாலை மனைவியின் வீட்டுக்கு சென்று […]

செய்தி

அரசுத் துறை பயன்பாட்டிற்கு மட்டுமே மின்சார வாகனங்கள் இறக்குமதி செய்யப்பட்டன – மனுஷ நாணயக்கார

  • April 12, 2023
  • 0 Comments

ரச துறையின் பயன்பாட்டிற்கு மாத்திரம் மின்சார வாகனங்களை இறக்குமதி செய்வதற்கு அரசாங்கம் ஏற்கனவே தீர்மானித்துள்ளதாக தொழிலாளர் மற்றும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு அமைச்சர் மனுஷ நாணயக்கார தெரிவித்துள்ளார். ஓவர்லேண்ட் ஆட்டோமொபைல் இன்ஸ்டிடியூட் ஏற்பாடு செய்திருந்த நிகழ்வில் பங்கேற்ற அவர், 2023 ஆம் ஆண்டை இலக்காகக் கொண்டு நாட்டை மின்சார வாகனங்களை மட்டுமே பயன்படுத்துவதற்கு அரசாங்கம் எந்த கொள்கை முடிவும் எடுக்கவில்லை என்று கூறினார். வெளிநாட்டுத் தொழிலாளர்கள் நாட்டிற்கு டாலர்களை அனுப்பவில்லை, ஏனெனில் அவர்களுக்கு அரசாங்கத்தின் மீது நம்பிக்கை இல்லை […]

இலங்கை செய்தி

இறக்குமதி செய்யப்பட்ட முட்டைகள் உரிமையாளர்களுக்கு விநியோகிக்கும் பணி ஆரம்பம்

  • April 12, 2023
  • 0 Comments

இறக்குமதி செய்யப்பட்ட முட்டைகளை பேக்கரி உரிமையாளர்களுக்கு விநியோகிக்கும் பணி ஆரம்பிக்கப்பட்டதாக அரச வர்த்தக கூட்டுத்தாபனம் (STC) தெரிவித்துள்ளது. இந்தியாவில் இருந்து இறக்குமதி செய்யப்படும் முட்டைகள் பேக்கரி உரிமையாளர்களுக்கு ரூ.1 வீதம் வழங்கப்படும் என எஸ்டிசியின் பேச்சாளர் தெரிவித்தார். முட்டை விலை கடுமையாக உயர்ந்துள்ளதால், நாட்டில் முட்டை தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. அரசாங்கம் அறிவித்துள்ள முட்டைகளுக்கு சில விற்பனையாளர்கள் கட்டுப்பாட்டு விலைக்கு மேல் முட்டைகளை விற்பனை செய்வதாக தெரிவிக்கப்பட்டதையடுத்து, நுகர்வோர் விவகார அதிகார சபையும் (CAA) சோதனைகளை ஆரம்பித்துள்ளது. சிஏஏ […]

இலங்கை செய்தி

மார்ச்ச மாதத்தில் பெருமளவு சுற்றுலா பயணிகள் வருகை

  • April 12, 2023
  • 0 Comments

மார்ச் மாதத்தின், முதல் 26 நாட்களில்  இலங்கைக்கு ஒரு இலட்சம் சுற்றுலா பயணிகள் சுற்றுலாவில் ஈடுபட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. இதற்கமைய இந்த ஆண்டின் முதல் காலாண்டில்  3 இலட்சம் சுற்றுலாப் பயணிகள் நாட்டுக்கு வருகை தந்துள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன. ஒரு இலட்சத்து 5 ஆயிரத்து 714 சுற்றுலாப் பயணிகள் நாட்டுக்கு வருகை தந்துள்ளனர். அவர்களில் ரஷ்யாவிலிருந்து 22 ஆயிரத்து 38 பேரும், இந்தியாவிலிருந்து 15 ஆயிரத்து 695 பேரும்,  பிரித்தானியாவில் இருந்து 8 ஆயிரத்து 555 பேரும்,  ஜேர்மனியில் […]

இலங்கை செய்தி

எதிர்காலத்தில் ரணில், ராஜபக்ஷக்கள் இணைந்து செயற்படலாம் – எஸ்.பி. திஸாநாயக்க!

  • April 12, 2023
  • 0 Comments

ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவை ஜனாதிபதியாக்க பொதுஜன பெரமுன எடுத்த தீர்மானம் சிறந்தது என்பதை நாட்டு மக்கள் ஏற்றுக்கொண்டுள்ளார்கள். எதிர்கால அரசியலில் ரணில்,  ராஜபக்ஷர்கள் ஒன்றிணைந்து செயற்படலாம் என பாராளுமன்ற உறுப்பினர் எஸ்.பி.திஸாநாயக்க தெரிவித்தார். பத்தரமுல்ல பகுதியில் புதன்கிழமை (29) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துக் கொண்டு கருத்துரைக்கையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார். ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுன தலைமையிலான எமது அரசாங்கம் எடுத்த ஒருசில தவறான தீர்மானங்கள் பொருளாதார  பாதிப்பை தீவிரப்படுத்தியது என்பதை ஏற்றுக்கொள்ள வேண்டும். பொருளாதார நெருக்கடி […]

இலங்கை செய்தி

நெடுந்தீவு வெடியரசன் கோட்டைக்கு அருகில் போராட்டம்!

  • April 12, 2023
  • 0 Comments

நெடுந்தீவு வெடியரசன் கோட்டைக்கு அருகில் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியினர் இன்று(29) காலை கவனயீர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர் நாடாளுமன்ற உறுப்பினர் செல்வராஜா கஜேந்திரன் உட்பட அக்கட்சியின் அமைப்பாளர்கள் ஆதரவாளர்கள் என பலரும் குறித்த  போராட்டத்தில் கலந்துகொண்டனர். போராட்டத்தையடுத்து அப்பகுதியில் பொலிஸாரும் புலனாய்வாளர்களும் கண்காணிப்பு நடவடிக்கையில் ஈடுபட்டமை குறிப்பிடத்தக்கது. நெடுந்தீவு வெடியரசன் கோட்டையை பௌத்த விகாரையுடன் தொடர்புபடுத்தி கடற்படை அமைத்த பதாகையையடுத்து குழப்பம் ஏற்பட்டிருந்தது. இந்நிலையில் தொல்லியல் திணைக்களம், கடற்படை ஆகியவற்றின் செயற்பாட்டை கண்டித்தும் வெடியரசன் கோட்டை தமிழரின் […]

இலங்கை செய்தி

தொழிநுட்பத்தின் அதிநவீன முன்னேற்றங்களை மேம்படுத்துவதன் மூலம் எதிர்காலத்திற்கு தயாராகுமாறும் ஜனாதிபதி தெரிவிப்

  • April 12, 2023
  • 0 Comments

IMF உதவியுடன் நான்கு வருடங்களில் பொருளாதாரத்தை ஸ்திரப்படுத்திய பின்னர் பழைய முறையை பின்பற்றுவதா அல்லது  புதிய முறையின் ஊடாக வளர்ந்து வரும் உலகத்துடன் முன்னோக்கிச்  செல்வதா என்பதை தீர்மானிக்க வேண்டும் என கொழும்பு ஆனந்த கல்லூரியில் இன்று இடம்பெற்ற பரிசளிப்பு விழாவில் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்தார் 2048 ஆம் ஆண்டாகும் போது  நாட்டைப் பொறுப்பேற்கும் வகையில் நவீன தொழில்நுட்பத்தின் அனைத்து அம்சங்களையும்   நம் நாட்டு மாணவர்கள் பெற வேண்டும் எனவும்  ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க  தெரிவித்தார். […]

இலங்கை செய்தி

டொலருக்கு நிகரான ரூபாவின் பெறுமதி வீழ்ச்சி!

  • April 12, 2023
  • 0 Comments

சம்பத் வங்கியின் கூற்றுப்படி நேற்றுடன் ஒப்பிடுகையில் அமெரிக்க டாலருக்கு நிகரான ரூபாயின் மதிப்பு வீழ்ச்சியடைந்துள்ளது. கொள்வனவு பெறுமதி ரூ. 318 ஆகவும் விற்பனை பெறுமதி ரூ. 333 அதிகரித்துள்ளது. கொமர்ஷல் வங்கியில்,  அமெரிக்க டாலரின் கொள்வனவு பெறுமதி ரூ. 315 ஆகவும் விற்பனை பெறுமதி ரூ. 332.50 ஆக பதிவாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது. .  

error: Content is protected !!